தூக்கு தண்டனை விவகாரம்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

Added : நவ 05, 2013
Share
Advertisement
புதுடில்லி: ராஜஸ்தானில், 2003ல் நடந்த, கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கில், விசாரணை கோர்ட்டில், இரண்டு பேருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், ஏ.கே.பட்நாயக், ஞான சுதமிஸ்ரா ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மிகவும், அரிதிலும், அரிதான வழக்குகளில் தான், தூக்கு தண்டனை

புதுடில்லி: ராஜஸ்தானில், 2003ல் நடந்த, கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கில், விசாரணை கோர்ட்டில், இரண்டு பேருக்கு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள், ஏ.கே.பட்நாயக், ஞான சுதமிஸ்ரா ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மிகவும், அரிதிலும், அரிதான வழக்குகளில் தான், தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இவ்வாறு, தூக்கு தண்டனை விதிக்கும்போது, அது, அரிதிலும், அரிதான வழக்கு என்பதை நிரூபிப்பதற்கான காரணத்தை, கீழ்க் கோர்ட்டுகள் தங்கள் தீர்ப்பில் உரிய ஆதாரங்களுடன் குறிப்பிட வேண்டும். குற்றம் மற்றும் குற்றம் செய்தவருக்கு, அதில் உள்ள தொடர்பு ஆகியவை குறித்த, சிறப்பு காரணங்களை, தீர்ப்பில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X