பொது செய்தி

இந்தியா

இந்தியர்களை விரட்டி அடிப்போம்! நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல்

Updated : நவ 05, 2013 | Added : நவ 05, 2013 | கருத்துகள் (20)
Share
Advertisement
பனாஜி : 'கோவாவில் வசிக்கும் நைஜீரிய மக்களை வெளியேற்றுவதை போலீசார் நிறுத்த வேண்டும்; இல்லையேல், நைஜீரியாவில் வசிக்கும் இந்தியர்களை விரட்டி அடிப்போம் என, நைஜீரிய தூதரக அதிகாரி எச்சரித்துள்ளார்.கோவாவில் அத்துமீறல்: கோவாவில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து, சில நாட்களுக்கு முன், தேசிய
இந்தியர்களை விரட்டி அடிப்போம்! நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல்

பனாஜி : 'கோவாவில் வசிக்கும் நைஜீரிய மக்களை வெளியேற்றுவதை போலீசார் நிறுத்த வேண்டும்; இல்லையேல், நைஜீரியாவில் வசிக்கும் இந்தியர்களை விரட்டி அடிப்போம் என, நைஜீரிய தூதரக அதிகாரி எச்சரித்துள்ளார்.


கோவாவில் அத்துமீறல்:

கோவாவில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து, சில நாட்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின், நைஜபரியர்கள் வன்முறையில் இறங்கினர். போலீஸ் வேன்களை அடித்து நொறுக்கியதோடு, போலீசாரிடமிருந்து லத்திகளையும் பறித்து போலீசாரையும் உள்ளூர் மக்களையும் மிரட்டினர். பிணத்தை நடுரோட்டில் போட்டு, தங்கள் நாட்டு தூதரக அதிகாரி வந்தால் தான் வெளியேறுவோம் என மிரட்டல் விடுத்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 50 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்


நைஜீரியர்களுடன் பேச்சு:

இதையடுத்து டில்லியில் உள்ள நைஜீரிய தூதரக அதிகாரி ஜேக்கப் நவாடியா கோவா வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட, நைஜீரிய மக்களை சந்தித்து பேசினார்.

பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவாவில் வாடகை வீட்டில் வசிக்கும், நைஜீரிய மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில், போலீசாரும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதை நிறுத்த வேண்டும். இந்தியாவில், 50 ஆயிரம் நைஜீரியர்கள் தான் வசிக்கின்றனர். ஆனால், நைஜீரியாவில், 10 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். கோவா போலீசார், நடவடிக்கையை நிறுத்தா விட்டால், நைஜீரியாவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களை விரட்டி அடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து கோவா முதல்வர், மனோகர் பாரிக்கர் கூறியதாவது:


பொய்யான புகார்:

போதை மருந்து விற்கும் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில், நைஜீரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், உள்ளூர் மக்கள் தான் கொன்று விட்டதாக கூறி போராட்டம் நடத்துகின்றனர். கோவாவில் வசிக்கும் பெரும்பாலான நைஜீரியர்களிடம், பாஸ்போர்ட் மற்றும் விசாக்களின்போட்டோ நகல் தான் உள்ளது. எனவே, அவர்களின் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளோம். யாரும் கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை. இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mangai - Chennai,இந்தியா
06-நவ-201303:40:23 IST Report Abuse
mangai மக்கள் அமைதி காக்க வேண்டுகிறோம். சிறுபான்மை இனத்தவரின் மனம் கோணாமல் அவர்கள் நாலு அடி அடித்தாலும் வாங்கிக்கொள்வது தான் பெரும்பான்மை இனத்தவரின் தலையாய கடமை. நம் அரசியல் வாதிகளிடம் இருந்து இப்படியான பதில் தான் வரும். புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்குதே.. போங்கடா நீங்களும் உங்க அரசியல் சட்டமும்.
Rate this:
Cancel
Subramaniam - Prague,செக் குடியரசு
06-நவ-201302:01:04 IST Report Abuse
Subramaniam நைகீரியர்களை போல் இன்னும் பல இனங்களை குடியேற்றி நாட்டை குட்டிசுவராக்கும் முயற்சியில் சோனியா காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
Rate this:
Cancel
prabhu - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
06-நவ-201300:57:12 IST Report Abuse
prabhu வெளிய போங்கடா அயோக்கியப் பசங்களா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X