அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழர்களின் கனவு நிறைவேறும்-மோடி

Updated : அக் 18, 2013 | Added : அக் 18, 2013 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று மாலை 3.12 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்திறங்கினார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவர் பேசியதாவது: என்னை வரவேற்ற பா.ஜ. நிர்வாகிகளுக்கும் கூடியுள்ள நண்பர்களுக்கு நன்றி, இன்று மீண்டும் தமிழகம் வந்திருக்கிறேன். இம்முறை,
 தமிழகத்தில் மாற்றத்தின் அலை

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று மாலை 3.12 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்திறங்கினார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவர் பேசியதாவது: என்னை வரவேற்ற பா.ஜ. நிர்வாகிகளுக்கும் கூடியுள்ள நண்பர்களுக்கு நன்றி, இன்று மீண்டும் தமிழகம் வந்திருக்கிறேன். இம்முறை, திருச்சி கூட்டத்திற்கு தாங்கள் அளித்த மகத்தான ஆதரவுக்கு நன்றி தெரிக்க வந்துள்ளேன்.

மீண்டும் டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைக்க வேண்டும் என்ற மாற்றம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது தெரிகிறது. அதுபோன்ற நேரத்தில், நாங்கள் தமிழர்களின் கனவுகளை நிறைவேற்றுவோம் என உறுதி கூறுகிறேன்.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கோட்டையில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 1000 டன் தங்க புதையலை இன்றைக்கு மத்திய அரசு தோண்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு பதிலாக, சுவிஸ் வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பல கோடி ரூபாய் பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Chennai,இந்தியா
18-அக்-201317:19:11 IST Report Abuse
Kumar எந்த கனவை நிறைவேற்ற போகிறாராம்? பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு போனா எப்படி? இவரும் வாய்ச்சவடால் வீரர்தான். சும்மா ஓட்டுக்கு பேசுகிறார். இவர் மீது சந்தேகம்தான் வருகிறது. உள்நோக்கம் வேறு எதுவோ தெரியவில்லை. இவர் ஆட்சிக்கு வந்தால் மைனாரிட்டி மக்கள் கஷ்டப்படுவார்கள் என்று தெரிகிறது. இருந்தாலும் சந்தேகத்தின் பலனை இவருக்கு கொடுத்துப் பார்க்கலாம்.
Rate this:
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
18-அக்-201317:05:28 IST Report Abuse
தமிழ் சிங்கம் தமிழர்களின் கனவை மட்டுமல்லாமல் இந்திய மக்கள் அனைவரது கனவையும் மோடி அவர்கள் நிறைவேற்றுவார்..... வாழ்க மோடி...
Rate this:
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
18-அக்-201316:30:06 IST Report Abuse
சு கனகராஜ் மோடியின் கை ஓங்குக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X