'குத்து' பட ஸ்டைலில் போட்டுத் தாக்கினார் எம்.பி., ரம்யா

Added : நவ 06, 2013 | கருத்துகள் (4)
Advertisement

மாண்டியா: கிராமத்திற்கு சரிவர குடிநீர் வசதி செய்து தராத, மாவட்ட பொறியாளரை, மாண்டியா தொகுதி, காங்கிரஸ், எம்.பி.,யான, நடிகை, 'குத்து' ரம்யா, 'முட்டாள்' என, அழைத்ததற்கு, அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான, எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவுப் பெண், ரம்யா. தமிழில், 'குத்து' என்ற சினிமா படம் உள்பட, கன்னட படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். மாண்டியா தொகுதி, காங்., - எம்.பி.,யான அவர், நேற்று முன்தினம், தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கனங்குர் என்ற கிராமத்திற்கு அவர் சென்ற போது, அப்பகுதி மக்கள், எம்.பி., ரம்யாவை முற்றுகையிட்டு, தங்கள் கிராமத்திற்கு சரியான குடிநீர் வசதி செய்யப்படவில்லை என, புகார் கூறினார். உடனே, அங்கிருந்த, குடிநீர் வடிகால் வாரியத்தின், மாவட்ட பொறியாளர், அனுமந்தையா என்பவரை தன் அருகில் அழைத்த ரம்யா, குடிநீர் வழங்கப்படாததற்கான காரணத்தை கேட்டார். அதற்கு, அந்த அதிகாரி ஏதோ, பதில் சொல்ல, அதனால் கோபம் கொண்ட ரம்யா, ''முட்டாள். சரிவர தண்ணீர் வழங்க முடியாமல், ஏதோ காரணத்தை கூறி பிதற்றுகிறீர்! ஒழுங்காக தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யுங்கள்,'' என, பொதுமக்கள் முன்னிலையில் திட்டியுள்ளார். இதனால் அந்த அதிகாரி, மிகுந்த மனவேதனை அடைந்தார். பொதுமக்கள் முன்னிலையில், திட்டு வாங்கிய அவருக்கு ஆதரவாக, அரசு ஊழியர்கள் குரல் கொடுத்துள்ளனர். 'எம்.பி., மன்னிப்பு கேட்க வேண்டும்' என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
07-நவ-201308:42:53 IST Report Abuse
M S RAGHUNATHAN SHE IS A TRUE FOLLOWER OF RAHUL.
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
07-நவ-201307:22:25 IST Report Abuse
K.Balasubramanian "முட்டாள் " என்று பொறியாளரை கூறும் அருகதை பார்லிமென்ட் உறுப்பினருக்கு இல்லை . மரியாதைக்குரிய சபாநாயகர் உடன் நடவடிக்கை எடுக்க ஒரு நல்ல சந்தர்ப்பம் .பள்ளிகளில் மானிடர் செய்வது போல் .
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 389