இந்திய வெங்காயம் கிலோ 1-க்கு : உள்ளூரில் ரூ.80 வெளிநாட்டில் ரூ.45

Updated : அக் 26, 2013 | Added : அக் 26, 2013 | கருத்துகள் (38)
Share
Advertisement
மால்டா: இந்தியர்களின் இல்லங்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் ரூ.80 வரையில் விலை உயர்ந்துள்ள வெங்காயம் எல்லைப்பகுதியான வங்க தேசத்தில் ரூ.45-47க்கு கிடைக்கிறது.விண்ணைத்தொடு்ம் விலை: நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை காரணமாக தங்கத்தின் விலையுடன் போட்டி போட்டுக்கொண்டு விலையேற்றத்தை கண்டும் வெங்காயத்தின் விலையை கண்டு நடுத்தரமக்கள் கலங்கி போய் உளளனர். கடந்த
ndian onions selling for Rs 45 in Bangaldesh

மால்டா: இந்தியர்களின் இல்லங்களில் கண்ணீரை வரவழைக்கும் வகையில் ரூ.80 வரையில் விலை உயர்ந்துள்ள வெங்காயம் எல்லைப்பகுதியான வங்க தேசத்தில் ரூ.45-47க்கு கிடைக்கிறது.


விண்ணைத்தொடு்ம் விலை:

நடப்பு நிதியாண்டில் பற்றாக்குறை காரணமாக தங்கத்தின் விலையுடன் போட்டி போட்டுக்கொண்டு விலையேற்றத்தை கண்டும் வெங்காயத்தின் விலையை கண்டு நடுத்தரமக்கள் கலங்கி போய் உளளனர். கடந்த காலங்களில் இதே போன்ற வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக ஆட்சி மாற்றம் கூட ஏற்பட்டது. இதனால் வெங்காயத்தின் விலையை கண்டு மக்களும் அரசியல் கட்சியினரும் கலங்கி போய் உள்ளனர்.
விலையை கட்டுப்படுத்துவதற்காக ஈரான், எகிப்து, பாகிஸ்தான், சீனா, ஆப்கான் ஆகிய வெளிநாடுகளி்ல் இருந்து இறக்குமதி செய்துவந்த போதிலும் ,எல்லைப்பகுதியான வங்க தேசத்தின் பல்வேறு நகர சந்தைகளில் நமது நாட்டின் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றிற்கு ரூ.45-47 வரையில் மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.


தினசரி 500-600டன்கள் ஏற்றுமதி :

