பொது செய்தி

இந்தியா

14 பேருக்கு மரண தண்டனை ஆயுளாக குறைப்பு : ஜனாதிபதி கருணை

Updated : செப் 13, 2010 | Added : செப் 12, 2010 | கருத்துகள் (70)
Advertisement

புதுடில்லி : கடந்த இரண்டு மாதங்களில் 14 பேரின் கருணை மனுவை அனுமதித்த ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார்.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: கொலை வழக்குகளில் மரண தண்டனை பெற்றவர்கள், இறுதி வாய்ப்பாக ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பிக்கலாம். அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டு, கருணை மனு தாக்கல் செய்த 14 பேரின் மனுக்கள் கடந்த இரண்டு மாதங்களில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பரிசீலனைக்கு வந்தன. அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக ஜனாதிபதி குறைத்து உள்ளார்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக 17 பேரை கொன்று குவித்த பியாராசிங் மற்றும் அவரின் மூன்று மகன்களான சரப்ஜித்சிங், சத்னாம் சிங், குருதேவ் சிங் ஆகியோர் தண்டனை குறைக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள். இவர்களின் கருணை மனுக்கள் 1991ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தன. இதேபோல், சொத்தை அபகரிப்பதற்காக தன் மாமா, அவரின் மூன்று சிறிய குழந்தைகள் உட்பட ஐந்து பேரை ஒட்டு மொத்தமாக கொன்ற தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இவருக்கு மரண தண்டனையை ஊர்ஜிதம் செய்த சுப்ரீம் கோர்ட், இவரது கொடூரத்தைக் கடுமையாக சாடி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இவர்கள் தவிர உ.பி.,யில் வீடு ஒன்றுக்குள் புகுந்து, அங்கிருந்த மூன்று பேரை கொன்று, அவர்களின் தலையை துண்டித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றதோடு, பத்து வயது சிறுவனை சுட்டுக் கொன்று, அவனது உடலை தீயில் தூக்கி வீசிய, ஷெரோம், ஷியாம் மனோகர் மற்றும் நான்கு பேரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த மறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், இவர்களின் தண்டனையை ஜனாதிபதி குறைத்துள்ளார். உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையில், "இந்த கொலைகாரர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம். ஆனாலும், அவர்கள் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும்.  பரோலில் அவர்களை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது' என, தெரிவிக்கப் பட்டுள்ளது. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட இவர்கள் எல்லாம், ஏற்கனவே 10 ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து விட்டனர். இவ்வாறு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.

மரண தண்டனை கைதிகள் 14 பேரின் தண்டனையை குறைத்தது பல்வேறு தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனையும் இதுபோல குறைக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அப்சல் குரு விவகாரத்தில் ஜனாதிபதி தன் அதிகாரத்தை எப்படி பயன்படுத்தப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வேதை தமிழன் - நாகைமாவட்டம்,இந்தியா
13-செப்-201022:58:56 IST Report Abuse
வேதை தமிழன் இது போன்ற கொடூர கொலை செய்தவர்களை கருணை மனு என்கின்ற போர்வையில் ஆயுள் தண்டனையாக குறைத்தால் பிறகு எப்படி இது போன்ற கொடூரங்களை மற்றவர்கள் செய்ய பயப்படுவார்கள் இதனால் குற்றம் செய்பவர்கள் எப்படியும் உயிர் தப்பிவிடலாம் என்று துணிந்து குற்றம் செய்வார்கள் இவர்களை மன்னிக்கவே கூடாது அப்படி மன்னிப்பதாக இருந்தால் பிறகு எதற்கு கோர்ட்டு,நீதிபதி என்று வீணாக மக்கள் பணத்தை விரயம் செய்ய வேண்டும் பேசாமல் காவல் நிலையத்திலிருந்து நேரடியாக அதிபர் (ஜனாதிபதி) க்கு பார்வைக்கு வழக்கை அனுப்பி அப்பொழுதே கருணை காட்டி ஆயுள் தண்டனை என்று வழங்கி விடலாம்.
Rate this:
Share this comment
Cancel
சிவகுமார் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
13-செப்-201022:51:40 IST Report Abuse
சிவகுமார் தலைவர் அப்துல் கலாமை தவிர மற்ற ஜனாதிபதிகள் எல்லாம் ரப்பர் ஸ்டாம்ப்தான்
Rate this:
Share this comment
Cancel
ஷாகுல் ஹமீது colachel - துபாய்UAE,இந்தியா
13-செப்-201022:44:21 IST Report Abuse
ஷாகுல் ஹமீது colachel இதனால் தான் இன்னும் தவறுகள் நடந்துக்கொண்டே இருக்கு. தவறு செய்தால் தண்டனை கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும் தண்டனை எக்காரணம் கொண்டும் மாற்றகூடாது. அப்பத்தான் நம் நாட்டில் குற்றங்கள் குறையும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X