தேர்தல் அறிக்கை தயாரிக்க வாக்காளர்களிடம் கருத்து கேட்பு:பா.ஜ., வழியை பின்பற்றும் காங்.,| Cong follows BJP,seeks voters views | Dinamalar

தேர்தல் அறிக்கை தயாரிக்க வாக்காளர்களிடம் கருத்து கேட்பு:பா.ஜ., வழியை பின்பற்றும் காங்.,

Updated : அக் 31, 2013 | Added : அக் 30, 2013 | கருத்துகள் (10)
புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக மக்களின் கருத்துக்களை சேகரித்து வரும் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.,வின் வழிமுறைகளையே பின்பற்றி வருகின்றது. மக்களின் கருத்துக்களை அறிவதற்காக இணையதளம் ஒன்றை காங்கிரஸ் துவங்கி உள்ளது. சாதாரண மனிதர்களின் எண்ணங்கள் எவ்வாறு இருக்கிறன என அறிவதற்காக காங்கிரஸ் துணை தலைவர் ராகுலின் யோசனையின் பேரில் காங்கிரஸ்
Cong, follows, BJP,seeks voters, views,தேர்தல் அறிக்கை, தயாரிக்க, வாக்காளர்களிடம், கருத்து கேட்பு,பா.ஜ., வழியை பின்பற்றும், காங்.,

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக மக்களின் கருத்துக்களை சேகரித்து வரும் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.,வின் வழிமுறைகளையே பின்பற்றி வருகின்றது.

மக்களின் கருத்துக்களை அறிவதற்காக இணையதளம் ஒன்றை காங்கிரஸ் துவங்கி உள்ளது. சாதாரண மனிதர்களின் எண்ணங்கள் எவ்வாறு இருக்கிறன என அறிவதற்காக காங்கிரஸ் துணை தலைவர் ராகுலின் யோசனையின் பேரில் காங்கிரஸ் இந்த இணையதளத்தை துவக்கி உள்ளது. இந்த இணையதளத்தை ராகுல் கடந்த வாரம் துவங்கி வைத்தார். ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., ஏற்கனவே தேர்தல் இணையதளத்தை துவக்கி, காங்கிரஸ் கட்சி குறித்த மக்களின் கருத்துக்களை கேட்டு வருகிறது. மக்களின் கருத்துக்களை நன்கு ஆய்வு செய்த பிறகு தேர்தல் அறிக்கையை தயாரிக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது. மக்கள் கொடுக்கும் யோசனைகளும், பரிந்துரைகளும் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ளது. பா.ஜ., ஏற்கனவே தனது கருத்து சேகரிப்பு பணியை துவங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினரோ தேசிய அரசியலில் தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிடும் கட்சி காங்கிரஸ் தான் என பிரசாரம் செய்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் இந்த கருத்து கேட்பு பணி நடைபெற்று வருகிறது.

இணையதளம் பயன்படுத்தாத மக்களிடம் நேரடியாக சென்று கருத்துக்களை சேகரிக்க பா.ஜ., ஏற்பாடு செய்து வருகிறது. தேர்தல் இணையதளம் மட்டுமின்றி டுவிட்டர் பகுதிகளிலும் பதிவு செய்யப்படும் கருத்துக்களும் கருத்தில் கொள்ளப்படும் என பா.ஜ., தெரிவித்துள்ளது. ஆனால் ராகுலின் யோசனையிலேயே இந்த கருத்து சேகரிப்பு நடைபெறுவதாக காங்கிரசார் மாயையை உருவாக்கி வருகின்றனர். டுவிட்டரில் காங்கிரஸ் தொண்டர் பதிவு செய்துள்ள கருத்தில், ராகுலின் இந்த நடவடிக்கை பாராட்டுதலுக்கு உரியது; இந்திய தேசிய காங்கிரசின் தேர்தல் அறிக்கை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, பெண் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும் எனவும், அதற்கு தரம் மிக்க ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் நடைபெறும் அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என கருத்து பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன. மற்றொருவர் தனது பதிவில், தேர்தல் அறிக்கை இந்தியாவில் உள்ள கிராமப்புறங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைய வேண்டும்; அனைத்து பஞ்சாயத்துகளிலும் வேளாண்மை உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் சமமான மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்க உறுதி அளிக்க வேண்டும்; 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தையம் காங்கிரஸ் கொண்டு வர வேண்டும் என மக்கள் கருத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் உள்கட்டுமானம் மேம்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட வேண்டும் எனவும் பலர் தெரிவித்துள்ளனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X