நூற்றாண்டு கண்ட சினிமா ராணியின் கதை...
நூற்றாண்டு கண்ட சினிமா ராணியின் கதை...

நூற்றாண்டு கண்ட சினிமா ராணியின் கதை...

Added : அக் 12, 2013 | கருத்துகள் (6) | |
Advertisement
இன்றைக்கு இங்கே எல்லாமே அவசரம்தான்.அரசு சார்பில் அவசரமாக ஒரு விழா நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவின் முதல் பேசும் பட நாயகியும், இயக்குனரும், தயாரிப்பாளரும், நாவலாசிரியருமான டி.பி.ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழாவும் அவற்றில் ஒன்று.அவரை ஒரு சினிமாக்காரராக பார்க்கப்பட்ட விழா அது. ஆனால் அதிகம் சினிமாக்காரர்கள் வராத விழாவும் அதுவே. உண்மையில் அவரைப்பற்றிய
நூற்றாண்டு கண்ட சினிமா ராணியின் கதை...

இன்றைக்கு இங்கே எல்லாமே அவசரம்தான்.
அரசு சார்பில் அவசரமாக ஒரு விழா நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முதல் பேசும் பட நாயகியும், இயக்குனரும், தயாரிப்பாளரும், நாவலாசிரியருமான டி.பி.ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழாவும் அவற்றில் ஒன்று.

