அடுத்த பிரதமர் காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து வருவதையே மக்கள் விரும்புகின்றனர்:காங்கிரஸ்

Updated : நவ 06, 2013 | Added : நவ 06, 2013 | கருத்துகள் (163)
Advertisement
Country, eager, to have PM, from Gandhi,Nehru ,family, Congress,அடுத்த பிரதமர், காந்தி,நேரு, குடும்பத்தில் இருந்து, வருவதையே, மக்கள், விரும்புகின்றனர்,காங்கிரஸ்

புதுடில்லி : காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவரே நாட்டின் அடுத்த பிரதமராக வர வேண்டும் என நாட்டு மக்கள் அனைவரும் விரும்புவதாகவும், அந்த நாளை எதிர்பார்த்து அவர்கள் ஆவலாக காத்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் தான் என்பதை மறைமுகமாக கூறும் விதமாக காங்கிரஸ் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.


காங்கிரஸ் கருத்து :

பா.ஜ., மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, அவரை முன்னிறுத்தி வரவிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. லோக்சபா தேர்தலில் மோடிக்கு சவால் விடும் விதமாக அவருக்கு போட்டியான காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் உள்ளது. இந்நிலையில், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் பிரதமராக வர வேண்டும் என நாட்டு மக்கள் 1989ம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி சூசகமான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜ் பாபர், காந்தி-நேரு குடும்பத்தில் இருந்தே அடுத்த பிரதமர் வர வேண்டும் என தான் மட்டுமல்ல நாடே விரும்புவதாகவும், அதற்காக மக்கள் அனைவரும் ஆவல் கொண்டு காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


மறைமுக அறிவிப்பு :

ராஜ் பாபரின் இந்த கருத்தின் மூலம், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பது தெளிவாகி உள்ளது. ராஜ் பாபர் தனது பேட்டியில் ராகுல் மற்றும் நரேந்திர மோடியின் செயல்திறன் குறித்து ஒப்பிட்டு பேசி உள்ளது, இதனை உறுதி செய்துள்ளது. மேலும் ராகுலை வாரிசு அரசியல் செய்வதாக மோடி கூறியதற்கு மதசார்பின்மை மற்றும் பிரிவினை வாதத்தை உள்ளடக்கிய கொள்கை கருத்துக்களே காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.


மோடி மீது குற்றச்சாட்டு :

ராஜ் பாபர் தனது பேட்டியில் ராகுல் மற்றும் மோடியை ஒப்பிட்டு கூறியதாவது : மோடியை ஒரு புறமும், ராகுலை ஒரு புறமும் வைத்து ஒப்பிட்டு பாருங்கள்; குஜராத்திற்கு முதல்வராகவும், பா.ஜ.,வின் முக்கிய தலைவராக மட்டுமின்றி பிரதமர் வேட்பாளராக இருக்கும் மோடி பேசும் வார்த்தைகளை பாருங்கள்; மறுபுறம் நாட்டில் ஏழைகளே இருக்கக் கூடாது என்பதை மட்டுமே கொள்கையாக கொண்டு பாடுபடும் ராகுலை பாருங்கள்; ஏழைகளின் கஷ்டங்களை தானும் உணர வேண்டும் என்பதற்காக ராகுல் தினமும் இரவில் வெறும் வயிற்றுடன் தான் தூங்குகிறார்; மக்களின் வறுமை பற்றி கவலை கொள்ளாதவர்கள் ஆட்சி பொறுப்பில் இருக்கும் போது, பசிக்கு எதிராக போராடுபவர் ராகுல். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (163)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samraj - ulaanbaatar ,மங்கோலியா
07-நவ-201313:01:54 IST Report Abuse
samraj பசிக்கிரவங்களுக்கு சாப்பாடு போடாம பல ஆட்சி செய்தபின், காங்கிரஸ் சார்பா இப்பதான் பசிக்கு பயிற்சி எடுக்க ஒருத்தர் முயற்சி பண்ணுரார் னா பதவியில உட்கார்ந்துக்கிட்டு கனவு கண்டீங்களோ?
Rate this:
Share this comment
Cancel
Jegan - chennai,இந்தியா
07-நவ-201312:34:04 IST Report Abuse
Jegan அங்கே ஒரு லட்சத்து அறுபதாயிரம் அமெரிக்க டாலரோடு உல்லாசம், இங்கே இரவில் பட்டினி என்று வெளிவேசம். 160000 x 60 = 96,00,000 Rs உங்கள் கட்சி பிரமுகர்களின் கணக்குப்படி 5 ரூபாக்கு டெல்லியில் ஒருவர் வயிறார உண்ணலாம். அப்படி என்றால் 96,00,000/5 = 19,50,000 பேர் வயிறார உண்ணும் அளவு பணத்தை போஸ்டனில் எதற்காக செலவு செய்தாராம் அவருடைய கொலம்பிய காதலியுடன்?
Rate this:
Share this comment
Cancel
kannan - rak,ஐக்கிய அரபு நாடுகள்
07-நவ-201308:15:37 IST Report Abuse
kannan நேரு குடும்பம் என்பது இந்திரா காந்தியோடு போய்விட்டது , அப்புறம் எங்கே நேரு குடும்பம் வருவது,நாட்டுல 21 கோடி பேர் பட்டிணிகிடப்பதாய் புள்ளி விபரம் சொல்லுது இதுல எங்க ஏழைகள் இல்லாத இந்தியாவ உருவாக்கிறது ,எல்லாம் அரசியல் நாடகம் இவ்வலவு நாளா நீங்க ஆடுனது போதும் இனி புதுசா வரவங்க ஆண்டு பார்க்கட்டுமே நீங்க உங்க போலம்மள நிறுத்துங்க.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X