மாசில்லா மதுரை: மதுரையின் பசுமை பணிமனை| Dinamalar

மாசில்லா மதுரை: மதுரையின் பசுமை பணிமனை

Added : அக் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மாசில்லா மதுரை: மதுரையின் பசுமை பணிமனை

"ஒர்க் ஷாப்' என்றாலே ஆயில், கிரீஸ் கலந்த நெடி, கறுப்பு குழம்பாய் சிதறிய மண்தரை, காக்கிச் சட்டையில் கறைபடிந்த உடை, எண்ணெய் காணாத தலையுடன் ஊழியர்கள் என்றுதான் இருக்க வேண்டுமா? பன்னாட்டு நிறுவனத்தின் தரத்திற்கேற்ப பளிச்சென இருக்கக் கூடாதா? என்று சிந்தித்து உருவானது, மாருதிசுசுகி அங்கீகாரம் பெற்ற சிவா ஆட்டோமேட்டிவ் டிரேடிங் கம்பெனி.

மதுரை கேட்லாக் ரோட்டில் அண்மையில் துவக்கப்பட்ட சர்வீஸ் சென்டர் இது.


முழுமையான "கிரீன் ஒர்க்ஷாப்' (பசுமை பணிமனை). எந்த வகையிலும் நீர், காற்று, ஒலி, ஒளி மாசுபடாத வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பு.


பொதுவாக ஒர்க் ஷாப் என்றால், மேற்கண்ட மாசு நிச்சயம் இருக்கும். ஆனால் இங்கு நுழைந்து, வெளியேறுவது வரை மாசுபட இடமே இல்லை. ஒர்க் ஷாப்புகளில், கார்கள் "அண்டர் சேசிஸ் வாஷ்' செய்ய, தண்ணீரையும், நேரத்தையும் (30 நிமிடம் வரை) ஏராளமாக செலவழிப்பர். ஆனால் இங்கு, ஆட்களே இல்லாமல் அரை நிமிஷத்தில் இப்பணி முடிகிறது. 120 லிட்டர் தண்ணீரை, வேகமாக பீய்ச்சி, காரின் அடிப்பகுதியில் தூசி, மண் இன்றி, "இண்டு இடுக்குகளும்' சுத்தமாகிறது. இதில் கழிவுநீரை சுத்திகரித்து, மீண்டும் பயன்படுத்துவதால், நிலத்தடிநீர் மாசுபடாது.

"டிங்கரிங்' வேலைக்காக கருவிகளால் தட்டோ, தட்டோவென தட்டி காதுகளை அதிரவைப்பர். ஆனால் இங்கு அமெரிக்க இறக்குமதியான "கிராஷ் ரிப்பேர் சிஸ்டம்' மூலம் மென்மையாக கையாள்வதால் ஒலிஅலைகளே ஏற்படுவதில்லை. ஷெட்டில் நவீன "ஏர் வென்டிலேஷன்' உள்ளதால் குளிர்சூழல் உள்ளது. வாகனங்களுக்கு தேவையான ஆயில் அனைத்தும் ஸ்டோர் செய்து, குழாய்களில் கொண்டு வருகின்றனர். கார்களுக்கு தேவையான அளவை சாப்ட்வேரில் பதிவு செய்ததும், அளவு மாறாமல் நேரடியாக கார்களுக்குள் செலுத்தப்படுகிறது. இதனால் ஆயில் சிந்தாமல், சிதறாமல் சுற்றுப்புறம் காக்கப்படுகிறது.

வாகனங்களின் புகைமாசுவை கணக்கிட, சி.ஓ., அனலைசர் இயந்திரம் உள்ளது. இங்கு 300 லிட்டர் ஏர்கம்ப்ரஷர் இயந்திரம், சிறுசத்தமும் இன்றி, ஒரே சீராக இயங்குகிறது. டியூப்லைட்களுக்கு பதிலாக தொங்கும் "எல்.இ.டி.,' பல்புகள், 30 சதவீதம் மின்சக்தியை சேமிக்கிறது.


இகவர்னென்சாக இயங்கி, கணினி மூலமே கோப்புகள் நகர்வதால், காகித, பிளாஸ்டிக் கழிவுகளுக்கு வேலையே இல்லை. உயர் தொழில் நுட்பம் மூலம் துல்லியமான, "வீல் அலைன்மென்டை' சரிசெய்கின்றனர்.

