பதிவு செய்த நாள் :
கருத்துகள் (74)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழகத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க.,விற்கு மாற்றாக, தே.மு.தி.க., பா.ஜ., ம.தி.மு.க., இணைந்த "மாற்று அணியை' உருவாக்க முயற்சி செய்து வருகிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன். காமராஜர் காலத்தில் மாணவர் காங்கிரசில் சேர்ந்து, காமராஜரால் "தமிழருவி' என்று அழைக்கப்பட்டவர். அரசியலில் நேர்மையை வலியுறுத்தி, லஞ்சம், ஊழலுக்கு எதிராக உரத்தக்குரல் எழுப்புவர். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசியவர், இப்போது இந்த ஆட்சியை விமர்சனம் செய்பவர். தமிழகத்தில் பா.ஜ., அல்லாத பிறக்கட்சியினர், மோடி பிரதமராக வருவது குறித்து கருத்து ஏதும் வெளிப்படையாக வெளியிடாத நிலையில், புதுக்கூட்டணி உருவாகி, மோடி பிரதமராக வேண்டும் என்று விரும்புபவர்.

தினமலர் நாளிதழுக்கு இவர் அளித்த சிறப்பு பேட்டி...

"பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அல்ல; காங்கிரஸ் வரக்கூடாது என்பதற்காக தான் மாற்று அணிக்கு முயற்சிக்கிறேன்' என்று கூறியுள்ளீர்களே...
இடதுசாரிகள், மாநிலக்கட்சிகள் இணைந்து வலிமை மிக்க 3 வது அணி அமைத்து, ஆட்சிச்சூழல் அமையும் என்றால் ஆதரவு தருவேன். அப்படி ஒரு ஆட்சியில், தமிழக முதல்வர் ஜெ., பிரதமரானால், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆதரிப்பேன். ஆனால் அதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை. எது எந்த நேரத்தில் சாத்தியமோ, அதை அந்த நேரத்தில் சாத்தியமாக்க வேண்டும். இது தான் அரசியல். ஊழலால் நாட்டையே கொள்ளையடிக்கும், இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்த காங்கிரசிடமிருந்து நாடு விடுபட வேண்டும். அதற்கு மாற்று, மோடி தலைமையில் பா.ஜ., கூட்டணி அரசு அமைய வேண்டும்.

மோடி பிரதமராவது காலத்தின் கட்டாயமா?
காலம், மக்கள் மூலம் காரியம் நடத்தும். வாக்காளர்கள் விதியை எழுதுவார்கள். மோடி மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு, நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் 45 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அந்த இளைஞர் கூட்டம் மாற்றத்தை விரும்புகிறது. அவர்கள் ஊழலுக்கு, ஜாதி, மதத்திற்கு எதிரானவர்கள். மதங்களை வைத்து, மதசார்பின்மை என்று கூறி அரசியல் நடத்துபவர்கள் யார் என்று இளைஞர்களுக்கு

தெரியும். அவர்கள் மோடியைத் தான் தேர்வு செய்வார்கள், ஏனென்றால் மோடி ஊழலற்ற மனிதர். மோடி மூலம் மாற்றம் நிகழவேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

நாட்டிற்கு கோயில்களை விட கழிப்பறைகள் தான் அவசியம் என்கிறாரே மோடி...
இதற்காகவே நான் மோடியை கூடுதலாக ஆதரிப்பேன். இந்த தெளிவுக்காகவே அவருக்கு அதிக மதிப்பெண் தரலாம். ஆன்மிகம் என்பது கோயிலில் சுவாமி கும்பிடுவது மட்டும் அல்ல; சக மனிதர்கள் நலம் தான் ஆன்மிகம் என மோடி உணர்ந்திருக்கிறார்.

நல்ல பேச்சாளர், சிந்தனையாளரான நீங்கள் மோடியின் மேடைப்பேச்சு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மக்களின் நாடி, நரம்பை மின்னல் போல் தாக்கும் சக்தி மேடை பேச்சுக்கு உண்டு. அந்த சக்தி மோடிக்கு இருக்கிறது. அவருடைய மேடைப் பேச்சில் லட்சியம், தெளிவு இருக்கிறது. பிரதமர் வேட்பாளர் என்பதால், தேசிய அரசியலைத்தான் பேசுகிறார். ஒரு இந்துவாக அடையாளம் காட்டி பேசவில்லை. மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டி பேசுகிறார். திருச்சியில்,மோடிக்கு இவ்வளவுக்கூட்டம் எப்படி வந்தது? அவரது பேச்சை கேட்கத்தானே! ஹிட்லர், ஒபாமா, கருணாநிதி பேச்சால் வென்றவர்கள் தானே.

