ஆமதாபாத்: குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை, பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரன் சந்தித்தார். காந்தி நகரில் உள்ள மோடியின் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது தேசிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் நலனுக்காகவும், குஜராத் மக்களுக்காகவும் பால் தினகரன் சிறப்பு பிரார்த்தனைகளை செய்தார். இந்த சந்திப்பின் போது, கல்வி, ஆன்மிகம் மற்றும் சமூக சேவையில் பால் தினகரன் ஆற்றி வரும் சேவைகளை மோடி வெகுவாக பாராட்டினார்.