அவரை ஒரு சினிமாக்காரராக பார்க்கப்பட்ட விழா அது. ஆனால் அதிகம் சினிமாக்காரர்கள் வராத விழாவும் அதுவே.
உண்மையில் அவரைப்பற்றிய தேடலை துவங்கியபோதுதான் சினிமாக்காரர் என்ற பார்வையுடன் அவரை கடந்துவிட முடியாது, கடந்துவிடவும் கூடாது என்பது தெரியவந்தது.
பால்யவிவாகமும், கொஞ்சமும் பெண் சுதந்திரம் இல்லாத காலகட்டத்தில் இவரது வருகையும், வளர்ச்சியும் முக்கியமாகப்படுகிறது.
வறுமையில் வாழ்வைத் துவங்கி வளத்தின் உச்சத்தில் வலம் வந்து மீண்டும் வறுமையில் வாடி மடிந்து போன சோககதைக்கு சொந்தக்காரர் இவர்.
1911ம் வருடம் தஞ்சாவூர் சாலியமங்கலம் என்ற ஊரில் பிறந்த ராஜலட்சுமியை அவரது எட்டு வயதிலேயே அந்தக்கால பால்யவிவாக முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விட்டனர். கொஞ்ச நாளில் கணவர் இறந்துவிட, விவரம் தெரிவதற்குள்ளாகவே விதவை பட்டம்.
மகளின் நிலைகண்டு மனம் வருந்தியே தந்தை இறந்து போனார், வருமானம் இல்லாமல் வறுமையோடு வாழமுடியாமல் தாய் மீனாட்சி தன் மகளுடன் திருச்சிக்கு நடந்தே போயிருக்கிறார்.
அப்போது திருச்சிதான் நாடகக்காரர்களின் முக்கிய கேந்திரம். பிரபலமாக இருந்த சாமண்ணா நாடககுழுவை அணுகி என் பொண்ணு நன்றாக பாடுவாள், நான் நன்றாக சமைப்பேன், உழைச்சு பிழைக்க வழிகாட்டுங்க என்று கண்ணீர்மல்க கதறிய தாய் மீனாட்சியின் கண்ணீருக்காகவும், ராஜலட்சுமியின் குரல் வளத்திற்காகவும் நாடக சபாவில் வேலைபோட்டு கொடுக்கப்பட்டது. மகளுக்கு மாதம் 30 ரூபாய் சம்பளம், அம்மாவிற்க 20 ரூபாய் சம்பளம்.
அப்போது பெண் வேடத்தையும் ஆண் நடிகர்களே போட்ட காலம். பெண் வேடமிட்டு நடிகர்களுக்காக பேசுவது, பின்னணியில் இருந்து பாட்டுப்பாடுவது என்றுதான் தனது கலைவாழ்க்கையை துவங்கினார்.
பிறகு சின்ன சின்ன வேஷங்களில் தோன்றியவர் தனது திறமையால் வெகு சீக்கிரமாகவே நாடக நாயகியானார். அந்தக்கால பிரபலங்கள் கிட்டப்பா, பாகவதர், டி.வி.சுந்தரம் போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தபிறகு புகழும், பொருளும் தேடிவந்தது.
முதன் முதலாக தமிழில் வெளியான காளிதாஸ் என்ற பேசும்படத்தில் கதாநாயகியாக நடித்தார். படம் நன்றாக ஓடியதை அடுத்து தொடர்ந்து ஓய்வு எடுக்கவே முடியாத அளவிற்கு வரிசையாக படங்கள் வந்தன.
தனது புகழையும், குரலையும் தேசத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று நாடக மேடைகளில் தேசபக்தி பாடல்களையும் பாடஆரம்பித்தார். இதன்காரணமாக கைதாகி சிறைக்கு சென்றார். சிறை வாழ்க்கையால் வாடிப்போகாமல் விடுதலையான போதும் மீண்டும் மீண்டும் தேசபக்தி பாடல்களை பாடி மீண்டும், மீண்டும் சிறைக்கு போனவர்.
ராஜம் டாக்கீஸ் என்ற பெயரில் சினிமா நிறுவனம் துவங்கி சொந்தமாக மிஸ் கமலா என்று படம் எடுத்தார். அந்த படத்தில் நடித்ததுடன் கதை, தயாரிப்பு, எடிட்டிங் மற்றும் இயக்குனர் வேலையும் அவரே பார்த்துக்கொண்டார்.
இப்படி நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என்று வருடங்கள் உருண்டோடின, படங்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது, செல்வாக்கும் கூடியது. உலகம் இவரை சினிமா ராணி என்று கொண்டாடியது. ரங்கூன் போன்ற இடங்களுக்கு எல்லாம் போய் நடித்துக் கொடுத்துவிட்டு வந்தார். நடுவில் திருமணம், குழந்தைபிறப்பு என்று கொஞ்சகாலம் ஓய்வு எடுத்தார். அந்த ஓய்வையும் வீணாக்காமல் சில நாவல்கள் எழுதினார்.
எந்த சினிமா இவரை உச்சத்திற்கு கொண்டு போனதோ அதே சினிமா இவரை அதலபாதாளத்திற்கும் கொண்டு சென்றது. தயாரிப்பு நிர்வாகம் தந்த தோல்வி குடியிருந்த வீட்டைக்கூட விற்கவேண்டிய நிலைக்கு தள்ளியது.
கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்த எம்ஜிஆர் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டபோது, சுயமரியாதை தடுக்க எதையும் கேட்காமல் திரும்பியவர்.
தமிழ் சினிமாவில் பல "முதல்' பட்டத்திற்கு சொந்தக்காரரான இவர் தனது 55 வயதில் நோயில் விழுந்து வருத்தத்துடனும், மீளாத சேசாகத்துடனும் இறந்துபோனார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இவரது நூற்றாண்டை கொண்டாட அரசு அவசரமாக முடிவு செய்து தேடியபோது கிடைத்தது ஒரு சில பழைய படங்களும், சினிமாவின் நிழலே படியாமல் வளர்க்கப்பட்ட அவரது மகள் கமலாவின் மூலமாக கிடைத்த சில நினைவுகளும்தான்.
ராஜலட்சுமியின் பழைய படங்களை பற்றி பெருமை பேசலாமே தவிர இன்றைய காலகட்டத்தில் உட்கார்ந்து பார்க்க முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆகவே அந்த படங்களை யாரும் ரீரிலீஸ் செய்யவேண்டியது இல்லை, ஆனால் அவரது எண்ணங்களை எதிரொலிக்கும் நாவல்களை படிக்க விரும்புவர்களுக்கு அதை பதிப்பத்தும், புதுப்பித்தும் தரும் முயற்சியில் யாரேனும் இறங்கினால் நூற்றாண்டு விழா கண்டதற்கு அர்த்தம் இருக்கும்.

- எல்.முருகராஜ்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (6)