நிர்வாக இயக்குனர் வீரமணி கூறியதாவது: தமிழகத்தின் முதல் "பசுமை பணிமனை' இதுவாகத்தான் இருக்கும். இந்த வசதிக்காக மட்டுமே கூடுதலாக ரூ. 40 லட்சம் செலவிட்டுள்ளோம். இருந்த போதி<லும், மாருதி நிறுவனம் நிர்ணயித்துள்ள கட்டணமே நிர்ணயித்துள்ளோம். தரம், நேரம் தவறாமை, உயர்தொழில் நுட்பம், மாசு இன்மை எங்கள் சேவையின் தனிச்சிறப்பு என்றார். தொடர்புக்கு- 74027-20000,இரைச்சல் ஒலிவயை ஒதுக்கி இசைபட வாழ்வோம்
பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையாலும், நாம் பயன்படுத்தும் "எலக்ட்ரானிக்ஸ்' பொருட்களாலும் ஒலி எந்த அளவிற்கு மாசடைகிறது என யாராவது யோசித்து பார்த்தது உண்டா? சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கூறி வருகிறார்


மதுரையை சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் வக்கீல் முரளீதரன். ஒலிச் சீர்கேடு குறித்து அவர் கூறுகிறார்...


ஒலி மாசு, இன்றைய மனித வாழ்க்கை சூழலுக்கு பெருத்த அச்சுறுத்தலாக விளங்குகிறது. உரத்த சப்தம் என்று கருதும் ஒலியின் அளவு 0.01 வாட். ஆனால் இதுவே காதை செவிடாக்கி விடும். ஓசையின் வலிமையை "டெசிபல்' என்ற அளவீட்டால் அளவிடுகிறோம். ஒரு டெசிபல் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பின் மேல் 0.00024 அழுத்தத்தை உண்டாக்கவல்லது. "டெக்' என்பது பத்தில் ஒரு பங்கு, "பெல்' என்பது ஒலியின் உச்சத்தை எட்டும் அளவு.


அதாவது 1பெல் =10 டெசிபல், 2 பெல் 100 டெசிபல் என்ற அளவில் நொடிக்கு 344 மீட்டர் அல்லது 760 மைல் வேகத்தில் பரவுகிறது. ஒலியின் இவ்வேகத்தை "மார்க்' என்கிறோம். சுமார் 600 மைல் வரையுள்ள வேகப்பரப்பு ஒலிச்சுவர் (சவுண்ட் பாரியார்) எனப்படுகிறது.


இந்நிலையில் நாம் அன்றாடம் பயன் படுத்தும் வீட்டு உபயோக பொருட்களிலிருந்து வெளிப்படும் இரைச்சல் ஒலியின் அளவு அதிகம். இந்த பொருட்களின் உபயோகத்தை, முடிந்த அளவு குறைக்க வேண்டும்.


வீட்டு உபயோக பொருட்களினால் ஏற்படும் ஒலி மாசு (டெசிபலில்)


டிவி - 65-67


சீலிங் பேன் - 45


பிரிட்ஜ் - 44


கிரைண்டர் - 82


வாக்கூம் கிளீனர் - 87


வாஷிங் மெஷின் - 61


ஏ.சி. - 61


டெய்லரிங் மெஷின்- 68


ஜெனரேட்டர் - 80-85


மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள ஒலி அளவு (டெசிபல்)


பகுதி -----------------------------------பகல் -----இரவு


தொழில் நிறுவனங்கள் ------------75-------- 70


வணிக நிறுவனங்கள் ---------------65 -------55


குடியிருப்பு -------------------------------55--------45


அமைதியான பகுதி -------------------50------- 40


ஆனால், மதுரையில் பெரும்பாலான வாகனங்கள் இந்த அளவை மீறும் வகையில் ஏர்ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றன.


அதிகரிக்கும் ஒலிமாசு


மதுரை நகர் குடியிருப்பில் ஒலிமாசு


பகுதி------------------ -------------அளவு(டெசிபல்)


காளவாசல்------------ -------------------81


பழங்காநத்தம் சந்திப்பு --------------82.6


ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் 80.1


பெரியார் பஸ் ஸ்டாண்ட் -----------89.6


கோரிப்பாளையம் பஸ் ஸ்டாப் --80.6


மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்- 79.2


கீழவாசல் சந்திப்பு ------------------------80


தெப்பக்குளம் --------------------------------3.4


(மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்த அளவு 55 )
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X