மாலே: மாலத்தீவில், வரும், 19ம்தேதி, மறு தேர்தல் நடைபெற உள்ளது. மாலத்தீவில், மாமூன் அப்துல் கயூம், 30 ஆண்டுகளாக, அதிபராக இருந்தார். 2008ல், நடந்த தேர்தலில், மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்றார். ஆனால், நான்கு ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடித்த அவர், போலீஸ் புரட்சி காரணமாக, கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம், பதவி விலகினார். துணை அதிபராக இருந்த முகமது வாகீத், அதிபர் ஆனார். கடந்த மாதம், 7ம்தேதி, புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது.
முன்னாள் அதிபர் முகமது நஷீத், மாஜி அதிபர் கயூமின் சகோதரரும், மாலத்தீவு முற்போக்கு கட்சி வேட்பாளருமான, அப்துல்லா யாமீன் உள்ளிட்டோர், அதிபர் தேர்தலில், போட்டியிட்டனர்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, நூற்றுக்கும் அதிகமான சர்வதேச பார்வையாளர்கள், இத்தேர்தலை கண்காணித்தனர். ஓட்டுக்கள் எண்ணப்பட்டதில், முகமது நஷீத் முன்னிலையில் இருந்தார். இருப்பினும், 50 சதவீத ஓட்டுக்களை பெறாததால், கடந்த மாதம், 28ம்தேதி, மறுதேர்தல் நடைபெற இருந்தது.
ஆனால், முதல் கட்ட தேர்தலில், மோசடி நடந்ததாக, வேட்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்ததால், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட், முதல் கட்ட தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, வரும, 19ம்தேதி, மறு தேர்தல் நடத்தப்படும், என மாலத்தீவு தேர்தல் ஆணையம், நேற்று அறிவித்தது. "முதல் கட்ட தேர்தல் சுமுகமாக நடந்தது' என, சர்வதேச பார்வையாளர்கள் கூறிய போதும், இந்தியாவின் ஆதரவு பெற்ற நஷீத்தின் வெற்றியை தடுக்க, அந்நாட்டு அரசு பல்வேறு சதிகளை அரங்கேற்றி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE