சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மத போதகர் மீது பள்ளிமாணவி சில்மிஷ புகார்

Added : அக் 19, 2013
Advertisement

சேலம்:பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக, மதபோதகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.சேலம் அருகே வீராணத்தை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி ரேகா. இவர்களது, 13, வயது மகள், சேலம், சி.எஸ்.ஐ.,ஹோபார்ட் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை, பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த ஜெயசீலன் என்ற மதபோதகர் அழைத்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவி மற்றும் அவரது பெற்றோர், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், மதபோதகர் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர்.அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X