பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அங்கன்வாடி மையத்தில் மத பிரசாரம்: கடும் அதிருப்தியில் பகுதிவாசிகள்

Updated : நவ 04, 2013 | Added : நவ 03, 2013 | கருத்துகள் (53)
Advertisement
அங்கன்வாடி மையம், மத பிரசாரம்,anganwadi,Relegious campaign

புளியந்தோப்பு : புளியந்தோப்பில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில், நேற்று நடந்த மத பிரசார கூட்டத்தால், பரபரப்பு ஏற்பட்டது. பகுதிவாசிகளின் கடுமையான எதிர்ப்பிற்கு பின்னும், அங்கு அதுபோன்ற பிரசாரக் கூட்டம் நடந்து வருவதும், அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாததும், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பகுதியில் உள்ள பெரியார் நகரில், அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இரண்டு பெண்களின் மேற்பார்வையில் உள்ள இந்த மையத்தில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், தினசரி வருகின்றனர்.


பல புகார்கள்:

அவர்களில், சமையலராக உள்ள பெண்ணின் வீடு, அதே பகுதியில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, அவர், அங்கன்வாடி மையத்தை, தனது சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.குறிப்பாக, தனது உறவினர்களை, இரவில் தங்க வைப்பது, மையத்திற்கு உரிய 'காஸ்' சிலிண்டரை தனது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி விட்டு, குழந்தைகளுக்கான சமையலுக்கு, அடுப்புக் கரிகளை பயன்படுத்துவது, உணவுப் பொருட்களை கடத்துவது என, பல புகார்களை அவர் மீது பகுதிவாசிகள் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை இதுகுறித்து, எவ்வித விசாரணையும் நடக்கவில்லை.


4 மணிநேரம் கூட்டம்:

இதுதவிர, கடந்த ஓராண்டாக, கிறிஸ்தவ மத பிரசார கூட்டத்தையும் அங்கன்வாடி மையத்தில், அவர் நடத்தி வருகிறார்.நேற்று காலை 7:00 மணிக்கு, அங்கன்வாடி மையத்தில், கிறிஸ்தவ மத பிரசார கூட்டம் துவங்கிய போது, பகுதிவாசிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, நேற்று முற்பகல் 11:00 மணி வரை, கூட்டம் நடந்தது.

இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:அங்கன்வாடி மையத்தின் சமையலர், கடந்த ஓராண்டாக, கிறிஸ்தவ மத பிரசார கூட்டங்களை அங்கன்வாடி மையத்தில் நடத்தி வருகிறார்.அரசு கட்டடத்தில், இவ்வாறு மதப் பிரசார கூட்டம் நடத்துவது சட்டப்படி குற்றம். ஆனால், அதைத் தட்டிக்கேட்டால், அவர் இந்த பகுதியில் உள்ள ரவுடிகள் சிலரின் துணையுடன், எங்களை மிரட்டி வருகிறார். இப்படி நடப்பது, அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் அவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04-நவ-201321:02:06 IST Report Abuse
சு கனகராஜ் பெண் ரவுடியாக இருப்பார் போலிருக்கே
Rate this:
Share this comment
Cancel
gmk1959 - chennai,இந்தியா
04-நவ-201320:58:56 IST Report Abuse
gmk1959 எந்த அரசு அலுவலகங்களில் ஹிந்து மத மற்றம் குறித்து பிரச்சாரம் செய்யபடுகிறது ? ஒரே ஒரு உதாரணம் உண்டா?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
04-நவ-201320:33:30 IST Report Abuse
Pasupathi Subbian நாம வீடு கொஞ்ச காலம் திறந்து வைத்திருந்தால் இவர்கள் உள்ளே புகுந்து அங்கேயும் மத பிரச்சாரம் செய்தது விடுவார்கள் . திருச்சி ஹோலிக்ராஸ் பள்ளி மற்றும் கல்லூரியில் நெற்றியில் மத சின்னம் அணிந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X