மொபைல் கைதிகளுக்கு ஆதரவு: 7 பேர் கடலூர் சிறைக்கு மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மொபைல் கைதிகளுக்கு ஆதரவு: 7 பேர் கடலூர் சிறைக்கு மாற்றம்

Added : அக் 09, 2013
Share

திருச்சி: மொபைல் வைத்திருந்த வழக்கில் சிக்கிய கைதிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த, ஏழு கைதிகள் இரவோடு இரவாக, கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறையில், கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சிக்கிய, ஏழு பேர், சிறை வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்திய போது, சிறைத் துறை போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்கள் மீது, கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சிறைத் துறை விதிமுறைப்படி, ஏழு பேரும் தனிமை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் உறவினர்களை சந்திக்க, மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து, ஏழு பேரும் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியானது. அவர்களுக்கு, ஆதரவாக, சில கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். சிறையில் உண்ணாவிரதம் இருந்த ஏழு பேர், நேற்று முன்தினம், இரவோடு இரவாக, கடலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X