வீணாகும் மழைநீர் சேமிக்கப்படுவது எப்போது? கிடப்பில் காவிரி தொழில்நுட்ப குழு பரிந்துரைகள்

Updated : அக் 14, 2013 | Added : அக் 13, 2013 | கருத்துகள் (18) | |
Advertisement
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் மூலம் பெறப்படும், மழைநீரை முறையாக பயன்படுத்த, காவிரி தொழில்நுட்ப குழு அளித்த, அனைத்து பரிந்துரைகளும், கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால், பருவமழையின் மூலம் பெறப்படும் மழைநீர், வீணாக கடலில் கலக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.தமிழகம் எப்போதும், வடகிழக்கு பருவமழையை நம்பியே இருக்கும். எனவே, தமிழகத்தின் பாசன திட்டங்கள், அதை வைத்தே
மழைநீர், காவிரி தொழில்நுட்ப குழு, rain water, saved

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழையின் மூலம் பெறப்படும், மழைநீரை முறையாக பயன்படுத்த, காவிரி தொழில்நுட்ப குழு அளித்த, அனைத்து பரிந்துரைகளும், கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால், பருவமழையின் மூலம் பெறப்படும் மழைநீர், வீணாக கடலில் கலக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழகம் எப்போதும், வடகிழக்கு பருவமழையை நம்பியே இருக்கும். எனவே, தமிழகத்தின் பாசன திட்டங்கள், அதை வைத்தே வரையறுக்கப்படும். ஆனால், அதற்கு நேர்மாறாக, ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கான டி.எம்.சி., தண்ணீர், கடலில் வீணாக கலந்து வருவது, வாடிக்கையாக உள்ளது.பருவமழையின் மூலம் பெறப்படும் மழைநீரை சேமிப்பதற்கான, முறையான திட்டங்கள் இல்லாததே இதற்கு காரணம்.இப்பிரச்னையை தீர்க்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காவிரி தொழில்நுட்ப தலைவர் சுப்ரமணியன், தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் வெள்ள நீரை உரிய வகையில் உபயோகப்படுத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வழிமுறைகளை பரிந்துரைத்தது. 13,560 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 12 திட்ட பணிகளை, பரிந்துரை செய்தது.
குறிப்பாக, 5,166 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. மேலும்,
*1,862 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அத்திக்கடவு அவினாசி. வெள்ளக்கால்வாய் திட்டம்.
*250 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பெண்ணையாறு (சாத்தனூர் அணை) பாலாறு இணைப்புத் திட்டம்
*253 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பெண்ணையாறு (நெடுங்கல் அணைக்கட்டு) பாலாறு இணைப்புத் திட்டம்
*1,134 கோடி ரூபாய் மதிப்பில், காவிரி வைகை குண்டாறு, காவிரி (மேட்டூர் அணை) சரபங்கா இணைப்புத் திட்டம் ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம், பரிந்துரைக்கப்பட்டது.பரிந்துரை வழங்கி, இரண்டு ஆண்டுகளாகியும் இத்திட்டம், ஆரம்ப பணிகள் கூட துவங்காமல் உள்ளன.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டங்கள், மத்திய அரசிடமிருந்து பெறப்படும் கடனுதவி அல்லது மானியம் மூலமே செயல்படுத்தப்படும்.கடனுதவியை பொறுத்த மட்டில், மத்திய அரசு வழங்கும், 75 சதவீத கடன் உதவியுடன், மாநில அரசின் பங்குத் தொகையான, 25 சதவீதத்துடன், திட்டம் செயல்படுத்தப்படும்.செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும். காவிரி தொழில்நுட்ப குழு பரிந்துரைத்த அனைத்து திட்டங்களும், மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்த பின், கடனுதவி வழங்கப்படும். அதன்பிறகே, திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நமது நிருபர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhavan Parthasarathy - Chennai,இந்தியா
13-அக்-201316:47:56 IST Report Abuse
Madhavan Parthasarathy ஒரு வருட குடி பணத்தை திட்ட செயலாக்கமாக அறிவித்து எல்லோரையும் நாட்டுக்காக குடிங்கள் என்று சொல்லலாம்
Rate this:
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
13-அக்-201312:33:55 IST Report Abuse
kumaresan.m " தமிழக பொது பணித்துறை அமைச்சர் அவர்கள் சர்வ காலமும் குனிந்து கொண்டே கிடக்காமல் வீறுகொண்டு எழுந்து டெல்லி வரை சென்று திட்டத்திற்கு தேவையான பணங்களை கொண்டு வந்து இது போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும்
Rate this:
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
13-அக்-201312:30:41 IST Report Abuse
kumaresan.m " டாஸ்மாக்கில் வருமானம் குறைந்து விட்டதே ...இது போன்ற திட்டத்தை எப்படி நிறைவற்றுவது தமிழக அரசு கவலை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X