கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கடல் வழியாக அமைக்கும் போது கூவத்தின் மேல் ஏன் மேம்பாலம் கூடாது? துறைமுகம் மதுரவாயல் மேம்பால திட்ட வழக்கில் மூத்த வழக்கறிஞர் வாதம்

Added : நவ 05, 2013 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: "கடல், ஆறு வழியாக மேம்பாலம் அமைக்கும் போது, கூவம் வழியாக ஏன் அமைக்கக் கூடாது,'' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய வழக்கறிஞர் வாதிட்டார். சென்னை, துறைமுகம் மதுரவாயல் மேம்பால திட்டம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை, இம்மாதம், 19ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர், தாக்கல் செய்த மனு: சென்னை

சென்னை: "கடல், ஆறு வழியாக மேம்பாலம் அமைக்கும் போது, கூவம் வழியாக ஏன் அமைக்கக் கூடாது,'' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய வழக்கறிஞர் வாதிட்டார். சென்னை, துறைமுகம் மதுரவாயல் மேம்பால திட்டம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை, இம்மாதம், 19ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர், தாக்கல் செய்த மனு: சென்னை துறைமுகம் மதுரவாயல் மேம்பாலம் அமைக்கும் திட்டம், 2010, செப்டம்பரில் துவங்கியது. 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 19 கி.மீ., தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கும் திட்டம் இது. இந்த ஆண்டு செப்டம்பரில், திட்டம் முடிய வேண்டும். ஆட்சி மாறிய பின், மாநில அரசின் துறைகளில் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இத்திட்டத்தில், மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஜனவரியில், பொதுப்பணித் துறையின் நீர் ஆதார அமைப்பின் தலைமைப் பொறியாளர், ஒரு கடிதம் அனுப்பினார். அதில், "சில பணிகளை மேற்கொள்ள, கடலோர ஒழுங்கு முறை மண்டலத்தின் ஒப்புதலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பெற வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது. உள்நோக்கம் கொண்டு, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கு, மாநில அரசு முட்டுக்கட்டை போடுவது போல் உள்ளது. எனவே, தலைமைப் பொறியாளரின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். மேம்பால திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க, மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் வாதாடியதாவது: இத்திட்டத்துக்காக, 500 கோடி ரூபாய், இதுவரை செலவிடப்பட்டு விட்டது. பெரிய அளவில், தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை, இப்போது நினைவு சின்னங்களாக காட்சியளிக்கின்றன. மதுரவாயல், தாம்பரம் பைபாஸ் சாலையை கடக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளன. இந்த திட்டம், மாநிலத்துக்கானது; பொது மக்களின் நலனுக்கானது; தனிப்பட்டவர்களுக்காக அல்ல. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கடல் வழியாக, ஆறு, ஏரி வழியாக, மேம்பாலம் அமைத்துள்ளது. அப்படி இருக்கும் போது, கூவத்தின் மேல், ஏன் மேம்பாலம் அமைக்கக் கூடாது? பொது நலனுக்காக, இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு, மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதாடினார். சென்னை துறைமுகம் சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மாசிலாமணி வாதாடும் போது, ""மேம்பால திட்டம், எவ்வளவு விரைவில் முடிக்கப்பட வேண்டுமோ, அவ்வளவு விரைவில் முடிவடைய வேண்டும்,'' என்றார். தமிழக அரசு தரப்பில், அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, "" இவ்வழக்கில், அட்வகேட் ஜெனரல் வாதாட இருப்பதால், அவகாசம் வேண்டும்,'' என்றார். இதையடுத்து, இவ்வழக்கின், இறுதி விசாரணையை, இம்மாதம், 19ம் தேதிக்கு, "முதல் பெஞ்ச்' தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan S - Chennai,இந்தியா
06-நவ-201309:26:45 IST Report Abuse
Nagarajan S தமிழகத்தின் நலுனுக்காக குறிப்பாக சென்னை மக்களின் நலனுக்காக போக்கு வரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க துறைமுகம்- மதுரவயல் மேம்பால சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதை காழ்புணர்ச்சி காரணமாக அரசு தடை ஏற்படுத்துவது வேதனை ஏற்படுத்துவதோடல்லாமல், கட்டுமான செலவும் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாகிறது.நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி செயல்படுத்துவதை விட அரசே உடனடியாக இந்த திட்டத்தை அமல் படுத்த முன்வர வேண்டும்.
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394