கொலைவெறி அரசியல்வாதிக்கு மீண்டும் அமைச்சர் பதவி

Updated : அக் 12, 2013 | Added : அக் 12, 2013 | கருத்துகள் (25) | |
Advertisement
புதுடில்லி:உ.பி., மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த, ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜா பைய்யா என்பவர், கடந்த சட்டசபை தேர்தலில், சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு, உ.பி., மாநிலத்தின், குறிப்பிட்ட சில பகுதிகளில், செல்வாக்கு உண்டு. சமாஜ்வாதி கட்சிக்கு, இவர், ஆதரவு அளித்தார். இதனால், இவரை,
rajabaigh against  minister

புதுடில்லி:உ.பி., மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த, ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜா பைய்யா என்பவர், கடந்த சட்டசபை தேர்தலில், சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு, உ.பி., மாநிலத்தின், குறிப்பிட்ட சில பகுதிகளில், செல்வாக்கு உண்டு. சமாஜ்வாதி கட்சிக்கு, இவர், ஆதரவு அளித்தார். இதனால், இவரை, உணவுத் துறை அமைச்சராக்கினார், அகிலேஷ் யாதவ். கடந்த மார்ச் மாதம், பிரதாப்கார் என்ற இடத்தில், கலவரம் வெடித்தது. இதை அடக்குவதற்காக சென்ற, போலீஸ் அதிகாரி ஜியா உல் ஹக், கொலை செய்யப்பட்டார். ராஜா பைய்யா தான், இந்த கொலைக்கான சதித் திட்டத்தை தீட்டியதாக புகார் கூறப்பட்டது. இவர் மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய, சி.பி.ஐ., ராஜா பைய்யாவுக்கும், இந்த வழக்கிற்கும், சம்பந்தம் இல்லை என, அறிக்கை அளித்தது. இதையடுத்து, லக்னோவில், கவர்னர் மாளிகையில், நேற்று நடந்த விழாவில், உ.பி., அமைச்சராக, ராஜா பைய்யா, மீண்டும் பதவியேற்றார். முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர், இதில் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.sankaralingam - rajapalayam,இந்தியா
13-அக்-201301:06:14 IST Report Abuse
m.sankaralingam வாழ்க ஜனநாயகம். நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் நாட்டை ஆளுகிறார்கள். இவர்கள் எல்லோரும் அவசரநிலை அமுலில் இருந்தபோது உருவான ஹீரோக்கள் .
Rate this:
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
12-அக்-201321:54:01 IST Report Abuse
Natarajan Ramanathan அதெப்படி இந்த வழக்கில் மட்டும் ஒரே ஆண்டில் தீர்ப்பு வருகிறது?
Rate this:
Cancel
VIJAY - manama,பஹ்ரைன்
12-அக்-201319:16:09 IST Report Abuse
VIJAY தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் முடிவில் அதர்மம் வெல்லும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X