பதிவு செய்த நாள் :
கருத்துகள் (82)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

டிசம்பரில் வெளியாகும், ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு, கூட்டணியை முடிவு செய்து கொள்ளலாம். அம்மாநில தேர்தல் முடிவுகள், பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்தால், பல கட்சிகள் நம்மை தேடி வரும். அப்படியொரு சூழ்நிலை வரும் வரை பொறுத்திருங்கள். அதுவரை, கூட்டணியை பற்றி கவலைப்படாமல், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுங்கள்' என்று, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அறிவறுத்தியுள்ளார்.

சென்னை வந்த பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, தமிழக நிர்வாகிகளுடன் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த, அந்த கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
அதில், அவர் அதிகம் பேசாமல், கட்சியினரை பேச விட்டு, அவர்கள் கருத்துக்களை கேட்பதில் தான் அதிக ஆர்வம் காட்டினார். பேசிய சிலர், கூட்டணி பற்றி கேள்விகள் எழுப்பியுள்ளனர். எந்த கட்சியுடன் கூட்டு சேர்ந்தால், வெற்றிக்கு வழி வகுக்கும் என்ற யோசனையையும் கூறியுள்ளனர்.
அப்போதெல்லாம் குறுக்கிடாத மோடி, "கூட்டணியை மேலிடம் முடிவு செய்யும்' என்று தெரிவித்துள்ளார்.தான் பேசும் போது, கடைசியில், "கூட்டணி விஷயத்தை மேலிடம் பார்த்துக் கொள்ளும்' என்ற தகவலை மட்டுமே தந்துள்ளார். ஆனால், அதற்கு முன்பாக, அவர் கட்சியின் முன்னணி தலைவர்கள், இல.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா போன்ற சிலருடன் தனியாக பேசிய தகவல், இப்போது வெளியாகி உள்ளது.

அதற்கு முன்பாக, "வைபரன்ட் குஜராத்' என்ற நிகழ்ச்சிக்காக, தேசிய செயலர் தமிழிசை சவுந்தரராஜன், ஆமதாபாத் சென்றிருந்தார். அங்கே, மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்புகளின் போது, கூட்டணி குறித்து சில கருத்துக்களை, மோடி, அவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அது பற்றி கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அ.தி.மு.க., தலைமைக்கு, பா.ஜ., தரப்பில் இருந்து தூது அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பா.ஜ., மேலிடம் எதிர்பார்த்த பதில் வரவில்லை. மேலும், தேசிய அளவில் மூன்றாவது அணிக்கு, தலைமை ஏற்கும் திட்டத்தில், அ.தி.மு.க., தலைமை இருப்பதும் தெரியவந்துள்ளது.


தேசிய அளவில், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில், மார்க்சிஸ்ட் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்காக, வரும், 30ம் தேதி, டில்லியில் ஒரு கூட்டம் நடத்தப்படுகிறது. அதற்கு வருமாறு, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பும் விடப்பட்டுள்ளது.இதற்கிடையில், ஏற்காடு இடைத் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு, மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. இதெல்லாம், அ.தி.மு.க., மூன்றாவது அணியை நோக்கி பயணிப்பதையே காட்டுகிறது. ஆனால், அ.தி.மு.க., விஷயத்தில், மார்க்சிஸ்ட் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பது சந்தேகம். ஏனெனில், மூன்றாவது அணிக்கு, யார் தலைமை தாங்குவது என்பதில், எளிதில் உடன்பாடு ஏற்படாது.

முலாயமா, ஜெயலலிதாவா என்ற போட்டி எழும். தேர்தலுக்கு பிறகு, அதை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று, கம்யூனிஸ்ட் கட்சி யோசனை சொல்லும்.

Advertisement

ஆனால், அந்த யோசனையை ஜெயலலிதா ஏற்க மாட்டார். எனவே, ஜெயலலிதாவின் திட்டம் முழுமை பெறுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இப்போதுள்ள நிலையில், தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி குறித்து பேசும் நிலை இல்லை. டிசம்பரில் முடியும், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வரட்டும். ஐந்து மாநிலங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பது தான் பா.ஜ., இலக்கு. அந்த குறிக்கோள் தான் இப்போது முக்கியம். அப்படியொரு நிலை வந்தால், பல கட்சிகள், பா.ஜ., தலைமையில் அணி சேர தேடி வரும். தமிழகத்தில் பலமான கூட்டணி அமையும். அதுவரை பொறுத்திருங்கள். இப்போது, தேர்தல் பணிகளை தீவிரமாக செய்யுங்கள்.இவ்வாறு, கூட்டணி விவகாரம் குறித்து, மோடி கூறியதாக, அந்த நிர்வாகி தெரிவித்தார்.

