உரத்த சிந்தனை : உயிர் பெறுமா நீதியின் குரல்- இன்னம்பூரான்

Updated : அக் 19, 2013 | Added : அக் 19, 2013 | கருத்துகள் (4) | |
Advertisement
“தொகுதிக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கும் அன்யோன்யமான தொடர்பு இருக்க வேண்டும். தொகுதியின் தேவைகளை நிறைவேற்றவும், மக்களின் அபிலாஷைகளை மதிக்கவும், கருத்துக்களை கேட்டறியவும் தொகுதி பிரதிநிதி பாடுபட வேண்டும். மக்களும், அவருடைய பாவனைகள் தங்கள் பக்கம் திருப்பவும், அவைகளை தட்டிக் கேட்கவும் முயல வேண்டும்...”இந்திய அரசியல் சாசன கூட்டுக்குழு அறிக்கை:
உரத்த சிந்தனை : உயிர் பெறுமா நீதியின் குரல்- இன்னம்பூரான்

“தொகுதிக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கும் அன்யோன்யமான தொடர்பு இருக்க வேண்டும். தொகுதியின் தேவைகளை நிறைவேற்றவும், மக்களின் அபிலாஷைகளை மதிக்கவும், கருத்துக்களை கேட்டறியவும் தொகுதி பிரதிநிதி பாடுபட வேண்டும். மக்களும், அவருடைய பாவனைகள் தங்கள் பக்கம் திருப்பவும், அவைகளை தட்டிக் கேட்கவும் முயல வேண்டும்...”

இந்திய அரசியல் சாசன கூட்டுக்குழு அறிக்கை: முதல் பாகம் -1933-34. (இங்கிலாந்து பிரபுக்கள் மன்றமும், மக்கள் சபையும்: பக்கம் 110)அன்றாட அரசியல் நிகழ்வுகள், மக்கள் மன்றத்தில் அலசப்படும் போது, அவற்றின் பின்னணிகளும், அடித்தளங்களும் மறக்கப்படுவதையும், மறைக்கப்படுவதையும் கண்கூடாகக் காண்கிறோம்.தற்போது, நமது இந்திய பார்லிமென்டே சர்ச்சைக்கு உட்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் சிலரின் அணுகுமுறைகளும், செயல்பாடுகளும், ஒழுங்கீனங்களும், கவலையைத் தருகின்றன.மக்களாட்சியின் மேலாண்மை குலைந்து விட்டது என்ற பேச்சு, ஊடகங்களில் மிகவும் அடிபடுகிறது. ஜனநாயகம் தான், சுதந்திர இந்தியாவின் ஆணிவேர் என்பது, இந்திய அரசியல் சாசனத்தின் முத்திரை. குந்தகம் விளையாமல் அதை பாதுகாப்பது நம் கடமை. அதை செவ்வனே நிறைவேற்ற, பின்னணிகளையும், அடித்தளங்களையும், தற்காலத்து விவாதங்களிடமிருந்து சற்றே தள்ளி நின்று, பரிசீலிப்பது நலம் பயக்கும்; நடுநிலை ஆய்வுகளை முன் கொணரும்.ஜனநாயகத்தின் பல பரிமாணங்களை தனித்தும், தொகுத்தும் புரிந்து கொள்வதால், பொது மக்களில் ஒவ்வொருவரும் தமது வாக்கை அளிப்பது முதல், பிரதிநிதி, அரசு நிர்வாகம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். பொது நலம் சார்ந்த கருத்துக்களை அமலாக்குவதைத் துரிதப்படுத்த முடியும். அதற்கான வேத பாடம் தான், மேற்கோளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சாக்கோ தலைமையிலான, பார்லிமென்ட் கூட்டுக்குழு, 'ஸ்பெக்ட்ரம்' ஊழல் விவகாரத்தில், இறுதி அறிக்கையை நிறைவேற்றி, தோழமை கட்சியான, தி.மு.க., உட்பட, முக்கிய கட்சிகளிடமிருந்து எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டுள்ளது. இது புதிது அல்ல. இன்று வரை, இந்தியாவின் பார்லிமென்ட் கூட்டுக்குழுக்களின் சாதனைகள் சொல்லிக் கொள்ளும் மாதிரி இல்லை. எல்லாம் இழுபறி தான்.மாநில சட்டசபைகளும், பார்லிமென்டும் பலவிதமான, பளுவான கடமைகளை ஆற்றுவதால், அவை குழுக்கள் மூலமாக இயங்குவது உலகளாவிய நடைமுறை.தணிக்கை அறிக்கைகளை ஆராயும் பொதுக்கணக்குக் குழு, மனுக்களை ஆராயும் குழு, அரசு கம்பெனிகளை ஆராயும் குழு, ஒவ்வொரு துறையையும் கண்காணிக்கும் குழு போன்றவை, எப்போதும் நிலுவையில் உள்ளவை.குறிப்பிட்ட நடவடிக்கையை ஆராய, இரு மன்றங்களும் ஒத்துப்போய் அல்லது அவைத் தலைவர்கள் தீர்மானித்து, குழுக்கள் நியமிக்கப்படுவது உண்டு. அவை தான் கூட்டுக்குழுக்கள்.