உங்கள் பார்வையில் மோடி அலை வீசுகிறதா?
நிச்சயமாக, இந்தியா முழுக்க வீசுகிறது. கூட்டணி சரவர அமையாமல், தமிழகத்தில் பா.ஜ.,விற்கு ஓரிடம் கூட கிடைக்காமல் இருந்தாலும், மோடி பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. நான் முயற்சிப்பது போல கூட்டணி அமைந்தால், 15 முதல் 20 இடங்கள் வரை, இந்த மாற்று அணிக்கு கிடைக்கும். அ.தி.மு.க.,விற்கு 20 இடங்கள் வரை கிடைக்கும். காங்.,-தி.மு.க., கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைப்பதே அபூர்வம். நாற்பது தொகுதிகளிலும் மூன்றாம் இடம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

இன்று பிரதமர் பதவியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கேலி, கிண்டல் செய்கிறார்கள். மோடி பிரதமரானால், வெளிநாட்டில் இந்திய கவுரவம் காக்கப்படுமா?
"ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்படாத பிரதமரை யாரும் கிண்டல் செய்ய முடியாது. குறைந்த எம்.பி..க்களுடன் கவுரவமாக ஆட்சி

Advertisement

செய்தார் சந்திரசேகர். மன்மோகன் சிங்கை இயக்குபவர் சோனியா. இதுவரை எந்த பிரதமரும், சாவி கொடுத்த பொம்மையாக இருக்கவில்லை. மோடி பிரதமரானால், நாட்டின் கவுரவம் 100 மடங்கு உயரும். இப்போது போல்,"ரிமோட்' மூலம் மோடி இயங்கமாட்டார்.

ஆர்.எஸ்.எஸ்., அவரை இயக்கும் என்று பிரசாரம் செய்யப்படுகிறதே...
"ரிமோட்' கன்ட்ரோலில் இயங்கினால் மரியாதை இழப்பார். மோடி அப்படி இருக்க மாட்டார். குஜராத் ஆட்சி, இதற்கு சாட்சி. பாபர் மசூதி பிரச்னையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக அவர் செயல்பட மாட்டார்.

கூட்டணிக்கு முயற்சிக்கும் நீங்கள் மோடியை சந்தித்தீர்களா?
அவர் பிரதமர் வேட்பாளர். உடனடியாக சந்திக்க, பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த், வைகோவிடம் பேசிஉள்ளேன்.

மோடி- பிரதமர், மாற்று அணி என்பது குறித்து விஜயகாந்தின் கருத்து என்ன?
மோடிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ விஜயகாந்த் என்னிடம் ஏதும் சொல்லவில்லை. ஆனால் மாற்று அணியில், தே.மு.தி.க.,விற்கு அதிக இடம் ஒதுக்கப்படும். இதுவே நீங்கள் அ.தி.மு.க.,-தி.மு.க., கூட்டணியில் சென்றால் குறைந்த இடங்கள் தான் ஒதுக்குவார்கள் என்று அவரிடம் கூறியுள்ளேன். 2016 ல் முதல்வர் கனவில் உள்ள நீங்கள், அந்த கூட்டணியில் குறைந்த இடங்களில் போட்டியிடுவது சாத்தியமா என்றும் கேட்டேன்.

இதே கூட்டணி முயற்சி, சட்டசபை தேர்தலிலும் தொடருமா?
அதை இப்போது சொல்ல முடியாது. விஜயகாந்த், முதல்வராக விரும்பலாம். வைகோ ஆக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என்றாலும் அ.தி.மு.க.,-தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி தான் அடுத்து தமிழகத்தில் அமையும்.