ஒருபுறம் விலையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக கூறினாலும் மறு பக்கத்தி்ல் எல்லைப்புற மாநிலமான மே.வங்கத்தில் உள்ள மால்டாவில் உள்ள மகாதிர்புர், பெட்ராபால், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்த கோஜாடங்கா, தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் ஹிலி, மற்றும் கூச்பெகாரை சேர்ந்த சங்கராபந்தா ஆகிய பகுதி வழியாக தினசரி 500-600 டன்கள் வரையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதுகுறித்து ஏற்றுமதியார்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் இணை செயலாளர் கூறுகையில் உஸ்வால்சாகா கூறுகையில் : வெங்காயத்தின் விலையை நிர்ணயிப்பது நேஷனல் அக்ரிகல்சுரல் கோ- ஆப்ரேவ்டிவ் மார்க்கெட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா(நாபெட்) ஆகும். இந்த விலை நீண்ட காலத்திற்கு முன்பே நிர்ணயிக்கப்பட்டது. ஏற்றுமதி ஓப்பந்தமும் நீண்ட காலத்திற்கு முன்பே போடப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் இந்த ஏற்றுமதியினால் விவாசாயிகளுக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை .மேலும் வட்டி நட்டம் தான் மீதமாகியுள்ளது. என தெரிவித்துள்ளார்.
வங்க ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த சமீர் கோஷ் கூறுகையில் நவம்பர் மாதம் முதல் ஏற்றுமதி வரியை உயர்த்த இருப்பதால் எல்லைப்பகுதியிலும் அதிக விலையை காண முடியும் என தெரிவித்தார்.
மால்டா வர்த்தக வியாபாரிகள்சங்க செயலாளர் ஜயந்தாகுண்டு கூறுகையில் விலைவாசி உயர்வுக்கு வர்த்தகர்கள் பொறுப்பாக முடியாது. அவர்கள் கள்ள சந்தையில் விற்பதில்லை. அரசு உடனடியாக வங்க தேசத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்தால் விலை உயர்வு தானாகவே கட்டுக்குள் வரும் என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M. SREE RANGARJAN - coimbatore,இந்தியா
26-அக்-201318:55:54 IST Report Abuse
M. SREE RANGARJAN ஒவ்வொரு வருடமும் வெங்காயம் இப்படி மக்களை கண்ணீரில் முழ்கடிகிறது. இதை அரசாங்கமும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் உள்ளது. என்ன செய்ய எல்லாம் மக்கள் தலை எழுத்து
Rate this:
Cancel
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-அக்-201316:17:33 IST Report Abuse
GANAPATHI V முன்னே எல்லாம் வெங்காயம் உரித்தால் தான் கண்ணில் தண்ணி வரும் ......இப்போ உரிக்காமலே தண்ணி வந்து விடுகிறது ......விலை வாசி அப்படி இருக்குது .
Rate this:
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
26-அக்-201315:12:59 IST Report Abuse
Nallavan Nallavan நாம் இங்கே கொடுப்பது எண்பது ரூபாய் முதல் நூறு ரூபாய் வரை .... நமது அதே வெங்காயம் வங்க தேசத்தில் இந்திய மதிப்புக்கு ரூபாய் நாற்பத்தைந்து விற்பனையாகிறது .... அதாவது சுருக்கமாகச் சொன்னால், வெங்காயம் விளைவித்த விவசாயிகளின் வயிற்றில் அடித்து, ஏற்றுமதி செய்யும் இடைத் தரகர்களும், மத்தியில் ஆளும் அதிகார வர்க்கமும் இடையில் கொள்ளை லாபம் பார்க்கின்றனர் .... அது மட்டுமில்லை ..... இங்கேயே விற்பனையாகும் வெங்காயத்திலும் நாம் கொடுக்கும் கூடுதல் பணம், விவசாயிகளுக்குக் கிடைக்காமல் வியாபாரிகளுக்குத்தான் (அதன் மூலம் இடைத் தரகர்களுக்குக் கமிஷனும் உண்டு) போய்ச் சேருகிறது ..... பாடுபடும் விவசாயிக்கும் லாபம் இல்லை .... நுகர்வோரான மக்களுக்கும் பயன் இல்லை ....
Rate this:
Jegan - chennai,இந்தியா
26-அக்-201317:40:04 IST Report Abuse
Jeganஏற்றுமதி செய்தாலும் செய்யாவிட்டாலும் விவசாயிக்கு சரியான விலை கிடைக்காது. வெங்காயம் மாத்திரமல்ல எல்லா விலை பொருட்களுக்கும் இதுதான் நிலை. அரசு சரியான கொள்கையை கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசு ஆரம்பித்த பசுமை பண்ணை கடைகளில் கூட ஆரம்பத்தில் பிற கடைகளை விட பாதி விலையாக தான் இருந்தது. பின்னர் அது வெறும் பத்து ரூபாய் குறைவு என்ற நிலைக்கு வந்துவிட்டது. அதுவும் எல்லாருக்கும் கிடைக்காது. 4 கிலோ அழுகிய வெங்காயம் மட்டுமே பசுமை பண்ணை கடைகளில் கஷ்டமருக்காக வைத்திருப்பார்கள் . மேலும் அங்கே உள்ள ஊழியர்கள் வெளிமர்கட்டுக்கு விற்று நல்ல காசு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X