பதிவு செய்த நாள் :
கருத்துகள் (155)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை:இலங்கையில் நடைபெறும், காமன்வெல்த் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டில், இந்தியா பங்கேற்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, மத்திய அரசுக்கு, தி.மு.க., தலைவர், கருணாநிதி விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவரை சமாதானப்படுத்த, மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் மூலம், பிரதமர் எடுத்த முயற்சி பலிக்கவில்லை; தோல்வியில் முடிந்தது.

"தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், மத்திய அரசுக்கு, வெளியலிருந்து அளித்து வரும் ஆதரவையும் வாபஸ் பெறவேண்டியிருக்கும்' என, சிதம்பரத்திடம் கருணாநிதி தெரிவித்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இலங்கையில், இம்மாதம், 15 17 தேதிகளில், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. "இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்து, போர்க்குற்றம் புரிந்து, மனித உரிமைகளை மீறிய, இலங்கையில் நடக்கும் இம்மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்க மறுக்கும் இலங்கையை, காமன்வெல்த் அமைப்பிலிருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும்' என, தமிழக அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றன. தமிழக சட்டசபையில், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், முதல்வர் ஜெயலலிதா, இதற்கான தீர்மானத்தையும், சமீபத்தில் நிறைவேற்றியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சிலர், "தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது' என, கூறியுள்ளனர். இது தொடர்பாக, பிரதமரை சந்தித்து, தனது கோரிக்கையை, வாசன் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், மத்திய அமைச்சர், சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் மத்திய அமைச்சர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போன்றோர், "காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்க வேண்டும்' என, கூறுகின்றனர். காங்கிரசில் நிலவுகிற குளறுபடிகளுக்கு இடையே, "காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர், மன்மோகன் பங்கேற்கிறார்' என, இரு தினங்களுக்கு முன், செய்திகள் வெளியாயின.

இந்த தகவலால், கோபமடைந்த, தி.மு.க., தலைவர், கருணாநிதி, "தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, எச்சரித்தார். "காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் பங்கேற்றால், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து, தி.மு.க., அளித்து வரும் ஆதரவு வாபஸ் பெறப்படும்' என்ற அர்த்தத்தில், கருணாநிதியின் இந்த எச்சரிக்கை அமைந்திருந்தது.

இதையடுத்து, கருணாநிதியை சமாதானப்படுத்த, மத்திய அரசின் தூதுவராக, நிதி அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியை நேற்று சந்தித்தார். கோபாலபுர இல்லத்தில், நேற்று காலை, 10:30 மணி முதல், 11:00 மணி வரை, இந்த சந்திப்பு நடந்தது.அப்போது, காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பங்கேற்க வேண்டிய அவசியத்தை,பிரதமரின் தரப்பு வாதமாக, கருணாநிதியிடம், சிதம்பரம் எடுத்துரைத்துள்ளார். அப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கும், 13வது அரசியல் அமைப்பு சட்டத்தை நிறைவேற்றுதல், போரில் இடம் பெயர்ந்தவர்களை, மறு குடியமர்வு செய்வது போன்ற முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக, இலங்கை அரசை, இந்தியா நிர்பந்திக்க, காமன்வெல்த் மாநாட்டை, பிரதமர் பயன்படுத்துவார்.எனவே, "காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது' என்ற கோரிக்கையை, தி.மு.க., மேலும் வலியுறுத்தக் கூடாது என, கருணாநிதியை, சிதம்பரம் கேட்டுக் கொண்டதாக, தி.மு.க., வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஆனால், மத்திய அரசின் சமரசத்தை ஏற்க, கருணாநிதி மறுத்துவிட்டார். இலங்கைத் தமிழர் தொடர்பாக, இதற்கு முன் இலங்கை அளித்த வாக்குறுதிகள் எதுவும், அந்நாட்டு, ராஜபக்சே அரசால் நிறைவேற்றப்படவில்லை. இருந்தும், இலங்கையை அனுசரிக்கும் போக்கையே, மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்கையில், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதன் மூலம், இலங்கைக்கு, மேலும் சாதகமாக நடந்துகொள்ளும் நிலையே ஏற்படும். இதனால், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கையிலிருந்து, பின் வாங்கமாட்டோம் என, சிதம்பரத்திடம் கருணாநிதி திட்டவட்டமாகக் கூறி விட்டதாகவும், அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தன் நிலையில், தி.மு.க., உறுதியாக இருப்பதால், மத்திய அரசு மேற்கொண்ட சமாதான முயற்சி தோல்வியடைந்து விட்டதாகவும், அதன் சமரச

Advertisement

திட்டம் பலிக்கவில்லை எனவும் தெரிகிறது. கருணாநிதியை சந்தித்து திரும்பிய சிதம்பரம் தெரிவித்த கருத்தும், தமிழகத்தின் கோரிக்கையை ஆதரிப்பது போன்றேஇருந்தது.


