பொது செய்தி

இந்தியா

செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா செயற்கைகோள்; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; நீண்டநாள் கனவு நிறைவேறியது

Updated : நவ 05, 2013 | Added : நவ 05, 2013 | கருத்துகள் (155)
Advertisement
செவ்வாய் கிரகத்திற்கு இன்று மங்கள்யான் ;இஸ்ரோ சேர்மன் திருப்பதியில் வேண்டினார்

ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள் சரியாக 2. 38 மணிக்கு , ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி,எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இதற்கென விஞ்ஞானிகள் தங்களின் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இந்த முயற்சி வெற்றிகரமாக முடிய வேண்டும் என இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் திருப்பதி சென்று வேண்டினார். விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியமைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அரசியல் தலைவர்கள் , விஞ்ஞானிகள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ரூ. 450 கோடி செலவில் இந்தியா தனது சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளது. மொத்தம் 200 மில்லியன் கி.மீ., பயணம் கொண்ட மங்கள்யான், திட்டமிடப்படி ஏவப்பட்டதால், வரும் 30ம் தேதி பூமியின் வட்டப்பாதையில் இருந்து விடுபட்டு, செவ்வாயை நோக்கி தனது நீண்ட பயணத்தை துவக்கும். அடுத்த 300 நாட்களில் செவ்வாயின் பாதை நெருங்கும் மங்கள்யான் அடுத்த சில தினங்களில் ( 2014 - செப் 24 ) சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும். இருந்து தகவல்களை பூமிக்கு அனுப்பும். இதற்கான 56 .30 மணிநேர கவுன்டவுன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் 6. 08 மணிக்கு துவங்கியது.விண்ணில் பாய உள்ள பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மற்றும் செயற்கைகோளை கண்காணிக்க, இந்திய கடல் எல்லையில், யமுனா, நாலந்தா ஆகிய கப்பல்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சில இடங்களில் கட்டுப்பாட்டு அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.


சரியான பாதையில் பயணிக்கிறது ; இஸ்ரோ சேர்மன்


குறுகிய காலத்தில் சரியான நேரத்தில் விண்ணில் செலுத்த துணை புரிந்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நான் தலைவணங்குகிறேன். விண்கலம் திட்டமிட்டபடி புவி வட்டபாதைக்கு சென்று சரியான பாதையில் பயணிக்க துவங்கியுள்ளது.இவ்வாறு இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். தொடர்ந்து பேசிய விஞ்ஞானிகள் கூறுகையில்; செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது உலக பெருமை சேர்த்ததில் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதா கூறினர்.


மோடி அட்வான்ஸ் வாழ்த்து: இன்று ஏவப்படும் இந்த செயற்கை கோள் வெற்றிகரமாக அமைவதற்கு இறைவனை பிரார்த்திப்பதாக பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கூறியுள்ளார். மேலும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் நமது நாட்டு விஞ்ஞானிகளுக்கு அவர் தமது வாழ்த்தையும் பதிவு செய்துள்ளளார்.


மனிதர் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா? மங்கள்யான்' என்று பெயரிடப்பட்டுள்ள செயற்கைக்கோள், 1350 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தில், தண்ணீர், கனிம வளம், மனிதர் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா என்பது குறித்து, ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பிரத்யேகமாக, ஐந்து நவீன கருவிகள் "மங்கள்யான்' செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றின் எடை, 15 கிலோ.

மீத்தேன் வாயு இருக்கிறதா? செவ்வாய் கிரகத்தின் மேல் பகுதியில் மீத்தேன் வாயு இருக்கிறதா என்பதை இதில் பொருத்தப்பட்டுள்ள கருவி தெரிவிக்கும். உலக அளவில் இது மிக முக்கிய சோதனையாகும்.


இந்தியா 4வது நாடு : செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவதில் இந்தியா வெற்றி பெற்று உலக சாதனை பட்டியலில் இந்தியா 4 வது நாடு என்ற இடத்தை பிடிகத்தது. இது வரை ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி கழகம்ஆகியன வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பியுள்ளது. இந்நாடுகள் மொத்தம் அனுப்பிய 51 விண்கலத்தில் 21 மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (155)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
10-நவ-201303:23:34 IST Report Abuse
தங்கவேல்  இது பிரதமர் கேட்டுக்கொண்ட திட்டம் அவரையும் விஞ்ஞானிகளையும் அனைத்து ஊழியர்களையும் வாழ்த்துவோம்.
Rate this:
Share this comment
Cancel
Gilbert karunagaran - Istres ,பிரான்ஸ்
06-நவ-201302:03:17 IST Report Abuse
Gilbert karunagaran Red Planet / Planete Rouge என்று இன்று அழைக்கப்படும், "சிவந்த" கிரகம் என்பதை முன்பே அறிந்த நம் முன்னோர்கள், அதன் நிறத்திற்கு தகுந்தாற்போல் அதற்கு "செவ்வாய்" கிரகம் என்று பெயர் சூட்டினர் அந்நாளில். இன்று, அந்த செவ்வாய் கிரகத்திற்கே செயற்கை கோள் அனுப்பியுள்ளனர். மேலும் பல ஆராச்சிகள் செய்து உலகத்துக்கே வழிகாட்டிகளாக திகழ இந்திய விஞ்ஞானிகளுக்கு என் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
karthik - sydney  ( Posted via: Dinamalar Android App )
06-நவ-201301:21:29 IST Report Abuse
karthik congrats to all the workers of ISRO but just think about india's situation now at this cost( 450crores ) we can place 2 or more satelites for indian military . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X