கருத்தரங்க கூடமாக புது சட்டசபை மாற்றம்: ஜன.17ல் நவீன மருத்துவமனை திறப்பு?

Updated : அக் 21, 2013 | Added : அக் 19, 2013 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் அன்று, இந்த கட்டடத்தில் அதிநவீன மருத்துவமனையை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. புது தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை கட்டடம், அதிநவீன கருத்தரங்க கூடமாக மாற்றப்பட்டுள்ளது. சட்டமேலவை கட்டடம் தற்போது, மருத்துவ ஆய்வரங்கமாக
கருத்தரங்க கூடம், புது சட்டசபை,நவீன மருத்துவமனை, Speciality hospital

சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலகத்தை, மருத்துவமனையாக மாற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் அன்று, இந்த கட்டடத்தில் அதிநவீன மருத்துவமனையை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. புது தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை கட்டடம், அதிநவீன கருத்தரங்க கூடமாக மாற்றப்பட்டுள்ளது. சட்டமேலவை கட்டடம் தற்போது, மருத்துவ ஆய்வரங்கமாக மாற்றப்பட்டு உள்ளது.

புது தலைமைச் செயலகத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றும் இந்த பணி, ஜனவரி மாதத்தில் இருந்து நடந்து வருகிறது. பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளர், கோபாலகிருஷ்ணன் தலைமையில், ஏழு உதவி செயற்பொறியாளர் கொண்ட தனிக்குழு, அங்கு முகாமிட்டு, கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

வார்டுகள்:


ஒவ்வொரு தளத்துக்கும், ஒரு உதவி செயற்பொறியாளர் வீதம், நியமிக்கப்பட்டுள்ளனர். பெரியதாக கட்டப்பட்ட அறைகள், இரண்டு வார்டுகளாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு தளத்தில் இருந்தும், நோயாளிகளை படுக்கையில் அழைத்துச் செல்ல, சாய்தளம் அமைக்கும் பணி, இரண்டு பக்கங்களிலும், தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது, மூன்று தளங்கள் வரை அமைக்கும் பணிகள் முடிந்து, நான்காம் தளததில் இருந்து, ஐந்தாம் தளத்துக்கு சாய்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே, மேலவைக்காக கட்டப்பட்ட கட்டடம், எந்த மாற்றமும் செய்யப்படாமல், சிறப்பு ஆய்வரங்க கட்டடமாகவும், சட்டசபை கட்டடம், கருத்தரங்கு கூட அரங்கமாகவும் மாற்றப்பட்டுள்ளது. பல்நோக்கு மருத்துவமனையில், பேராசிரியர், துறை தலைவர்களுக்கு, 90 கழிப்பறைகள் வீதம், மொத்தமாக, 560 கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. அனைத்து வார்டுகளிலும், முழுவதுமாக, 'ஏசி' அமைக்கும் பணி, முடியும் தறுவாயில் உள்ளது. அதேபோல், தரைத்தளம் மற்றும் முதல் தளம், புறநோயாளிகள் பிரிவாகவும், இரண்டாவது, மூன்றாவது தளங்கள் நிர்வாகம் மற்றும் அறுவை சிகிச்சை அறைகளாகவும், நான்காம் தளம், அவசர சிகிச்சை பிரிவாகவும், ஐந்து, ஆறாவது தளங்கள் உள்நோயாளிகள் சிகிச்சை வார்டுகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

500 பேர்:


நவம்பர் மாத இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க, பொதுப்பணித் துறை திட்டமிட்டு உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களோடு, தினமும், 500க்கும் மேற்பட்ட தொழிலாளர், கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நவம்பர் இறுதிக்குள், கட்டுமானப் பணிகளை முடித்து, அதன் பிறகு, மருத்துவமனைக்கான உபகரணங்கள் அமைத்து, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான ஜனவரி, 17ல், பல்நோக்கு மருத்துவமனை செயல்படத் துவங்கும் என, தெரிகிறது.- நமது நிருபர் -புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (22)

Justin - marthandam,இந்தியா
21-அக்-201314:55:08 IST Report Abuse
Justin என்னக்கு ஒரே ஒரு சந்தேகம்தான், ஐந்நூறு பேர் அமர்வதற்குக்கூட தகுதியில்லை என்று கூறி ஒதுக்கிய கட்டிடம் , இப்போது எப்படி பல்நோக்கு மருத்துவமனையாக்க தகுதி ஆச்சு? இதிலிருந்தே தெரியவில்லையா அரசியல் நாடகம். திமுக திரும்ப வந்தால் பழயபடி மாறாதா? இவர்களுக்கு அரசியல் பழி தீர்க்க மக்கள் வரிப்பணம்தான் கெடச்சுதா? எல்லாம் தமிழனின் தலைவிதி....
Rate this:
Cancel
Ariff - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-அக்-201313:25:16 IST Report Abuse
Ariff மருத்துவ மனையாக உபயோகப்படும் அளவுக்கு தரமானதாக கட்டிய கலைஞர் அவர்களுக்கு நன்றி.
Rate this:
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
20-அக்-201317:02:42 IST Report Abuse
K.Sugavanamஅங்க கட்டடம் கட்டினதே வேற காரணத்துக்காக..அவரை வைத்த மத்திய சிறை வரலாற்றில் இருக்க கூடாது என்பதற்காக.அதான் மசொலியம் மாதிரி எழுப்பினாரு..கடசீல இந்தியன் ஆயில் டேங்க்கு மாதிரி ஆயிட்டு....
Rate this:
villupuram jeevithan - villupuram,இந்தியா
20-அக்-201318:37:39 IST Report Abuse
villupuram jeevithanஎந்த கல்லூரியில் படித்தார்?...
Rate this:
Cancel
krishna - cbe,இந்தியா
20-அக்-201312:31:21 IST Report Abuse
krishna ஆக மொத்தத்தில் மக்களின் வரி பணம் வீணடிக்க பட்டுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X