ரியாத்: சவுதி அரேபியாவில், பாலியல் பலாத்காரம் செய்து, எட்டு வயது மகளை, கொலை செய்த, மத போதகருக்கு, எட்டு ஆண்டு சிறையும், 800 சவுக்கடியும், தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவை சேர்ந்தவர், பய்ஹான் அல் தமாதி. முஸ்லிம் மத போதகரான இவர், அந்நாட்டு "டிவி' நிகழ்ச்சிகளில், மத போதனைகள் செய்து வந்தார். இவர், தன், எட்டு வயது மகளை, பல முறை பலாத்காரம் செய்து இறுதியில் கொலை செய்து விட்டதாக, மாஜி மனைவியான, குழந்தையின் தாய், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், தமாதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமாதிக்கு, எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 800 சவுக்கடியும் வழங்கி அந்நாட்டு கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. "தமாதிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்' என, பலரும் குரல் கொடுத்துள்ளனர். "குழந்தையின் தாய், நஷ்ட ஈடு கோரியுள்ளதால், தமாதிக்கு மரண தண்டனை விதிக்க இயலாது' என, கோர்ட் விளக்கம் அளித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE