பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் விடுதலை

Added : அக் 08, 2013
Share
Advertisement
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கைது செய்த, ராமேஸ்வரம் மீனவர்கள், 20 பேரை, மன்னார் கோர்ட் விடுதலை செய்தது. ராமேஸ்வரத்தில் இருந்து, விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற, 20 பேரை, கடந்த மாதம், 21ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து, வவுனியா சிறையில் அடைத்தனர். நேற்று காலை, மன்னார் கோர்ட்டில் ஆஜரான மீனவர்களை, அக்., 21ம் தேதி வரை, சிறையில் அடைக்க, நீதிபதி, ஆனந்தி கனகரத்தினம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை கைது செய்த, ராமேஸ்வரம் மீனவர்கள், 20 பேரை, மன்னார் கோர்ட் விடுதலை செய்தது. ராமேஸ்வரத்தில் இருந்து, விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற, 20 பேரை, கடந்த மாதம், 21ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து, வவுனியா சிறையில் அடைத்தனர். நேற்று காலை, மன்னார் கோர்ட்டில் ஆஜரான மீனவர்களை, அக்., 21ம் தேதி வரை, சிறையில் அடைக்க, நீதிபதி, ஆனந்தி கனகரத்தினம் உத்தரவிட்டதால், மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பின், மதியம், 2:00 மணிக்கு, மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, இலங்கை அரசின் அட்டர்னி ஜெனரலிடம் இருந்து, மன்னார் கோர்ட்டுக்கு ஒரு கடிதம் வந்தது. மீண்டும், மீனவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த, நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, மாலை, 4:00 மணிக்கு கோர்ட்டில் ஆஜரான மீனவர்கள், நான்கு படகையும் கோர்ட் விடுதலை செய்தது. படகுடன் மீனவர்கள், ஓரிரு தினங்களில் ராமேஸ்வரம் கரை திரும்புவர் என, மீனவர் சங்க தலைவர் யூ.அருளானந்தம் கூறினார். இலங்கையில் சல்மான் குர்ஷித் இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித், நேற்று, அதிபர் ராஜபக்சேவை சந்தித்து, சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியதால், இலங்கை அரசு விடுதலை செய்தது. இருப்பினும், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 33 விசைப்படகுகளும், 24 மீனவர்களும் விடுவிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X