பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்காடு இடைத்தேர்தலில் '49 ஓ'க்கு தனி பட்டன் அறிமுகம்

Added : அக் 08, 2013
Advertisement

சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, சூஓட்டுப்போட விருப்பம் இல்லை' என, வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க, முதன் முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், தனி பட்டன் ஒதுக்கப்பட உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாதவர்கள், ஓட்டளிக்க, ஓட்டுச்சாவடிக்கு வருவதில்லை. இதனால், தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம், எப்போதும் குறைவாக உள்ளது. இதை தவிர்க்க, ஓட்டுப்போட விருப்பம் இல்லாதவர்கள், தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
அதை ஏற்று, தேர்தல் கமிஷன், ஓட்டுப் போட விரும்பாதவர்களுக்காக, '49 ஓ' படிவத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில், யாரையும் தேர்வு செய்ய விரும்பாதவர்கள், '49 ஓ' படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து கொடுத்தனர். அந்தப் படிவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனால், எத்தனை பேர் '49 ஓ' படிவம் கொடுத்தனர் என்பது தெரியாத நிலை ஏற்பட்டது.

கோர்ட் உத்தரவு : இதை தவிர்க்க, ஓட்டுப்பதிவு இயந்திரத்திலேயே, ஓட்டுப்போட விரும்பாதவர்கள், தங்கள் விருப்பத்தை தெரிவிக்க, தனி பட்டன் பொருத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சூதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை, தேர்வு செய்ய விரும்பாதவர்கள், தங்கள் விருப்பத்தை தெரிவிக்க, ஓட்டுப்பதிவு இயந்திரத்திலே, தனி பட்டன் பொருத்த வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

அறிமுகம் : அதை ஏற்று, தேர்தல் கமிஷன், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், ஓட்டுப்போட விருப்பம் இல்லை என தெரிவிக்க, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், தனி பட்டன் பொருத்த உத்தரவிட்டு உள்ளது. அதேபோல், தமிழகத்தில் டிச., 4ம் தேதி நடைபெற உள்ள, ஏற்காடு இடைத்தேர்தலிலும், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுப்போட விருப்பம் இல்லாதவர்கள், தங்கள் விருப்பத்தை தெரிவிக்க, தனி பட்டன் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது: ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலுக்காக, 294 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஓட்டுச்சாவடிக்கு ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரம் தயார் நிலையில் உள்ளது. கூடுதலாகல, 15 சதவீத ஓட்டுப்பதிவு இயந்திரம் தயார் நிலையில் வைக்கப்படும். இவை அனைத்தும் சரியாக இயங்குகின்றனவா என, சரி பார்க்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களின் பெயர் வரிசையாக இடம் பெறும். கடைசி பட்டன், ஓட்டுப்போட விருப்பம் இல்லை என, தெரிவிக்க விரும்புவோருக்கு ஒதுக்கப்படும். அந்த பட்டனுக்கு எதிரே, எந்த வேட்பாளரும் இல்லை என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். இதன் எண்ணிக்கை, வேட்பாளர்கள் பெற்ற ஓட்டை விடக் கூடுதலாக இருந்தாலும், அதிக ஓட்டு பெற்ற வேட்பாளர், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு, பிரவீண்குமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X