நமது சிறப்பு நிருபர்

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (82)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
guruprasath - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-அக்-201300:21:18 IST Report Abuse
guruprasath நாட்டில் மோடி அலை வீசுவது உண்மை தான்...ஆனால் தமிழகத்தில் கலைஞர் எதிர்ப்பு அலை அதை விட வேகமாய் வீசுவதும் நிதர்சனமான உண்மை...ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்காத கதையாய் தப்பி தவறி கலைஞருடன் கூட்டு சேர்ந்தால் பன்றியுடன் சேர்ந்த பசுவும் அழிந்த கதையாய் ஆகி விடும்...தனித்து ம.தி.மு.க, தே.மு.தி.க போன்ற கட்சிகளுடன் நில்லுங்கள் 4,5 சீட்டுகள் வந்தாலும் தன்மானத்தில் நீங்கள் தலை நிமிர்வீர்கள்..கூடாத இடத்தில் சேர்ந்து பெருமைக்கு எருமை வாங்க நினைத்து பெருமையும் போய் எருமையும் போன கதையாய் ஆகிவிடும்..இளைஞர்களிடம் இப்பொழுதே பாதி வெற்றியை அடைந்து விட்டீர்கள்..மீதியை நீங்கள் எடுக்கும் முடிவே தீர்மானிக்கும்...
Rate this:
Share this comment
Cancel
saravanan - trichy,இந்தியா
20-அக்-201322:26:38 IST Report Abuse
saravanan பா ஜ க ல தலைவர்கள் அதிகம் தமிழ்நாட்டுல ........ ஆனா தொண்டர்கல தான் பாக்கமுடியல... திருச்சி மீட்டிங்குக்கு பா ஜ க தலைவர்கள் இன்டர்நெட் மூலமா ஊழல் செய்து ....மக்கள் முன் பதிவு செய்து வந்ததாக ....அறிவிப்புகள் விடுவது மிகப்பெரிய காமெடி.......
Rate this:
Share this comment
Cancel
Sellamuthu Kandasamy - Musiri,இந்தியா
20-அக்-201321:33:05 IST Report Abuse
Sellamuthu Kandasamy கூட்டணி சேர்ந்து மக்களை ஏமாத்த நினைக்கராங்கையா. யாரவது தனியா நிப்போம் என்று சொல்கிறார்களா. கூட்டு சேர்ந்து ஜெயிச்சதும் தன்னுடைய சுய புத்திய காட்டுவது நம் வழக்கம். மோடி கூட இந்தியாவில மக்களவை தேர்தலில் ஒவ்வொருவரும் தனித தனியா நிப்போம். எந்த வேட்பாளர் அதிக வோட்டு வாங்கராரோ அவரை பிரதமராக்குவோம் என்று சவால் விட்டால் தேர்தல் சூடு பிடிக்கும்.இது எப்படி இருக்கும்?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
20-அக்-201320:34:24 IST Report Abuse
Natarajan Ramanathan கோவையில் எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு குஜராத்திகாரர் குடும்பத்தோடு குஜராத் சென்று மோடிக்கு ஒட்டு போட்டார். அந்த உணர்வுடன் நாமெல்லாம் மோடிக்கு இந்தமுறை வாய்ப்பு அளித்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும். இன்னும் ஒருமுறை காங்கிரெஸ் வந்தால் இறைவனாலும் இந்தியாவை காப்பாற்றமுடியாது.
Rate this:
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
20-அக்-201319:06:47 IST Report Abuse
S.M.Noohu பொறு.... பொறு... எத்தனை காலம் தான் பொறுப்பது ? பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் ஏற்காட்டில் ... அப்போ தெரிந்து போகுமல்லவா உங்களுக்கு இருநூறு ஒட்டு இருக்கா ? முன்னூறு ஒட்டு இருக்கான்னு , மலரு நல்லாவே உசுப்பேத்துது.
Rate this:
Share this comment
Cancel
Indian - salem,இந்தியா
20-அக்-201318:53:12 IST Report Abuse
Indian மூச்சுக்கு 300 தடவை அம்மா அம்மா என்று சொல்லி பழகபட்டவர்கள், மோடி அல்லது எவர் ஒருவரின் சாதனையும் தமிழ்நாட்டில் சொல்லவோ / செய்யவோ அனுமதிக்கமாட்டார்கள்.
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load.asp, line 349