சங்கரராமன் கொலை வழக்கு: வரும் 12ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு?

Added : நவ 05, 2013 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கில், விசாரணை முடிவடைந்த நிலையில், வரும், 12ம் தேதி நடக்கும் விசாரணையின் போது, தீர்ப்பு வழங்கும் தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர், சங்கரராமன், 2004ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் விாரணை, 2009 முதல், புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில்,

புதுச்சேரி: சங்கரராமன் கொலை வழக்கில், விசாரணை முடிவடைந்த நிலையில், வரும், 12ம் தேதி நடக்கும் விசாரணையின் போது, தீர்ப்பு வழங்கும் தேதி அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர், சங்கரராமன், 2004ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் விாரணை, 2009 முதல், புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட, 23 பேர் மீது, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரு தரப்பு சாட்சியங்கள், குறுக்கு விசாரணைகள் முடிந்து விட்டன. சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா, வழக்கு தொடர்பான வீடியோ ஆதாரங்களை கேட்டு தாக்கல் செய்திருந்த மனு மட்டுமே, நிலுவையில் இருந்தது. நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது, ஜெயந்திரர், விஜயந்திரர், ரகு, சுந்தரேசன் உள்ளிட்ட, 15 பேர் ஆஜராயினர்; எட்டு பேர் ஆஜராகவில்லை. சங்கரராமன் மகன் ஆனந்த்சர்மாவிடம், "வழக்கு, இறுதி கட்டத்தை நெருங்கி, தீர்ப்பு கூற உள்ள நிலையில், வழக்கு தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரம் உங்களுக்கு வேண்டுமா?' என, நீதிபதி கேட்டார். "நீதியின் மீதும், நீதிமன்றத்தின் மீதும், நம்பிக்கை இருப்பதால், கொலை வழக்கில் தீர்ப்பு வழங்குவதில் எனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை' என, ஆனந்த் சர்மா கூறினார். வழக்கு விசாரணையை, வரும், 12ம் தேதிக்கு ஒத்தி வைத்த, நீதிபதி முருகன், அன்று, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டார். இதையடுத்து, வரும், 12ம் தேதி வழக்கு விசாரணையின் போது, தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என, அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAIRAJ - CHENNAI,இந்தியா
06-நவ-201307:55:41 IST Report Abuse
JAIRAJ கழுதை தேய்ந்து காடேரும்பான கதையாகிவிட்டது. அ...........................முடிந்துவிட்டது.இனி...................? இனியவை தொடரட்டும். இது போலிகளின் காலம் என்பது மட்டும் உறுதி...................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X