நமது அரசியல் சாசனமோ, பார்லிமென்ட் மரபோ, அவற்றை பற்றிய வரையறைகளை விதிக்கவில்லை. அதன் காரணம், பார்லிமென்டின் ஆளுமையை மதிக்கும் அணுகுமுறை. ஆனால், ஒவ்வொரு கூட்டுக்குழுவும் விட்ட குறை தொட்ட குறையாகவே இயங்கியுள்ளன.இந்திய அரசியல் சாசனம், 1950ல் அமலுக்கு வந்தது. 37 ஆண்டுகளுக்கு கூட்டுக்குழு அமைக்க வேண்டிய நிர்பந்தம் நமது குடியரசுக்கு ஏற்படவில்லை. தணிக்கை அறிக்கைகளை ஆராயும் பொதுகணக்குக் குழுவின் தலைமை, முக்கிய எதிர்க்கட்சிக்கு என்ற அருமையான மரபு ஆளும் கட்சிக்கு தர்மசங்கடமானது.போபார்ஸ் பீரங்கி விவகாரம், 1987ல் தலையெடுக்க, உபத்ரவம் தாங்காமல் ஆளும் கட்சி, ஒரு கூட்டுக்குழுவுக்கு அடிகோலியது. எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தது. அதன் அறிக்கையை நிராகரித்தது.அடுத்த இரண்டு கூட்டுக்குழுக்களும் (1992, 2001) தாறுமாறான பங்குச்சந்தை வஞ்சகங்களை ஆராய்ந்தன. அவற்றின் அறிக்கைகளின் மேல் சொல்லிக் கொள்ளும் படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. குளிர்பானங்களில் கிருமிநாசினிகள் கலந்துள்ளன என்ற குற்றச்சாட்டை விசாரித்த கூட்டுக்குழுவின் அறிக்கை, அந்த குற்றச்சாட்டு உண்மை என்றது. அத்துடன் சரி. எந்த நடவடிக்கையும இல்லை.

குளிர்பானங்கள் இன்றும் சக்கை போடு போடுகின்றன. குடிநீர் பிரச்னை தீரவும் இல்லை. அடுத்த கூட்டுக்குழு ஸ்பெக்ட்ரம் சிக்கலை பற்றியது. அது தான் இந்த பாடு படுகிறது. 30 உறுப்பினர்களில் பாதி, அதாவது, 15 உறுப்பினர்கள், 'குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லை' என்று, லோக்சபா சபாநாயகரிடம் மனு கொடுத்து வரலாறு படைத்தனர். ஆக மொத்தம், கூட்டு இல்லை. எல்லாம் வழ வழ, கொழ கொழ தான்!'வருமுன் காப்போன்' ஆகிவிட்ட அரசு நிர்வாகம், ஹெலிகாப்டர் ஊழல் பற்றி விசாரிக்க ஒரு கூட்டுக்குழுவுக்கு ஏற்பாடு செய்து விட்டது. மேற்படி நடவடிக்கைகளை சீர் துாக்கிப் பார்த்தால், எதிர்க்கட்சி தலைமையில் இயங்கும் பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கைகளை நீர்த்துப் போக செய்யத் தான் இந்த கூட்டுக்குழு உபாயம் பயன்படுவதாக, நமது பார்லிமென்ட் வரலாறு கூறுகிறது.சுருங்கச் சொல்லின், இதுவரை இந்திய பார்லிமென்டின் கூட்டுக்குழுக்கள் அவசியமான பின்னணியில் நியமிக்கப்படவில்லை; அவை பிரதிநித்துவ ஜனநாயகத்துக்கு இணங்க நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டதாக சொல்வது கடினம். பொதுக்கணக்குக் குழுவின் அறிக்கைகளை நீர்த்துப் போக செய்வது, இந்திய அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல் என்றால், அது மிகையாகாது.
innamburan@gmail.com