கருணாநிதி வீடு முன், அமைச்சர், சிதம்பரம் அளித்த பேட்டி:காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் பங்கேற்கப் போகிறார் என்றும், உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், அதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் வெளியான செய்திகளில் உண்மையில்லை; மாநாட்டில் பங்கேற்பது குறித்து, மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என, தமிழக காங்கிரஸ் அமைச்சர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். என் கருத்தையும், .உரியவர்களிடம்கூறியுள்ளேன். இதையெல்லாம், கருத்தில் கொண்டு, மத்திய அரசு முடிவெடுக்கும். விடுதலைப் புலிகள் இயக்க பிரசார பாடகர் இசைப் பிரியா, இலங்கை ராணுவத்தின் பிடியில் சிக்கி கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள வீடியோக காட்சிகளை பார்த்தேன். இசைப் பிரியாவை கொன்றது வன்மையாக கண்டிக்கத் தக்கது. அதற்கு, பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசு தொடர்ந்து, மனித உரிமை மீறலை செய்து வருகிறது. இதை, தொடக்கத்திலிருந்தே கண்டித்து வருகிறோம். இலங்கை அரசு, தான்தோன்றித்தனமான செயல்பட்டு வருவதை ஏற்கமுடியாது.இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (155)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DAVID MC - CHENNAI,இந்தியா
04-நவ-201312:25:25 IST Report Abuse
DAVID MC மத்திய அரசிலிருந்து தி.மு.க வெளியேறிவிட்டது. தற்போது சூழ்நிலை மற்றும் பிரச்சினைகளின் அடிப்படையிலேயே ஆதரவு அளித்து வருகிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் வெளியே வந்துவிட்ட தி.மு.க மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற திட்டம் என்ற தலைப்பே தவறானது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதத்திலேயே தி.மு.க மத்திய அரசை வற்புறுத்துகிறது மற்றும் எச்சரிக்கிறது
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
04-நவ-201300:49:30 IST Report Abuse
GUNAVENDHAN கருணாநிதி கதை வசனம் எழுதி , இயக்கும் , அந்த நாடகத்தில் கதாநாயகனாகவும் நடிக்கும் எத்தனையோ நாடகங்களை இதுவரை பார்த்து பார்த்து மக்கள் எல்லோருமே சலித்துப்போய் உள்ளனர், இதுவும் அது போன்றதொரு நாடகம் தான். கருணாநிதி ஒருவேளை, இல்லை இல்லை இது நாடகம் இல்லை , உண்மையாகவே திமுக வெளியில் இருந்து மத்திய அரசுக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் ஆதரவை விலக்கிக்கொள்ள போகிறது என்று சொல்வாறேயானாலும், அது உண்மையாகவே இருந்தாலும் அதனால் யாருக்கு என்ன லாபம் ?. சோனியா , கருணாநிதியின் ஒத்துழைப்புடன் ராஜபக்ஷே கொன்று குவித்த லட்சோப லட்சம் இலங்கைத்தமிழர்கள் திரும்ப வந்து விடப்போகிறார்களா ?. லட்சோப லட்சம் இலங்கைத்தமிழர்கள் இல்லை , ஈவு இரக்கமில்லாமல் கையில் பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்து அப்பாவித்தனமாக சுற்றிலும் உள்ள ராஜபக்ஷேவின் ஏவலாட்களை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த பிரபாகரனின் மகன் என்கிற ஒரே காரணத்துக்காக , அந்த பச்சிளம் பாலகனை கொன்றார்களே , அந்த இளந்தளிரை மட்டுமாவது இவரது கட்சி மத்திய அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவை விளக்கிக்கொல்வதால் திரும்ப கொண்டுவர முடியுமா ?. தன்னுடைய தேனினும் இனிய குரலால் இலங்கைத்தமிழர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த இசைப்பிரியாவையாவை ராணுவ காடையர்கள் மானபங்கப்படுத்தி , நிர்வாண மாக்கி சுட்டு கொன்றார்களே, இசைப்பிரியாவின் மானத்தையாவது கருணாநிதியின் காலம்கடந்த முடிவால் காப்பாற்ற முடியுமா ?. அல்லது இசைப்பிரியாவையாவது இப்போது இவர்களால் திரும்ப கொண்டுவர முடியுமா ?. எதுவுமே நடக்காது என்பது கருணாநிதிக்கும் , அவரது கைத்தடிகளுக்கும் நன்றாகவே தெரியும் . முதல்வர் பதவியில் உட்கார்ந்துகொண்டிருந்தபோது இந்த புத்தி எங்கே போனது ?. அன்று இலங்கைத்தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று , இனப்படுகொலையை ராஜபக்ஷே செய்துகொண்டிருந்தபோது , அந்த இனப்படுகொலைகளில் மறைமுக குற்றவாளியான கருணாநிதி பொங்கியெழுந்து இருக்கவேண்டாமா ? .. .. அன்று பொங்கியெழுந்தால் தன்னுடைய பதவியை காங்கிரஸ் தலைமை பிடுங்கிவிடும் என்பதால் தானே , அன்று வாய்மூடி மௌனியாக இருந்தார், அன்று ஏடாகூடமாக இலங்கைத்தமிழர்கள் விஷயத்தில் பேசினால் தன்னுடைய அருமை மகன் மத்திய அமைச்சர் பதவியை துறக்க வேண்டி இருக்கும் , மற்ற திமுக மத்திய அமைச்சர்களுக்கு கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்பதால் தானே எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்த்தார், அன்று பதவி போனாலும் எனக்கு கவலையில்லை என்று இலங்கைத்தமிழர்களை கொன்று குவிக்கும் போது குரல் கொடுத்து இருந்தால், அன்று எல்லோரும் மத்திய அரசில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வெளியே வந்து இருந்தால், திமுகவின் ஆதரவை விலக்கிக்கொள்வதாக அன்று சொல்லியிருந்தால், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் , இலங்கையில் நடக்கும் எல்லா அட்டூழியங்களையும் வெறுமனே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்து விட்டு , இன்று தங்களது மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ் எனும் நாடகத்தால் எவ்விதமான நன்மையையும் இலங்கைத்தமிழர்களுக்கு விளையப்போவதில்லை என்று தெரிந்தும் இப்படியொரு நாடகத்தை அரங்கேற்ற வேண்டிய நிர்பந்தம் கருணாநிதிக்கு வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் கொடுத்துள்ளது என்பதும் மக்களுக்கு நன்றாக , தெளிவாக ,கொஞ்சமும் ஐயமில்லாமல் தெரியும் . இவரைப்போன்றதொரு அப்பட்டமான , சுயநலமான, பேசி பேசியே மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கருதி செயல்படும் ஒரு அரசியல் வாதி இந்தியா முழுமைக்கும் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். மக்களால் ஓரம் கட்டப்பட்ட பிறகு புத்திவந்து யாருக்கு என்ன பிரயோஜனம் ?. கருணாநிதி மத்திய அரசுக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் ஆதரவை வாபஸ் வாங்கினாலும் ஒரு பயனும் இல்லை, அவர் ஆதரவை இன்னமும் உறுதியாக மத்திய அரசுக்கு கொடுத்தாலும் யாருக்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லை . கடைசிவரை பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இப்போது இப்படி காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டு கருணாநிதி மட்டும் "" யோக்கியன் வேடம் "" போட நினைப்பது தெளிவாக தெரிகின்றது, இத்தனை வருடங்களாக ஒன்றாக இருந்து எல்லா குற்றசெயல்களையும் செய்துவிட்டு இப்போது அவர்கள் முதுகில் குத்துவதை விட , அவர்களுடனே வரும் தேர்தலை சந்தித்து இரண்டுபேருமே தேர்தலுக்கு பிறகு உன்னால் நான் கேட்டேன், என்னால் நீ கேட்டாய் என்று புலம்புவதைத்தான் மக்கள் பார்க்க விரும்புகின்றார்கள் .
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load.asp, line 349