பொது செய்தி

இந்தியா

தரமான வாழ்க்கை:பட்டியலில் இந்தியாவிற்கு 7வது இடம்

Updated : நவ 05, 2013 | Added : நவ 05, 2013 | கருத்துகள் (16)
Advertisement
தரமான வாழ்க்கை:பட்டியலில் இந்தியாவிற்கு 7வது இடம்

புது டில்லி : தரமான வாழ்க்கை நடத்துவதில் இந்தியா 7வது இடம் பிடித்துள்ளது. என ஹச்.எஸ்.பி.சி.,எக்ஸ்பாட் என்னும் தனி ஆன்லைன் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட 37 நாடுகளில் முதலிடத்தில் தாய்லாந்து முதலிடத்திலும் பஹ்ரைன் 2 வது இடத்திலும் , சீனா 3வது இடத்திலும் கேமன் தீவுகள் 4 வது இடத்திலும் , ஆஸ்திரேலியா 5 வது இடத்திலும் சி்ங்கப்பூர் 6வது இடத்திலும் மற்றும் தைவான் 8 வது இடத்திலும் ஸ்பெயின் 9வது இடத்திலும் மற்றும் பிரேசில் 10வது இடத்திலும் உள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் ஆசிய நாடுகள் முக்கிய இடம் பெற்றுள்ளன.


வளர்ந்துவரும் சமூக வெப்பகுதி:



ஆசியாவில் ஒரு சமூக வெப்பகுதி பெருகி வருகிறது. வாழ்க்தை தரத்தை உயர்த்த இலக்காக கொண்டு முன்னணிவகிக்க தன்னை தயார் செய்து வருகின்றன ஆசிய நாடுகள். என ஹச்.எஸ்.பி.சி., தலைவர் டீன் பிளாக்பர்ன் தெரிவித்துள்ளார்.இத்துடன் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவி்ல் மக்கள்,சமூக வாழ்க்கையை நன்கு உணர்ந்து அனுபவித்து வருகின்றனர். இது மற்ற நாடுகளில் குறைவு.வெப்ப மற்றும் உணவு மற்றும் கலாச்சாரம் இம்மூன்றும் நாடுகளுக்கிடையே முக்கிய பங்கு வகிக்கிறது.


பொருளாதார கண்ணோட்டம்:



பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, சம்பாதிக்கும் திறன் , செலவு, வருமானம் மற்றும் திருப்தி போன்ற காரணிகளை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது இந்த பட்டியலில் முதலிடத்தில் சுவிச்சர்லாந்து , 2வது இடத்தில் சீனா மற்றும் 3வது இடத்தில் கத்தார் இடம் பெறுகிறது.


குழந்தைகள் கல்வி,வளர்ப்பு:



குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற நான்கு ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி முதலிடத்தையும் , பிரான்ஸ் மூன்றாவது இடத்தையும் , பெல்ஜியம் 6வது இடத்தையும் மற்றும் ஸ்பெயின் 9வது இடத்தையும் பெறுகிறது எச்எஸ்பிசி ஆன்லைன் ஆய்வு தெரிவிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.V.நன்றுடையான் - mumbai,இந்தியா
05-நவ-201310:40:37 IST Report Abuse
D.V.நன்றுடையான் தீபாவளிக்கு தமிழ் நாட்டில் மட்டும் 154 கோடிக்கு மது விற்பனை. இது ஹச்.எஸ்.பி.சி. சர்வேயில் இடம் பெற்றிருக்காது. இதுக்கு பெயர் என்னா சர்வேயா சொல்லுங்க....
Rate this:
Share this comment
Cancel
raja - madurai  ( Posted via: Dinamalar Windows App )
05-நவ-201310:38:17 IST Report Abuse
raja 2020 நோக்கி இந்தியா வாழ்த்துக்கள். கெடு கெட்ட விமர்சனத்தில் தீ வைக்க.
Rate this:
Share this comment
Cancel
D.V.நன்றுடையான் - mumbai,இந்தியா
05-நவ-201310:31:48 IST Report Abuse
D.V.நன்றுடையான் ஹச்.எஸ்.பி.சி.,எக்ஸ்பாட் என்னும் தனி ஆன்லைன் ஆய்வில் நடத்தியது எதையும் நம்பவேண்டியது இல்லை. காரணம் இது முழுக்க முழுக்க இன்டர்நெட்டில் நடத்திய ஆய்வு. இது உண்மைக்கு புறம்பானது ஆய்வு என்பது அனைத்து தரப்பினர்களிடமும் கேட்ட்கபடவேண்டியது. இந்த ஹச்.எஸ்.பி.சி. ஆய்வு ஹை கிளாஸ் ஆய்வு தவறானது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X