சமீபகாலமாக, வைகோவை முன்னிலைப்படுத்தி நீங்கள் பேசி வருவது ஏன்?
தமிழக அரசியல் தலைவர்களை, 40 ஆண்டுகளாக பார்த்து கழித்துக்கொண்டு வந்தேன். மிஞ்சியது வைகோ. அவரின் தனிமனித வாழ்க்கை தூய்மையானது. பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிரானவர். பதவியை விரும்பாதவருக்கு பதவியை தரலாமே. லோக்சபா தேர்தலில், அவரது தொகுதியில் நாங்கள் பிரசாரம் செய்வோம்.இவ்வாறு பேட்டியளித்தார்.
- ஜி.வி.ரமேஷ்குமார்
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (74)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
08-டிச-201310:52:29 IST Report Abuse
ரத்தினம் தமிழருவி மணியன் கருத்துக்கள் பெரும்பாலான நடு நிலையாளர்களின் கருத்துகளை ஒத்து இருக்கிறன. மேலும் வைகோ போன்று கறை படியாதஅரசியல்வாதிகள் நாட்டுக்கு தேவை.
Rate this:
Share this comment
Cancel
Guna Seelan - Pudukkottai,இந்தியா
11-நவ-201313:12:55 IST Report Abuse
Guna Seelan யோவ் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரை காங்கிரசின் வாழ் பிடித்து இருந்து நல்ல அனுபவிச்சுட்டு இப்போ மோடிக்கு கால் பிடிகிறியா சரியான சந்தர்ப்பவாதி நீ ''தமிழருவி'' இல்லை சரியான ''புல்லுருவி'' Rate this: 197 members 1 members 31 members Share this comment Reply
Rate this:
Share this comment
Cancel
TN Ravichandran - Mayiladuthurai,இந்தியா
06-நவ-201316:09:37 IST Report Abuse
TN Ravichandran நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
31-அக்-201313:03:01 IST Report Abuse
Malick Raja தமிலர்வி மணியன் அவர்களை ச்லருக்கு மட்டுமே தெரியும்.. ஆனால் இவர் என்னமோ ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே பிரதிநிதி போல பேசுவது அறியாமையை,,அறிவின்மையை,முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தி விட்டது.. தமியாருவி மணியனாக மாறிவிட்டார்... இனி கூஜா தூக்க வேண்டும்.. குஜராத்தை நோக்கி வீரநடை போடவும்.. உங்களை யாரும் கேட்கவும்,கவனிக்கவும்,, ஏன் பார்க்கவும் கூட மாட்டார்கள்... அந்த அளவுக்கு தங்களின் தரத்தை ஆக்கி கொண்டீர்கள்..nan
Rate this:
Share this comment
sriram kashyap - kovai,இந்தியா
04-நவ-201317:53:19 IST Report Abuse
sriram kashyapமாலிக் அவர்களே, உங்கள்ளுக்கு அப்படி என்ன மோடி யின் மீது கோபம்.. மோடியை யார் ஆதரித்தாலும் கோப படுகிறீர்கள் ..அவர் அவர் கருத்தை கூற அவர் அவருக்கு உரிமை உண்டு..உங்களுக்கு மோடியை பிடிக்க வில்லை என்றால் அதற்கான் நியாயமான கருத்தக்களை முன் வைத்து வாதாடுங்கள். போலி மதச்சார்பின்மை பேசும் காங் போலே உங்கள் தரத்தை நீங்கள் தாழ்த்தி கொள்ளாதீர்கள் ....
Rate this:
Share this comment
Cancel
labamsivasamy - tamilnadu,இந்தியா
29-அக்-201320:07:57 IST Report Abuse
labamsivasamy ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் பா . ஜ . க . வின் சு.சாமியும் ,சுஸ்மாவும்,அவர் கணவர் சிவராஜும். இவர்களை மீறி மோடி தமிழர்களுக்கு என்ன செய்து விட முடியும் . மன்மோகனும்,சோனியாவும் செய்ததைத் தானே தொடர்வார்கள் ,சு .சாமியை யாராலும் திருத்த முடியாது.திருந்தவும் மாட்டான் .கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையா ?ஜெயலலிதாவால் மட்டுமே விடிவு.
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
25-அக்-201317:53:18 IST Report Abuse
krishna தமிழருவி மணியனின் அரசியல் பாதை முடிவுக்கு வருகிறது
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
22-அக்-201312:22:41 IST Report Abuse
villupuram jeevithan தமிழன் பிரதமராக முடியாது, இப்படியே முடியாது என்றிருந்து விட்டால் எப்படி முடியும்? மோடியும் கூட்டணி கட்சிகள் ஒத்துக் கொண்டால் தான் பிரதமராக முடியும், என்றாலும் அவர் முயற்சிக்க வில்லையா/
Rate this:
Share this comment
Cancel
nallavan - tiruchy,இந்தியா
21-அக்-201321:27:21 IST Report Abuse
nallavan அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்ந்து விசா வழங்க மறுக்கப்பட்ட ஒரு நபர் பிரதமராக வந்தால் இந்தியாவின் மதிப்பு உயருமென்று சொல்கிறாரே எங்கே உயரும்?நாக்பூரிலா?
Rate this:
Share this comment
Alani Adana - hanilton,கனடா
28-அக்-201317:42:06 IST Report Abuse
Alani Adanaசரியான மாங்கா. அமெரிக்கா பிரிட்டன் ......இன்னும் உனக்கு அடிமை புத்தி போகலையா...
Rate this:
Share this comment
Cancel
nallavan - tiruchy,இந்தியா
21-அக்-201320:53:44 IST Report Abuse
nallavan யானைக்கும் அடி சறுக்கும் .
Rate this:
Share this comment
Muthusamy Thiagarajan - Coimbatore,இந்தியா
01-நவ-201312:57:57 IST Report Abuse
Muthusamy Thiagarajanயாரு யானை? என்ன அடி சறுக்கும்?...
Rate this:
Share this comment
Cancel
g. Tharanipathi - chennai,இந்தியா
21-அக்-201316:01:38 IST Report Abuse
 g. Tharanipathi போகாத ஊருக்கு வழி, தமிழ்நாட்டில் காங்கிரசை 1967இல் அகற்றியதால் தமிழ்நாடு படும் அவதியை மக்கள் எண்ணிபார்க்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X