இன்னும் ஆறு மாதம் மட்டும் தான் உங்கள் ஆட்சி: காங்கிரசுக்கு நரேந்திர மோடி எச்சரிக்கை

Updated : அக் 28, 2013 | Added : அக் 26, 2013 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஆட்சி, காங்கிரசுக்கு ,நரேந்திர மோடி, எச்சரிக்கை,Narendra modi, congress

உதய்ப்பூர்:''காங்கிஸ் மேலிடம், சி.பி.ஐ.,யை தவறாக பயன்படுத்தி, பா.ஜ., தலைவர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய வைக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருக்கப் போவது, இன்னும் ஆறு மாதங்கள் மட்டும் தான்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.

பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் நடந்த, பிரசார கூட்டத்தில், நேற்று பேசியதாவது:சமீபகாலமாக, ராஜஸ்தானிலும், குஜராத்திலும், மத்திய அரசு சார்பில், ஏராளமான திட்டங்களுக்கான துவக்க விழாக்கள் நடக்கின்றன. இதனால், இந்த இரண்டு மாநிலங்களிலும், கத்திரிகளுக்கு, கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் இளவரசர், தன்னை மதச் சார்பற்றவர் என, கூறுகிறார்.ஆனால், மத கலவரங்களை தூண்டும் வகை யில், அவர் பேசுகிறார். ராஜஸ்தான் முதல்வரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, அசோக் கெலாட்டிடம், ராகுல், ஆதரவு கேட்டதாக கூறுகின்றனர்.கெலாட், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தானே? அவர் மீதே, ராகுலுக்கு நம்பிக்கையில்லையா? தன், அரசியல் லாபத்துக்காக, சி.பி.ஐ., போன்ற புலனாய்வு அமைப்புகளை, காங்., தலைமையிலான, மத்தியஅரசு, தவறாக பயன்படுத்துகிறது. பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீது, வழக்குகள் போடுவதற்காக, சி.பி.ஐ., அமைப்பு, பயன்படுத்தப்படுகிறது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மீதும், பல்வேறு வழக்குகள் உள்ளன. காங்., கட்சியினருக்கு, ஒரே ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.நீங்கள், இன்னும், ஆறு மாதம் மட்டுமே, ஆட்சியில் இருக்கப் போகிறீர்கள். அதற்கு பின், நீங்கள் செய்த தவறுகளை, நாங்கள், மக்களிடம் பகிரங்கப்படுத்துவோம்.இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.


பீகாரில் மோடி ஜுரம்:

பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, பீகார் மாநிலம் பாட்னாவில், இன்று நடக்கவுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறிய, ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான, நிதிஷ் குமாருக்கு, தங்கள் பலத்தை நிரூபித்து காட்டும் வகையில், மோடியின் கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகளை, அம்மாநில பா.ஜ., செய்துள்ளது. 14 சிறப்பு ரயில்கள், 1,500 அடி நீள மேடை, 3,000 பஸ்கள், டிஜிட்டல் திரைகள், மோடி இலவச டீக்கடை என, பா.ஜ.,வினர் செய்துள்ள ஏற்பாடுகளால், பீகார் முழுவதும், மோடி ஜுரம் அடிக்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
27-அக்-201307:43:41 IST Report Abuse
K.Balasubramanian எந்த அலை வந்தாலும் மோடிமேஜிக் வேலை செய்யும் . மக்களை உஷார்படுத்த வேறு ஆள் இல்லை . Awake,Awake, and Stop not until the present regime is ousted. இது உங்களுக்காக
Rate this:
Cancel
Saro - Chennai,இந்தியா
27-அக்-201303:03:41 IST Report Abuse
Saro Well said Modi Ji..Dreaming of a new super duper India under ur rule..Prayers with you..
Rate this:
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
27-அக்-201303:03:06 IST Report Abuse
தமிழ் சிங்கம் ஒவ்வொரு கட்சியும் ஆட்சியில் இருக்கும்போது போலிஸ் மற்றும் சிபிஐ ஐ தனக்கு வேண்டியவர்களுக்கு உதவவும், எதிரிகளை கடித்து குதறவும் உபயோகபடுத்தி கொள்ளும். அது அவரவரின் சாமர்த்தியம். மோடி என்ன கதறினாலும், சிபிஐ காங்கிரஸ் இன் பேச்சை மட்டும்தான் இப்போது கேட்கும். ஜெயித்துவிட்டு, மோடி சிபிஐ இக்கு உத்தரவு இடலாம். அது முடியாது என்று தெரிந்து மோடி, பயந்து கதற ஆரம்பித்து விட்டார். நினைக்கவே சிரிப்பாக இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X