திருநெல்வேலியில் புள்ளிமான் சரணாலயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருநெல்வேலியில் புள்ளிமான் சரணாலயம்

Added : அக் 09, 2013
Share

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில், புள்ளிமான் உயிரின சரணாலயம் ஏற்படுத்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், தற்போது, 10 வன உயிரின சரணாலயங்கள் உள்ளன. வன உயிரினங்களுக்கு, மேலும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி அளிக்கும் நோக்கத்துடன், நடப்பாண்டு, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில், புள்ளிமான் உயிரின சரணாலயம் ஏற்படுத்தப்படும் என, முதல்வர் ஜெயலலிதா, மே, 2ம் தேதி, சட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி, புள்ளிமான் உயிரின சரணாலயம் அமைக்க, கடந்த, 1ம் தேதி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, கங்கைகொண்டான் மற்றும் அலங்காரபெரி பகுதியில், 288.40 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வனப்பகுதி, சரணாலயமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X