பாதுகாப்பற்ற நிலையில் வட மாநில சிறுமிகள்: விற்பனைக்காக வீதியில் திரிவதால் ஆபத்து?

Updated : அக் 14, 2013 | Added : அக் 12, 2013 | கருத்துகள் (16) | |
Advertisement
சேலம்:தமிழகத்தில், பலூன், பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட விளையாட்டு பொருட்களை விற்பனை செய்யும், ஏழை வட மாநில சிறுமிகளுக்கு, பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பாலியல் துன்பங்களுக்கு பெண்கள் ஆளாக்கப்படும் நிலையில், இவர்களுடைய பாதுகாப்புக்கு, அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.வறண்ட பூமியில் கிடக்கும், வட மாநிலத்தவர், பிழைப்புக்காக, தமிழகம், ஆந்திரா,
பாதுகாப்பற்ற நிலை, வட மாநில சிறுமிகள்,ஆபத்து,Northern state, girls, protect

சேலம்:தமிழகத்தில், பலூன், பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்ட விளையாட்டு பொருட்களை விற்பனை செய்யும், ஏழை வட மாநில சிறுமிகளுக்கு, பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பாலியல் துன்பங்களுக்கு பெண்கள் ஆளாக்கப்படும் நிலையில், இவர்களுடைய பாதுகாப்புக்கு, அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வறண்ட பூமியில் கிடக்கும், வட மாநிலத்தவர், பிழைப்புக்காக, தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை நோக்கி வருகின்றனர். தங்களுடைய கைத்திறன் மூலம், வித்தியாசமான பொருட்களை தயாரித்து, அவற்றை விற்று பிழைப்பு நடத்துகின்றனர். பொருட்களை விற்பனை செய்வதில், ஆண்களை காட்டிலும், இளம்வயது பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர்.பீகார், ஒரிஸா, மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், தொழில் வளம், விவசாயம், வேலைவாய்ப்பு காரணிகள் ஏதுமில்லாததால், அங்குள்ள மக்களை, கட்டிட பணிக்கும், ஹோட்டல், தொழிற்சாலைகளுக்கும் வேலைக்காக, புரோக்கர் அழைத்து வருகின்றனர். உணவு, தங்குமிடம் போக, மாதம், 5,000 ரூபாய் வரை, கூலியாக வழங்குகின்றனர்.

அதிகப்படியான பணத்தை பார்க்காத, இந்த மக்களுக்கு, அனைத்து வசதிகளுடன், சம்பளமும் ஓரளவு கிடைப்பதால், பகல், இரவு பாராமல் மாடாய் உழைக்கின்றனர். நாடோடியாய் வரும் இளைஞர்கள், அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில், திருட்டு, கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர்.இவர்களை தவிர, வறுமையால் பாதிக்கப்பட்ட, வட மாநில சிறுமிகள், பெண்கள், தங்களுக்கு தெரிந்த கைவினைப் பொருட்களை தயார் செய்து, சாலையோரங்களிலும், வீதிகளிலும் திரிந்து, அவற்றை விற்பனை செய்து வருகின்றனர். வெகுளித்தனமாக நின்றபடி, பொருட்களை விற்பனை செய்யும் சிறுமிகளை, விஷமிகள் சிலர், பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கும் சூழல் உள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் தான் அவர்கள் தங்களுடைய பிழைப்பை நடத்த வேண்டியது உள்ளது.

சமீபகாலமாக, நாடு முழுவதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளன. மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில், பாலியல் தொடர்பான குற்றம் அதிகம் இருப்பதாக புகார் கூறப்படுகிறது. சாலையோரங்களில் கூடாரங்களை அமைத்து தங்கியிருக்கும் வட மாநிலத்தவருக்கு, எவ்வித பாதுகாப்பும் கிடையாது. இங்கு தங்கியுள்ள பெண்கள், பல்வேறு பிரச்னைக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு, உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என, பெண்கள் அமைப்பினர் வலியுறுத்துகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, சீமா, சஞ்சனா கூறியதாவது;நாங்கள் குடும்பத்தோடு, ஒவ்வொரு மாநிலம், மாவட்டமாக சென்று, எங்களுக்கு தெரிந்த பொருட்களை விற்கிறோம். பிளாஸ்டிக் பேப்பர் மூலம், கிதார், தலையணை உள்ளிட்டவை செய்து விற்கிறோம். இரவில், சாலையோரம் கூடாரம் அமைத்து தங்கியிருப்போம். குடும்பத்தினருடன் இருப்பதால் பயம் இல்லை.தனியாக விற்பனைக்கு செல்லும்போது, எங்களுக்கு சில தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கிறது. காலை முதல் மாலை வரையிலும் அலைந்தால், அதிகபட்சம், 100 ரூபாய் வரை கிடைக்கும். வயிற்று பிழைப்புக்காக, ஊர் ஊராக அலைகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANUSHI - chennai,இந்தியா
13-அக்-201318:38:06 IST Report Abuse
MANUSHI உழைத்து பிழைக்கும் இவர்களை காப்பாற்ற அரசு முயல வேண்டும்.
Rate this:
Cancel
A.J.Amalraj - Thanjavur,இந்தியா
13-அக்-201313:22:40 IST Report Abuse
A.J.Amalraj Please be aware my dear Indians. Most of the students of the age group of around 16 ie 10th and 12th in TAMILNADU are suffering very SERIOUSLY by the tution classes taken in the early mornig like 5 am. Just imagine a girl travelling alone for education nearby in the winter season for 3 to 5 kms. God grace every thing is normal. Will Dinamalar take this message to the respective place and person. First of all care for our girls then you can support the other state girls. Hope you really understand the message.
Rate this:
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
13-அக்-201312:19:07 IST Report Abuse
kumaresan.m " வட மாநில அரசியல் தலைவர்கள் / அரசியல் கட்சிகள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து முற்போக்கான பல திட்டங்களை நிறைவேற்றினால் இவர்களின் வாழ்க்கையும் வசந்தமாக மாறும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X