சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் கேட்டு மிரட்டுகிறார்: மதபோதகர் மீது மனைவி புகார்

Added : அக் 09, 2013
Advertisement

சென்னை: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, மதபோதகர் மீது, அவர் மனைவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர், பியூலா மெர்சி பிரீத்தி, 25. இவர், கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் விவரம்: அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவைச் சேர்ந்த, ஜெசுரன் ராய் நைட். சென்னை "சர்ச் ஆப் கிரைஸ்டில்', மதபோதகராக உள்ளார். கடந்த, 2007ல், எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 18 சவரன் நகையும், ஒரு லட்சம் ரூபாயும், எங்கள் தரப்பில் இருந்து வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. குழந்தை இல்லாததால், கடந்த, 2009ல், ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்தோம். பின், என் கணவருக்கு, செல்வியா என்ற பெண் உட்பட, பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரிந்தது. இதை நான் கண்டித்தது முதல், என்னை கொடுமைப்படுத்த துவங்கினார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதை, அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்கள், அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்த நிலையில், மேலும், 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு, என்னை அடித்து கொடுமைப்படுத்தி, தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். என்னை கொடுமைப்படுத்திய கணவன், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன் ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X