புதுடில்லி: தனித்தெலுங்கானாவை எதிர்த்து, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் உடல் நிலை மோசமானதை அடுத்து அவரை போலீசார் வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரியில் கொண்டு போய்ச்சேர்த்தனர். முன்னதாக அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டு, போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டது.
மத்திய அமைச்சரவையின் தனித்தெலுங்கானா ஒப்புதலை அடுத்து ஆந்திர மாநிலத்தில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. ஒருங்கிணைந்த ஆந்திராவே வேண்டும் என ஒய்.எஸ்.ஆர்.,காங் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி, தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு ஆகியோர் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ஜெகன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
டில்லி ஆந்திர பவன் முன் பதட்டம்: இன்று டில்லியில் ஆந்திர பவன் அருகே, கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரபாபு உடல்நிலை மோசமானது. இவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதனையடுத்து போலீசார் அவரை இந்த இடத்தில் இருந்து அகற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்க்க முற்பட்டனர்.இதற்கு தொண்டகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஒரு வழியாக பேச்சு நடத்தி சந்திரபாபுவை ஆம்புலன்சில் ஏற்றினர்.
இவருடன் மனைவி மகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருக்கின்றனர். ஆஸ்பத்திரியில் சேர்த்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE