சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேர்ந்தமரம் அருகே ஆலயங்களில் தொடர் திருட்டு

Updated : அக் 07, 2013 | Added : அக் 07, 2013 | கருத்துகள் (3)
Advertisement

சேர்ந்தமரம்:சேர்ந்தமரம் அருகே இந்து, கிறிஸ்தவ கோயில்களில் தொடர் திருட்டு. சேர்ந்தமரம் அருகேயுள்ள தன்னூத்து கிராமத்தில் வனமூர்த்தியம்மன் கோயில் அருகே ஊற்றடிமாடசாமி கோயிலும் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயில் பூசாரி குருசாமி பூஜையை முடித்துவிட்டு கோயிலை பூட்டி சென்றார். வழக்கம் போல் நேற்று காலை வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த சுமார் அரைபவுன் கொண்ட தங்க தாலி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.மேலும் இக்கோயிலில் இருந்த இரண்டு உண்டியல்களையும் உடைத்து அதிலிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் இருந்த ஊற்றடி மாடசாமி கோயிலில் இருந்த உண்டியலையும் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து கோயில் நாட்டாண்மை முருகேசன் சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தார்.இதே போன்று ஆண்டிநாடாரூரில் உள்ள ஆரோக்கிய அன்னதேவ ஆலயத்திலும் ஜன்னல் வழியாக சென்று பீரோவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டதாக சேர்ந்தமரம் பங்குதந்தை அந்தோணி வியாகப்பன் சேர்ந்தமரம் போலீசில் புகார் செய்தார்.
இந்த இருவழக்குகளையும் போலீசார் வழக்குபதிவு செய்து கைரேகை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-அக்-201308:37:19 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆண்டவன் நேரிடையாக காவல்துறையில் புகார் அளிக்க மாட்டார் அல்லவா.. வக்கீலும் ஆண்டவன் நேரிடையாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததினால் வழக்கை தள்ளுபடி செய்ய நீதி பதியை கேட்கலாம் இல்லையா..
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
07-அக்-201308:03:40 IST Report Abuse
மதுரை விருமாண்டி மத சார்பற்ற திருடன்கள்... நல்ல வேளை.. மதம் பிடிச்சி அடிச்சிக்க மாட்டாங்க...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
07-அக்-201306:47:47 IST Report Abuse
K.Sugavanam நாட்டில அட்டூழியங்கள் மலிஞ்சிடிச்சி. மணிமேகலை ஆட்சியால் வந்த வினை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X