கரூர்: பண்டுதகாரன்புதூர் கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் வரும் 9ம் தேதி, ஒருங்கிணைந்த முறையில் பட்டுப்பூச்சி வளர்ப்புடன் கூடிய வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நடக்கிறது.பயிற்சியில் பட்டு பூச்சி வளர்ப்புடன், வெள்ளாடுகளை இணைத்து வளர்க்கும் முறை, அதற்கேற்ற வீட்டமைப்பு, இனப்பெருக்கம், தீவன பராமரிப்பு, நோய் தடுப்பு முறைகள் மற்றும் பண்ணை பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 9 ம் தேதி காலை 10 மணிக்கு பயிற்சி மையத்துக்கு வரவேண்டும். மேலும், விபரங்களுக்கு 04324-294335 என்ற ஃபோன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை மைய இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் அகிலா தெரிவித்துள்ளார்.