Ari Munusamy - Muar, Malaysia  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-201321:56:19 IST Report Abuse
Ari Munusamy Dinamalar should run a series on this lady. It will be quite a treat if an article is done to honour the adorable Aachi@Manorama. Hers is also a story to be told. Her versatility is incomparable. It will great to honour her while living. Several other actresses also deserve to be honoured.
Rate this:
Cancel
Skv - Bangalore,இந்தியா
19-அக்-201306:35:21 IST Report Abuse
Skv ஆணாதிக்கத்துக்கு ஒரு உதாரணம் டிபிஆர் வாழ்க்கை என்பது மறுக்கவே முடியாத உண்மை. உலகிலே பெண் வெறும் பிள்ளைகள் பெறும் யந்திரமே , அந்த பிள்ளைய கொஞ்சவும் கூட அவளுக்கு உரிமை இல்லேன்னு வாழ்ந்த பல அம்மாக்கள் உண்டு. அம்மா என்பவள் வெறும் துவைக்கும் கல்லு தான். அதனால் தன எத்தனை பேர் அடிச்சாலும் தாங்கிண்டே வாழ்ந்து மடிகிறாள் . பெத்தவாள் முதல் பெத்தபிள்ளைகள் வரை இந்தகல்லை யூஸ் மட்டுமே செய்துப்பா , பிறகு வேண்டாம்னு ஒதுக்கிடுவா.(எதிர்க்கும் சக்தி உள்ளவள் மட்டுமே ஜெயிப்பா) இதுவே உண்மை
Rate this:
Cancel
JAIRAJ - CHENNAI,இந்தியா
17-அக்-201311:18:07 IST Report Abuse
JAIRAJ வறுமையில்ஆரம்பித்து வளத்தில் கொழித்து வறுமையில் முடிந்த வனிதையின் கதை. இவர் காலத்தில் இவர் உச்ச நிலையில் இருந்தாலும், இவருக்குப் பின் வந்தவர்களால் மறக்கடிக்கபபட்டவர். இவர் வாழ்ந்த காலத்திலேயே இவருக்கு தேவையானதைச்செய்து உய்விக்கத் தவறியவர்கள், இவர் இறந்த பின்பு, இவர் பெயரால் விழா நடத்தி ....................நூற்றாண்டு விழா என்பது வேடிக்கை விழா இல்லை. அது திடீரென்று வந்து விடவும் இல்லை. 98 ஆம் வருட ஆரம்பத்திலேயே இது பற்றி சிறந்த முறையில் ஆலோசித்திருந்தால், அதற்காக தேவையானதை தேவையான முறையில் வரிசைப் படுத்தி இருந்தால்,( இவர்கள் மொழியில் உயர்ந்த கலைஞன், இடை - கடை கலைஞன் என்று, ) சினிமாவில் உள்ள எல்லா துறை கலைஞர் களுமே ஏற்ற தாழ்வில்லாமல் உயர்வுடன் சந்தோஷப் பட்டிருப்பார்கள். அன்று துறைவாரியாக கோலோச்சியவர்களில் சிலர் இன்று 80 அல்லது 90 வயது நெருக்கத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். கெடுபிடி செய்யாமல் " இது சினிமா விழா,எங்கள் குடும்ப விழா" என்ற எண்ணத்தில், பகுதி பகுதியாகப் பிரித்திருந்து நடத்தி, இறுதி நாள் என்று ஒன்றை முடிவு செய்து, அதில் பங்கேற்பவர்களை வரிசைப்படுத்தி தேவையானவர்களுக்கு, தேவையானபடி இடம் அமைத்துக் கொடுத்து, 99.9 சத விகிதம் குறைஇல்லாமல் நடத்தி இருந்திருக்கலாம். சினிமா விழாவுக்கான துகையை அத்துறையைச் சார்ந்தவர்கள் தான் செலுத்த வேண்டுமே தவிர, பொதுமக்கள் செலுத்தும் வரியிலிருந்து அல்ல. இத்தனை சிலவுகள் செய்தும் பயனடைந்தவர்கள் தவிர, வேறு யாருக்கும் எந்தவித உபயோகமும் இல்லை. காரணிக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது. மேலும் பல உண்டு. சாதனை படைத்தவர்கள் வேதனையை மறக்க நினைக்கும் வேளையில்...............இது மறக்க நினைக்கும் வடு வாகவே இருக்கட்டும். வசதி இல்லாக்காலத்திலேய பல சாதனைகள் படைத்த ஒலி,ஒளிப்பதிவாளர்கள்,ஒளியை சரியான விதத்தில் படரச்செய்து உங்கள் வாழ்க்கையை பிரகசமக்கிய விற்பனர்கள், இயக்குனர்கள், நஷ்டத்தைக் கண்டு அல்லது நஷ்டமாகிவிடுமோ என்று பயந்து கண்ணீர் சிந்தி, "காப்பாற்றுங்கள் "என்று, கதறாத தயாரிப்பாளர்கள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மொழியிலிருந்து தாவி வரச்செய்து நல்ல பொது மொழியில் வலம் வரச்செயதவர்கள், அவரது வாரிசுகள், மற்றும் அந்த மென்மொழியை அடுக்கு மொழியாக்கி வசனத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களெல்லாம் ஆலோசனை செய்ய நேரம் கொடுக்க வில்லையா...........? எல்லாமே கேள்விக்குறிதான்.......................நன்றாக, வெற்றியுடன் வளமாக வாழுங்கள். இனிமேல் வரும் காலத்திலாவது எதுவும் விடுபடாமல் இருக்க மீண்டும் ஆரம்பத்திலிருந்தே துறைவாரியாக இன்றைய காலகட்டம் வரை சேகரித்து, கணனியில் ஏற்றி, அதற்கு ஒரு ' பேக் அப் ' காப்பியும் வைத்துக்கொண்டு, பொது சொத்தாகிய இதை பத்திரமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இது போன்று செயல்பட்டால்,வரும் காலங்களிலாவது வேதனை இல்லா விழாக்களை வெற்றியுடன் நடத்தலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X