- இன்னம்பூரான் -
தமிழ் ஆர்வலர்/இந்திய தணிக்கை துறை துணைத்தலைவர் (ஓய்வு)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (4)

Manian - Chennai,இந்தியா
08-டிச-201303:06:43 IST Report Abuse
Manian Sorry that this site did not allow me to write in Tamil due to missing "A" button and ctrl+g doe snot work. Before we try to find solution, the only country with new constitution is USA. In 1876, 9 states of 12, agreed to a constitution. Jefferson is one of those finding fathers. When he took the proposal to his state North Carolina, ordinary people - called agriculture workers told Jefferson, the constitution needs changes and they gave 12 amments. Ten of then were incorporated into the US constitution. That includes freedom of speech, ownership of intellectual and physical properties and so on. What the founding fathers did not anticipate was that their future leaders may not be as honest and sincere as themselves. This is a common trait among us too - our children will be as honest, educated, loving and caring etc. So, they did not add an amment against "corruption". US is suffering now because of the lack of such constitutional safe guard. Remember fundamental rights can not be amed by congress in US, unlike in India it is a common practice. African countries have the same problem - corruption, Arabs have it, Chinese have it and so on. So, our solution is to demand a constitutional amment that states "corruption is a crime against all Indians and it sovereignty with a maximum punishment of death". If the bribe is up to Te.10,000, 5 years jail, lose of job and confiscation of property, if it is Re 1 lakhs and up to 10, Re lakhs, all the above and denial of all social and economic benefits to the offers family for 2 generations, if the bribe is abov e10 lakhs but less than 1 crore, all the above, confiscation or pro[erty and jail for life to the entire family including children, and over that amount, all and expulsion from India. The goal is to minimize the corruptiona and some corruption still will be there such as a PM and SC judge taking bribe which can be suitably taken care by the president and a tribunal. People should join Anna Hazare and go on national strike and fasting - no violence of any sort and force the parliament to am the constitution without allowing any amment and exception to this rule. In about 20 years, India will then join Sweden, Denmark, Norway and other scandinavian countries and law and order will take place. No commission or agency d without this constitutional amment will work. Are the people ready?
Rate this:
Cancel
r.sundararaman - tiruchi,இந்தியா
20-அக்-201310:48:09 IST Report Abuse
r.sundararaman நாட்டில் நேர்மையுடன் தணிக்கை பணிசெய்து அறிக்கைகொடுத்து மேல்நடவடிக்கை என்பது தொடரப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்று நீதி நிலைநாட்டப்பட்டு நடவடிக்கை எடுத்தால் பின் விளைவுகள் மிக விபரீதமாக இருக்கும் .என்னெனில் உயர் அதிகாரிகளின் வெறுப்புதான் மிஞ்சும் .அதேபோல் தொழில்நுட்ப தனிக்கைஎன்றால் கேட்கவே வேண்டாம் .பெரும் முதலீடுகள் செய்து செயல்படும் திட்டங்கள் என்றல் அரசின் பல்வேருதுறைகளும் அதில் தனது அதிகாரத்தை காட்டி செயல்பாடுகளை இழுத்தடிப்பார்கள் அரசியல் வாதிகளின் விருப்பம் எப்படியும் நிறைவேற்றியே ஆகவேண்டும் .அரசியலுக்கு வருவதே பணம் பண்ணத்தான் என்பதாக நிகழ்வுகள் உள்ளன .இப்போது புதையல் தேடி மக்கள் அவரவர்கள் தங்களுக்கே பூமிக்கடியில் செல்வங்கள் புதைந்துள்ளதாக நினைக்கவைக்கும் நிலையில் கற்பனை கனவுகளில் மக்களும் தலைமுறைகளுக்கு பெரும் செல்வ குறிக்கோளுடன் இயங்கும் சுயநல நோக்குடைய பதவிப்பித்தர்களினால் நாட்டின் வளங்கள் கொள்ளைபோகும் நிலையை தணிக்கையினால் தடுக்க முடியுமா ?தணிக்கை என்றாலே குற்றம் கண்டுபிடிப்பதாக கருதும் நிலையில் தணிக்கை பயன் படுத்தி தவறுகள் நடக்காமல் இருக்க வழிமுறைகள் காண முயலவேண்டும் .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-அக்-201309:39:24 IST Report Abuse
g.s,rajan குழு ,கமிட்டி ,கமிஷன் இந்தியாவில் பலன் தராது .இந்தியாவில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு தகுந்த தண்டனை இல்லை அதுதான் இஷ்டப்படி ஆடுகின்றனர் .அவர்களின் கொட்டத்தை ஒடுக்க வேண்டும் .ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X