பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த புதுச்சேரி மாணவரின் உடல் உறுப்பு தானம்

Updated : அக் 19, 2013 | Added : அக் 19, 2013 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை:விபத்தில் காயமடைந்த புதுச்சேரி இன்ஜினியரிங் மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.புதுச்சேரி, தேங்காய்திட்டைச் சேர்ந்த புகழேந்தியின் மகன் கபில்தேவ், 19. புதுச்சேரி கல்லூரியில், இரண்டாம் இண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். 12ம் தேதி, தேர்வு எழுதி விட்டு, வில்லியனூர் பைபாஸ் சாலை வழியாக, டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, லாரி மோதியதில்
விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த புதுச்சேரி மாணவரின் உடல் உறுப்பு தானம்

சென்னை:விபத்தில் காயமடைந்த புதுச்சேரி இன்ஜினியரிங் மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.புதுச்சேரி, தேங்காய்திட்டைச் சேர்ந்த புகழேந்தியின் மகன் கபில்தேவ், 19. புதுச்சேரி கல்லூரியில், இரண்டாம் இண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். 12ம் தேதி, தேர்வு எழுதி விட்டு, வில்லியனூர் பைபாஸ் சாலை வழியாக, டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, லாரி மோதியதில் பலத்த காயமடைந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் முன்னேற்றமின்றி, நேற்று மூளைச்சாவு நிலையை அடைந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கபில்தேவின் உடல் உறுப்புக்களை உறவினர்கள் தானம் செய்துள்ளனர். இதன்படி, கபில்தேவின், இரண்டு கண்கள், இரண்டு கிட்னி, கணையம் உள்ளிட்ட, ஏழு உடல் உறுப்புகள் தானம் செயப்பட்டுள்ளன. இதுகுறித்து, கபில்தேவின் அண்ணன் வினோத் கூறுகையில், ""இன்ஜினியராகி, வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவன் ஆசை நிறைவேறவில்லை. அவனது உடல் உறுப்புக்களாவது, ஏழைகளுக்கு பயன்படட்டும் என, தானம் செய்துள்ளோம். மற்றவர்கள் மூலம் என் தம்பி உயிர் வாழ்வான்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-அக்-201320:57:05 IST Report Abuse
D.Ambujavalli இவரின் பெற்றோர் மனித தெய்வங்கள்
Rate this:
Cancel
Raja Kumar Thangarajan - saalmiya,குவைத்
19-அக்-201322:16:40 IST Report Abuse
Raja Kumar Thangarajan நீங்கள் தான் கடவுள் என் சித்தி அவர்கள் கடந்த 5 ஆண்டு காலமாக ஒரு கிட்னி செயல் இழந்து,மறு கிட்னி யும் செயல் இழக்க ஆரம்பித்து விட்டது.தயவு செய்து உதவி செயுங்கள்..தொடர்புக்கு 8973470817
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-அக்-201321:28:15 IST Report Abuse
g.s,rajan இறந்தும் வாழ்கிறார், வேறு என்ன சொல்வது? ,இந்தியாவில் மனித உயிருக்கு மதிப்பு இருக்கிறதா ?ஏன் இந்த விபத்துக்கள் அடிக்கடி நடை பெறுகிறது ?சாலைகளில் விபத்துக்களை குறைப்பதற்கு உயிர் இழப்பைத் தடுக்க மிக மிகக் கடுமையான நடவடிக்கைகள்,விதி முறைகள் ,சாலை விதிகள் தேவை.அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் .அவருடைய பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ,சோகத்திலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளதே ,இது சாதாரண விஷயமல்ல ,அவர்களை அனைவரும் வணங்குவோம். . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X