இந்தியாவுக்கான பாக்., தூதராக சையத் அப்பாஸ் நியமனம்

Updated : அக் 10, 2013 | Added : அக் 10, 2013 | கருத்துகள் (1) | |
Advertisement
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சையத் அப்பாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தூதராக இருக்கும் சல்மான் பஷூர் மாற்றப்பட்டுள்ளார். பஷூர் ஓய்வு பெற்ற பின்னர் தான் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டதால், பாகிஸ்தானில் புதிதாக பதவியேற்ற அரசு, இந்தியாவுக்கு புதிய தூதரை நியமித்துள்ளது. தற்போது புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள சையத் அப்பாஸ், இதற்கு

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சையத் அப்பாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தூதராக இருக்கும் சல்மான் பஷூர் மாற்றப்பட்டுள்ளார். பஷூர் ஓய்வு பெற்ற பின்னர் தான் இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டதால், பாகிஸ்தானில் புதிதாக பதவியேற்ற அரசு, இந்தியாவுக்கு புதிய தூதரை நியமித்துள்ளது. தற்போது புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள சையத் அப்பாஸ், இதற்கு முன்னர், டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அரசியல் ஆலோசகராகவும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் காஷ்மீர் விவகாரங்களுக்கான இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவும் சூழ்நிலையில் புதிய தூதர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக அப்பாஸ் ஜிலானி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-அக்-201308:40:36 IST Report Abuse
Srinivasan Kannaiya யார் வந்தாலும் நல்லுறவுக்கு பாலமாக இருந்தால் சரி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X