சட்டசபை தேர்தல் முடிவுகள் லோக்சபா தேர்தலை பாதிக்குமா ?

Updated : நவ 04, 2013 | Added : நவ 04, 2013 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி : நடக்கவிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல் லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையாது என அரசியல் வட்டார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தல்கள், லோக்சபா தேர்தலின் அரையிறுதி போட்டி என்ற கருத்தே பரவலாக நிலவி வருகிறது. ஆனால் கடந்த கால நிகழ்வுகளை ஆராய்கையில் அதிர்ச்சி தரும் வகையிலான முடிவுகளே வெளியாகி உள்ளன.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டீஸ்கர், டில்லி,
Assembly, polls, no mirror, to predict, Lok Sabha, polls,சட்டமன்ற தேர்தல், முடிவுகள், லோக்சபா, தேர்தலுக்கு, முன்னோட்டமாக, அமையாது

புதுடில்லி : நடக்கவிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல் லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையாது என அரசியல் வட்டார ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தல்கள், லோக்சபா தேர்தலின் அரையிறுதி போட்டி என்ற கருத்தே பரவலாக நிலவி வருகிறது. ஆனால் கடந்த கால நிகழ்வுகளை ஆராய்கையில் அதிர்ச்சி தரும் வகையிலான முடிவுகளே வெளியாகி உள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டீஸ்கர், டில்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் முடிவுகள் தேசிய அரசியலில் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இம்மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி, லோக்சபா தேர்தலில் 75 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளன. அதே சமயம் தோல்வி அடைந்த கட்சி லோக்சபா தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இதற்கு நேர்மாறாக தேர்தல் முடிவுகள் வரவும் வாய்ப்புக்கள் உள்ளது.

1998ம் ஆண்டு, பத்து மாதங்களுக்கு முன் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும் நவம்பரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் டில்லி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்த வெங்காய விலை ஏற்றம் காரணமாக அப்போது மத்தியில் ஆட்சி செய்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை மக்கள் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடையச் செய்தனர். ஆனால் ஓராண்டுக்கு பின் 1999ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, டில்லி, மத்திய பிரதேசம், ராஜ்ஸ்தான் ஆகிய மாநிலங்களிலிலேயே அதிகப்படியாக தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2003ம் ஆண்டு நடைபெற்ற 4 மாநில தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ., இடையே நேரடியான கடும் போட்டி நிலவியது. இதில் பா.ஜ., சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசால் டில்லியை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. நான்கு மாநில தேர்தலில் 3 மாநிலங்களில் வெற்றி கொடி நாட்டிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, வெறும் 5 மாதங்களுக்கு பின் 2004ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வியை கண்டது.

சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் 2008 நவம்பரில், மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற நிலையில் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் சட்டீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.,வும், ராஜஸ்தானில் காங்கிரசும் வெற்றி பெற்றன. மேலும் தலைநகர் டில்லியில் 3வது முறையாக காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதே போன்று 2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அப்போது நடைபெற்ற லோக்சபா தேர்தலில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காங்கிரஸ் கட்சி 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் 5 மாதங்களுக்கு முன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு எதிராகவே அமைந்தது.

தற்போது நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் 2014 ல் நடக்க இருக்கும் லோக்சபா தேர்தல் முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்கலாம். அதே சமயம் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு எதிராக லோக்சபா தேர்தல் முடிவுகள் அமையவும் வாய்ப்புள்ளது. மக்களின் போக்கு எந்நேரமும் மாற வாய்ப்புள்ளதால் சட்டசபை தேர்தல் முடிவுகள், லோக்சபாவிற்கு முன்னோட்டமாக இருக்காது என்றே கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravichandran - avudayarkoil,இந்தியா
04-நவ-201323:56:46 IST Report Abuse
ravichandran சரித்திரம் மாறும் மோடியே வெல்வார்
Rate this:
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04-நவ-201316:36:36 IST Report Abuse
சு கனகராஜ் காங்கிரசுக்கு 2 தேர்தல்களிலும் பாதிப்புதான்
Rate this:
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
04-நவ-201314:38:50 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் என்ன தினமலரின் தொனி திடீரென மாறுகிறது? எது நடந்தாலும் சப்பை கட்டு கட்ட இப்போதே முன்னோட்டமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X