ரூ. 120கோடி ஹெராயினுடன் வந்தனர்; எல்லையில் 3 பேர் சுட்டுக்கொலை

Updated : அக் 26, 2013 | Added : அக் 26, 2013 | கருத்துகள் (17)
Share
Advertisement
அட்டாரி : பெரும் அளவு போதை பொருளுடன் இந்திய எல்லைக்குள் வந்த பயங்கரவாதிகள் 3 பேரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். இவர்கள் 3 பேரும் பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் ஆவர். பஞ்சாப் மாநிலம் அட்டாரி அருகே சர்வதேச எல்லையில் முல்லாபூர் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் இருந்து வந்தனர். இந்நேரத்தில் 3 பேர் எல்லைக்குள் நுழைய
ரூ. 120கோடி ஹெராயினுடன் வந்தனர்;  எல்லையில் 3 பேர் சுட்டுக்கொலை

அட்டாரி : பெரும் அளவு போதை பொருளுடன் இந்திய எல்லைக்குள் வந்த பயங்கரவாதிகள் 3 பேரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். இவர்கள் 3 பேரும் பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் ஆவர்.

பஞ்சாப் மாநிலம் அட்டாரி அருகே சர்வதேச எல்லையில் முல்லாபூர் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் இருந்து வந்தனர். இந்நேரத்தில் 3 பேர் எல்லைக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்.


இவர்களிடம் சக்தி மிகுந்த ஆயுதங்களும், ரூ. 120 கோடி மதிப்புடைய ஹெராயின் போதை பொருளும் இருந்தது. இவர்கள் 3 பேரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்களாக இருப்பர் என தெரிய வந்துள்ளது. சமீப காலமாக காஷ்மீர் எல்லை பகுதியை குறி வைத்து வந்த பயங்கரவாதிகள் தற்போது பஞ்சாப் மாநிலம் பகுதி வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். இதனையடுத்து இந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரி கூறுகையில், இந்த பகுதியில் இன்னும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. யாரேனும் பதுங்கி இருக்கிறார்களா என தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prabhu - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
26-அக்-201318:12:43 IST Report Abuse
prabhu மோடி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தீர்வு .
Rate this:
Cancel
Batcha Bai - Doha,கத்தார்
26-அக்-201317:17:07 IST Report Abuse
Batcha Bai எவன்யா போட்டோ எடுத்தது? நெஞ்சிலயே ஒதைக்கிர மாதிரி?
Rate this:
Cancel
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-அக்-201316:08:55 IST Report Abuse
GANAPATHI V மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக செய்ய பட்ட வேலை இது . சொல்ல போனால் இந்தியாவின் செயல் திறமை அங்கு சரி இல்லை. நம் மக்கள் தான் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X