பொது செய்தி

தமிழ்நாடு

நய்யாண்டி பட கவர்ச்சி பிரச்னையில் நடிகை நஸ்ரியா சமதானம்

Added : அக் 10, 2013
Advertisement

சென்னை: நடிகர் தனுஷ், நடிகை நஸ்ரியா இணைந்து நடித்த, நய்யாணடி படத்தை சற்குணம் இயக்கியுள்ளார். இந்த படத்திலும், 'இனிக்க இனிக்க' என்ற பாடலிலும், தனது தொப்புல் தெரியுமாறு ஆபசமாக, டூப் நடிகையை வைத்து, இயக்குனர் காட்சிகளை சேர்ந்து மோசடி செய்துள்ளார், என நடிகை நஸ்ரியா போலீஸ் காமிஷ்னர் மற்றும், நடிகர் சங்கத்திடம் புகார் செய்தார். இதனால், இந்த பிரச்னை பரப்பரப்பு பெற்றது. இந்த நிலையில், கமிஷனர் ஜார்ஜ், சைபர் கிரைம் போலீசாரிடம், இந்த வழக்கினை விசாரிக்க செய்தார். நேற்று, நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் தியேட்டரில், போலீசார் மற்றும் நடிகையின் தந்தை படம் பார்த்தனர். பின்னர், போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக, கூறிச் சென்றனர். பிறது நடிகை, நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது: நய்யாண்டி பட விளம்பரத்திற்காக, கவர்ச்சியாக நடித்ததுபோல யூடிபீல் சிலகாட்சிகளை வெளியிட்டு இருந்தனர். இதனால், எனக்கும் படக்குழுவிற்கும் பிரச்னை ஏற்பட்டது. இன்று, முழு படத்தினை பார்த்தபிறகு, அந்த காட்சிகள் படத்திலுருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது. மற்றும், நான் நடித்த காட்சிகள் மட்டுமே இடம்பெற்றதால், சமாதானம் அடைந்தேன். எனவே, படக்குழுவிற்கும் எனக்கும் இருந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X