நித்யானந்தா பாதங்களை கழுவி பாத பூஜை செய்தனரா மாணவர்கள்?

Updated : அக் 21, 2013 | Added : அக் 19, 2013 | கருத்துகள் (76)
Share
Advertisement
Nithyananda,  students,e child welfare panel,நித்யானந்தா, பாத பூஜை,? குருக்கள் பள்ளி, மாவட்ட கலெக்டர்

பெங்களூரு: 'பிடதி ஆசிரமம் சார்பில் நடத்தப்படும், குருக்கள் பள்ளியில், நித்யானந்தா பாதங்களை கழுவி, பாத பூஜை செய்ய வேண்டும்' என, மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், "மாணவர்களை தன் முன், ஆஜர்படுத்த வேண்டும்' என, ராம் நகர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரில் உள்ள, பிடதி, நித்யானந்தா ஆசிரமம் சார்பில், "ஸ்கூல் ஆப் தாட்ஸ்' என்ற குருக்கள் பள்ளி நடத்தப்படுகிறது. இந்த பள்ளியில், 80 மாணவர்கள் படிக்கின்றனர். கல்வித் துறையின், பாட முறைகள் இங்கு இல்லை. நித்யானந்தா எழுதிய, "உலக சரித்திரம்' என்ற நூலை மையமாகக் கொண்டு, பாடம் நடத்தப்படுகிறது. கடந்த, 2010ல், நித்யானந்தா மீது பாலியல் புகார் எழுந்த பின், இப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மற்ற பள்ளிகளில், அட்மிஷன் கிடைக்கவில்லை. நித்யானந்தா ஆசிரமம் சார்பில், மலேசியாவில் நடத்தப்படும், குருக்கள் பள்ளியை, நல்ல முறையில் நிர்வகிக்க, பெண் சீடர் ஒருவரை, 2005ல், நித்யானந்தா அனுப்பினார். அந்தப் பெண் சீடரின் மகன், பிடதி ஆசிரம குருக்கள் பள்ளியில் படித்து வந்தான். அந்தச் சிறுவன், திடீரென விஷம் குடித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அதனால், மலேசியாவிலிருந்து திரும்பும்படி, அவனின் தாயாருக்கு தகவல் அனுப்பப்பட்டது. அந்தப் பெண் சீடரும் பெங்களூரு திரும்பி, மருத்துவமனையில் விசாரித்த போது, மகன் விஷம் குடித்ததை அறிந்தார். இதையடுத்து, போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில், "பிடதி ஆசிரமத்தில், என் மகனை கொடுமை செய்துள்ளனர். அதனால் தான், அவன் விஷம் குடித்துள்ளான். இந்த விவகாரத்தை, ஆசிரம நிர்வாகிகள் மறைக்க முற்படுகின்றனர்' என, தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடகா, குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: நித்யானந்தா ஆசிரம பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, காவி உடை கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வேலைகளையும் அவர்களே செய்ய வேண்டும்; அடிமை போன்று நடத்தப்படுகின்றனர். நித்யானந்தாவின் காலைக் கழுவி, மாணவர்கள், அவ்வப்போது பாத பூஜை செய்ய வேண்டும். பள்ளியை நடத்த, கர்நாடகா அரசிடமோ, குழந்தைகள் நலத்துறையிடமோ, பிடதி ஆசிரமம் அனுமதி பெறவில்லை. அங்கு படிக்கும் பல மாணவர்கள், தற்கொலைக்கு முற்பட்டுள்ளனர். பள்ளியை நீண்ட நாள் நடத்த முடியாது என்று தெரிந்ததும், லண்டனில் நடத்த, நித்யானந்தா, அனுமதி கேட்டுள்ளார். ஜூனில், குழந்தைகள் நலத்துறையினர், பள்ளியை பார்வையிடச் சென்றபோது, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, பிடதி ஆசிரம ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. பள்ளி மீது நடவடிக்கை எடுப்பது பற்றி, அரசு ஆலோசித்து வருகிறது. இவ்வாறு குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், சில மாணவர்களின் பெற்றோர், ராம் நகர் மாவட்ட கலெக்டரிடம், புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், "பிடதி ஆசிரமத்தில், எங்கள் குழந்தைகளை அடிமை போன்று நடத்துகின்றனர்; கொடுமைப்படுத்துகின்றனர். அவர்களை மீட்டுத் தர வேண்டும்' என, தெரிவித்துள்ளனர். இதையடுத்து, "குருக்கள் பள்ளி மாணவர்களை, தன் முன் ஆஜர்படுத்த வேண்டும்' என, பிடதி ஆசிரமத்துக்கு, ராம் நகர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rammi - Bangalore,இந்தியா
24-அக்-201310:14:57 IST Report Abuse
Rammi நான் இவரது ஆசிரமத்திற்கு ஒரு முக்கிய பதவி வகிப்பதர்காக சென்றேன். எனக்கு தனியாக ரூம் கொடுத்தார்கள் . காலையில் பார்த்தல் சின்ன சின்ன வாண்டுகள் எல்லாம் அவனை போல காவி உடை அணிந்து சந்நியாசி வேடம் தரித்திருதார்கள். அங்கே ஒரு welcome center என்ற இடத்தில போய் பார்த்தால் சிறுவர் சிறுமி எல்லாம் அவன் படங்களை கழுவி பூஜை செய்தார்கள். அவர்கள பெற்றோர்கள் யாராவது பார்க்க வந்தால் உள்ளே உடனே விடமாட்டார்கள். 3 மணி நேரம் களித்து தான் பார்கவிடுவார்கள். இந்த கொடுமையை பார்து நான் ஓடி வந்துவிட்டேன்.
Rate this:
Cancel
jeans bala - CHENNAI,இந்தியா
21-அக்-201311:01:18 IST Report Abuse
jeans bala கருத்து கொடுத்த அனைவருக்கும் நன்றிகள் பல .................. நீங்கள் அனைவரும் நல்லவரா? முதலில் உங்கள் முதுகை பாருங்கள் பின்பு இவரை பற்றி கமெண்ட் கொடுக்கலாம் இவரை பற்றிய விமர்சனம் பத்திரிகையில் வந்துவிட்டது உங்களை பற்றி வரவில்லை ஒரு நிமிடம் கண்களை மூடி நீங்கள் நல்லவரா என உங்கள் உள்மனதை கேட்டுபாருங்கள் உண்மை புரியும் ஏன் இந்த தனி மனிதர் விமர்சனம் தேவையில்லை ........நீங்கள் செய்யும் இந்த பாவம் உங்கள் பிள்ளைகளை தாக்கும் ஏன் இந்த விபரீத விளையாட்டு தந்தி பேப்பரில் இவரை பற்றி அசிங்கமாக போடோஸ் கொடுத்த பேப்பர் இன்று அவர் தந்தி டிவியில் programmee செய்கிறார் உலகம் உருண்டை இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை .................நட்புடன் ஜீன்ஸ் மக்கான்
Rate this:
Cancel
ramaswamy - PUDUCHERRY ,இந்தியா
20-அக்-201322:00:38 IST Report Abuse
ramaswamy பணமும் கொடுத்து, பெண்ணும் கொடுத்து பாதம் கழுவ அமெரிக்க வாழ் மேதைகள் இருக்கும்போது சிறு மாணவர்களை கால் கழுவ செய்ய தேவை இல்லை. இது பொய் செய்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X