3வது அணி உருவாகுமா? அதன் மீதான எதிர்பார்ப்பு ஏன்?-ஓர் அரசியல் அலசல்

Updated : நவ 02, 2013 | Added : நவ 02, 2013 | கருத்துகள் (53)
Share
Advertisement
புதுடில்லி : அக்டோபர் 30ம் தேதி இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கூடி காங்கிரஸ் அல்லாத, பா.ஜ., அல்லாத 3வது அணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். டில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மதவாதத்திற்கு எதிராக 3வது அணியை உருவாக்கி 2014 லோக்சபா தேர்தலில் களமிறங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மதவாதத்திற்கு
Why the odds favour, non-Congress, non-BJP ,parties, gaining ground, in 2014,3வது அணி, உருவாகுமா, அதன் மீதான, எதிர்பார்ப்பு ஏன்,ஓர் அரசியல், அலசல்

புதுடில்லி : அக்டோபர் 30ம் தேதி இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கூடி காங்கிரஸ் அல்லாத, பா.ஜ., அல்லாத 3வது அணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். டில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மதவாதத்திற்கு எதிராக 3வது அணியை உருவாக்கி 2014 லோக்சபா தேர்தலில் களமிறங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மதவாதத்திற்கு எதிராக இக்கட்சிகள் ஒன்றுபடுவது ஆரோக்கியமானதாக கருதப்பட்டாலும், அடிப்படையில் இவைகளுக்குள் ஒற்றுமை இல்லாததே 3வது அணி மீது நம்பிக்கை இல்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளது.

புதியதொரு கூட்டணி கட்சியை உருவாக்குவதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டாலும், 3வது அணி அல்லது இடதுசாரி கட்சி வருங்காலத்தில் உருவாகலாம் அல்லது அதற்கு வாய்ப்பு ஏற்படாமலும் போகலாம். ஆனால் 3வது அணியை உருவாக்கி, தேர்தலுக்கு பின் காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் இணைந்தால் அது தன் மதிப்பை இழக்க வாய்ப்புள்ளது.

ஏனெனில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., இரு கட்சிகளும் தனிபெரும்ன்மையை நிரூபித்து தனித்து ஆட்சி அமைக்க முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளன. மற்ற கட்சிகள் பெயரளவிலேயே கூட்டணியில் இருக்கும் அல்லது அவசியமில்லாதவைகள் என நினைத்து கழற்றி விடப்படும். அனேக இடங்களில் காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கி சுருங்கி வருகிறது. ஆனால் நரேந்திர மோடியை முன்னிறுத்தி தேர்தல் பணிகளை நடத்தி வருவதால் பா.ஜ., பலமடைந்த வருகிறது. இருப்பினும் இவ்விரு கட்சிகளும் பெரும்பாலான மாநிலங்களில் தங்களுக்கென பலமான அடித்தளத்தை அமைத்துக் கொண்டுள்ளன. ஆனால் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,விற்கு மாற்றாக, பிற பிராந்திய கட்சிகள் இணைந்து 3வது அணியை உருவாக்கினால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகளின் அதிருப்தி ஓட்டுக்களும், பிராந்திய கட்சிகளின் ஆதரவு ஓட்டுக்களும் பெற வாய்ப்பு உள்ளது. இதன் அடிப்படையில் 3வது அணியும், தேசிய கட்சிகளுக்கு நிகரான பலம் பெற வாய்ப்புள்ளது.

அரசியல் ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் ஒற்றுமை இல்லாததே கடந்த 15 ஆண்டுகளாக 3வது அணி அமையாமல் இருப்பதற்கு காரணமாகும். ஆனால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வை பொறுத்தவரை கட்சிக்குள் பூசல்களும், ஏற்றத்தாழ்வுகளும் இருந்த போதிலும் பொதுவாக தனது பலத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன.

கடந்த காலங்களைப் பார்க்கும் போது 3வது அணி தலைமையில் அமைந்த அரசு மோசமானதாகவும், நிலையற்றதாகவுமே இருந்துள்ளது. இதற்கு காரணம் 3வது அணியில் உள்ள கட்சி தலைவர்களிடம் போதிய அனுபவம் இல்லாததே காரணமாகும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் 3வது அணிக்கு தலைமை ஏற்க பரிந்துரைந்துரைக்கப்படும் நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், ஜெயலலிதா, முலாயம் சிங், மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் நல்லதொரு கட்சி தலைமை மற்றும் ஆளுமை திறன் கொண்டவர்களர்கள் என பெயர் வாங்கியவர்கள்.

போதிய அரசியல் அனுபவமும் இவர்களிடம் உள்ளது. ஆனால் இவர்களிடையே ஏறக்குறைய சமஅளவு பலம் இருப்பதால், 3வது அணிக்கு யார் தலைமை ஏற்பது என்ற போட்டியும், அவ்வாறு தலைமை ஏற்பவருக்கு மற்றவர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில் கடும் போட்டி நிலவும் என்றே கருதப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murali. M. - Chennai,இந்தியா
03-நவ-201319:53:11 IST Report Abuse
Murali. M. ஜெ., ஒரு சிறந்த நிர்வாகி தான்.... அதில் சந்தேகமே இல்லை...... ஆனால் இவரை பி.எம் ஆக ஆக்கினால், கூட இருக்கற தேவதை எல்லாம் இவரை ஓங்க விட மாட்டார்கள்..... இவர் மதிப்பு அதனால் குறைய வாய்ப்பு இருக்கிறது.... காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவதில்லை... அது தெரிஞ்ச விஷயம் தான்.... எப்படியும் பா.ஜ.க. 200க்கும் அதிகமான சீட்களை பெறும். அப்போது அவர்களுக்கு கை கொடுத்து துணை பிரதமர் ஆகி மற்ற நல்ல பதவிகளை வாங்கி கொண்டு நம்ம கோபாலபுர தலைவரின் வயிற்றெரிச்சலையும் கொட்டி கொண்டு நம் தமிழ் நாட்டுக்கு தேவையான அத்தனை உதவியும் பெற்றுக் கொள்ளலாம். பிரதமர் கனவை கொஞ்ச வருஷ காலம் தள்ளிப் போடுவது ஜெ.வுக்கு நல்லது......
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
03-நவ-201318:27:30 IST Report Abuse
Somiah M பல கட்சிகளும் அவர்களின பலவகையான கொள்கைகளும் தனித்தனியான தலைமை பண்புகளும் கொண்ட இவர்கள் ஓரணியில் சேர்வது என்பது ஆண்டிகள் கூடி மடம் கட்டுவதைப் போலதான் ஆகும் .
Rate this:
Cancel
karthik - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-நவ-201309:56:41 IST Report Abuse
karthik முன்றாவது அணி தீபாவளி புஷ்வானம் போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X