பொது செய்தி

தமிழ்நாடு

மந்திரியுமில்லை; திட்டமும் இல்லை; வெட்டியாய் போன 15 தேர்தல்கள்

Updated : நவ 04, 2013 | Added : நவ 02, 2013 | கருத்துகள் (12)
Share
Advertisement
மந்திரியுமில்லை; திட்டமும் இல்லை; வெட்டியாய் போன 15 தேர்தல்கள்

கோவை: தொழில் முக்கியத்துவம் வாய்ந்த கோவை லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,யாருமே, இதுவரை மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பதால், அமைச்சராகும் "வாய்ஸ்' கொண்ட ஒரு வி.ஐ.பி., வேட்பாளரை வரும் தேர்தலில் தொழில் அமைப்பினரும், பொது மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
சென்னைக்கு அடுத்ததாக தொழில் வளமும், பொருளாதார வளர்ச்சியும் கொண்ட நகரம் கோவை. இந்நகரின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல, சர்வதேச விமான நிலையம், கூடுதல் ரயில் வசதிகள், பாலங்கள், புறவழிச்சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை இங்குள்ள தொழில் முனைவோர் எதிர்பார்க்கின்றனர். இவற்றை மத்திய, மாநில அரசுகளிடம் எடுத்துச் செல்லும் அளவுக்கு அரசியல் முக்கியத்துவம், இந்த மாவட்டத்துக்கு எப்போதுமே இல்லை என்பது, கோவைக்கு மாபெரும் குறை. தமிழகத்திலுள்ள 39 லோக்சபா தொகுதிகளில், கோவை தொகுதி காலம் காலமாக புறக்கணிக்கப்பட்டே வருகிறது. கடந்த 1952லிருந்து நடந்த 15 தேர்தல்களில் 6 முறை காங்., வென்றுள்ளது; 5 முறை இந்திய கம்யூ., கட்சியும், மா.கம்யூ., பா.ஜ., மற்றும் தி.மு.க., ஆகிய கட்சிகள் தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கோவை தொகுதியில், அ.தி.மு.க., இதுவரை நேரடியாக நின்று வெற்றி பெற்றதில்லை; ஆனால், இக்கட்சி தலைமையிலான கூட்டணி, பல முறை வெற்றி பெற்றுள்ளது. தற்போதுள்ள மா.கம்யூ., கட்சியைச் சேர்ந்த எம்.பி., நடராஜனும் அ.தி.மு.க., ஆதரவில் வெற்றி பெற்றவரே. கடந்த 1980-84 மற்றும் 1996-98 ஆகிய 5 ஆண்டுகளில் மட்டுமே தி.மு.க.,வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் இங்கிருந்தனர். பெரும்பாலும் தேசியக் கட்சிகள் ஆண்ட இத்தொகுதியில், பதவி வகித்த எம்.பி.,க்கள் யாருமே மத்திய அமைச்சர்களாக பதவி வகித்ததில்லை. நீலகிரி லோக்சபா தொகுதியில், எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபு, எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், எம்.பி., ராசா என பலரும் மத்திய அமைச்சர்களாக இருந்துள்ளனர். அவர்களால், நீலகிரி தொகுதிக்கு பெரிய நன்மைகள் எதுவும் ஏற்படாவிட்டாலும், இயற்கை பேரிடர் நேரங்களிலும், சாலை விரிவாக்கம் போன்ற கட்டமைப்பு வசதிகளிலும் இவர்களின் பதவியும் அதிகாரமும், அங்குள்ள மக்களுக்கு பயனளித்தது; அதேநேரத்தில், கோவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,யாருக்கும், இதுவரை மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. கம்யூ., கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்களே, இத்தொகுதியில் அதிகமாக பதவி வகித்தது இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஆனால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., சார்பில், இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்பதை, இத்தொகுதியின் மீதான புறக்கணிப்பாகவே கருத வேண்டியுள்ளது. ஒரு வேளை, கோவை எம்.பி.,க்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்திருந்தால், விமான நிலைய விரிவாக்கம், புதிய ரயில்வே திட்டங்கள், ரயில் நிலைய மேம்பாடு, புறவழிச்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருக்க முடியுமென்பது மக்களின் நம்பிக்கை. அதேபோல, பல பெரிய தொழிற்சாலைகளை இங்கே உருவாக்கியிருக்க முடியும் என்று தொழில் அமைப்பினர் உறுதியாக நம்புகின்றனர்; ஆனால், அதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவேயில்லை. தற்போதுள்ள எம்.பி.,யைப் பொறுத்தவரை, எளிமையான அணுகுமுறை உள்ளவர்; யாரும் எப்போதும் பார்க்கலாம்; பேசலாம்; இதனால், கோவை நகருக்கு பெரிதாக பலன் ஒன்றுமில்லை.

எனவே, வரும் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ., அல்லது திராவிடக் கட்சிகள் சார்பில், மத்திய அமைச்சராகும் தகுதி பெற்ற வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே, அவரை ஆதரிக்க வேண்டுமென்ற ஒருமித்த கருத்து, தொழில் அமைப்பினரிடம் உருவாகியுள்ளது. காலம் காலமாக மத்திய, மாநில அரசுகளால் புறக்கணிக்கப்பட்டு வரும் கோவையிலிருந்து, ஒரு மத்திய அமைச்சர் உருவாக வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு. இதை அரசியல் கட்சிகளின் தலைமைகள் புரிந்து கொள்ளுமா என்பதில்தான், வரும் தேர்தலில் வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh - chennai,இந்தியா
03-நவ-201315:12:14 IST Report Abuse
suresh அதெல்லாம் ஒண்ணுமில்லைங்கோ நமக்கு வாய்த்த சி.எம். அப்படிங்கோ மத்திய அரசோடு எப்போதும் மோதல் போக்கை கடைப் பிடிக்கிராருங்கோ. அதனால் வரும் வாய்ப்புகள் நழுவிப் போகுதுங்கோ. ஜெ-வுக்கு இதில் வருத்தம் ஏதும் இல்லைங்கோ. தமிழ் நாட்டுக்குத்தான் நஷ்டமுங்கோ
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
03-நவ-201309:26:52 IST Report Abuse
Srinivasan Kannaiya தமிழகம் முழுவதும் நமது என்று நமது எம் பி க்கள் குறைகள் கொடுக்கவேண்டும்.. அப்படி என்றல் ஊருக்கு ஊர் எம் பி வேண்டும்.. அது முடியுமா..பாருங்கள்..
Rate this:
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
03-நவ-201308:31:43 IST Report Abuse
JALRA JAYRAMAN மந்திரியாகியிருந்தால் வளர்ச்சி நடந்திருக்கும் என்பது ஏற்க முடியாது. தொழில் முனைவோர்கள் நாடளுமன்ற உறுப்பினரை பிடித்து பிரஷர் கொடுக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X