பொது செய்தி

இந்தியா

வெள்ளம்: தத்தளிக்கிறது ஆந்திரா பலி ;32

Updated : அக் 26, 2013 | Added : அக் 26, 2013 | கருத்துகள் (2)
Share
Advertisement
வெள்ளம்: தத்தளிக்கிறது ஆந்திரா பலி ;32

ஐதராபாத்: பைலின் புயலின் தொடர்ச்சியாக, ஆந்திர மாநில கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையும் பெய்ய துவங்கி உள்ளதால், ஆந்திராவில் பல கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இதுவரை கனமழைக்கும், வெள்ளத்திற்கும் 32க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 78 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு, 135 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏராளமான இடங்களில் சாலைகள், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகமாகி, நிலைமையை சிக்கலாக்கி உள்ளது. வெள்ளம் காரணமாக 4.35 ஹெக்டர் நிலப்பரப்பில் விளைந்திருந்த பயிர்கள் நாசமாகிவிட்டன. இதில், 2 லட்சம் ஹெக்டரில் பருத்தி விளைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாசன ஏரி, குளங்கள் கரைகள் சேதடைந்துள்ளன. இதுவரை 350 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஸ்ரீகாகுளம், குண்டூர், கிருஷ்ணா, பிரகாசம், நலகுண்டா, மகபூப்நகர், விசாகபட்டினம் மற்றும் கோதாவரி உள்ளிட்ட 16 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது.


இந்நிலையில், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களிலும், ராயலசீமா மற்றும் தெலுங்கான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


ஒடிசாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jakku - hyderabad,இந்தியா
26-அக்-201319:48:04 IST Report Abuse
jakku "ராயலசீமா மற்றும் தெலுங்கான பகுதிகளில்..." சொல்லாமலே பிரிச்சாச்சா?
Rate this:
Cancel
Peria Samy - chennai,இந்தியா
26-அக்-201319:02:18 IST Report Abuse
Peria Samy ஆந்திராவுக்கு இப்போது போதாத காலம் போலும். தெலுங்கானாப் பிரச்சினை ஆந்திராவை அல்லோலகல்லோலப் படுத்தியது. அடுத்து பைலின் புயல் ஆந்திராவைப் புரட்டிப் போட்டது. இப்போது வருண பகவானின் சீற்றம் ஆந்திராவை மையம் கொண்டுள்ளது. அரசியல் வாதிகளின் பித்தலாட்டம் பொறுக்காமல் இயற்கை வெகுண்டேளுகிறதோ? . பெருமாளே ஆந்திராவைக் காப்பாற்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X