பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகடமியின் இணையதளம் முடக்கம்: வங்கதேச 'ஹேக்கர்'கள் கைவரிசை

Updated : நவ 07, 2013 | Added : நவ 07, 2013 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: அ.தி.மு.க., இணைய தளத்தை தொடர்ந்து, பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகடமியை (ஓ.டி.ஏ.,) சார்ந்த இணையதளங்களை, வங்கதேச, 'ஹேக்கர்'கள் முடக்கியுள்ளனர். தகவல்கள், சேவைகள்: உலகளவில், இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அரசுத் துறைகள், வர்த்தக நிறுவனங்கள் என, பல தரப்பிலும், இணையதளங்கள் உருவாக்கப்பட்டு, தகவல்கள்
Training Academy's website freeze

சென்னை: அ.தி.மு.க., இணைய தளத்தை தொடர்ந்து, பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகடமியை (ஓ.டி.ஏ.,) சார்ந்த இணையதளங்களை, வங்கதேச, 'ஹேக்கர்'கள் முடக்கியுள்ளனர்.


தகவல்கள், சேவைகள்:

உலகளவில், இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அரசுத் துறைகள், வர்த்தக நிறுவனங்கள் என, பல தரப்பிலும், இணையதளங்கள் உருவாக்கப்பட்டு, தகவல்கள் மற்றும் சேவைகள் அனைத்தும், இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன; சில நிறுவனங்கள், முழுக்க முழுக்க இணையதளத்தையே, சேவைக் களமாகப் பயன்படுத்துகின்றன. தற்போது, பல இணைய தளங்கள், சமூக விரோதிகளால் முடக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இணையதளங்களை உருவாக்கும் தொழில்நுட்ப உதவியுடனேயே, அவற்றை முடக்கும் முயற்சியில், 'ஹேக்கர்'கள் ஈடுபடுகின்றனர். கடந்த வாரம், தமிழக ஆளும் கட்சியான, அ.தி.மு.க.,வின் அதிகாரப் பூர்வ இணையதளத்தை, பாகிஸ்தானைச் சேர்ந்த, 'ஹேக்கர்கள் முடக்கினர். இதுகுறித்து, அக்கட்சியின் சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகடமி தொடர்பான, சில இணையதளங்களை, வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர், கடந்த சில தினங்களுக்கு முன் முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 'வங்கதேச எல்லையில், எல்லை பாதுகாப்புப் படையினர் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும்' என, இணைய தளத்தை முடக்கியவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


ராணுவ தொழில்நுட்ப பிரிவினர்:

அதிக பாதுகாப்பு கொண்ட துறையின் கீழ் இயங்கும் இணையதளத்தையே, முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் குறித்த விசாரணை, தற்போது நடந்து வருகிறது. இந்த இணையதளங்கள் அனைத் தும், தேசிய தகவல் மையத்தின் பராமரிப்பின் கீழ் இயங்கி வருவதால், அடுத்த கட்ட நடவடிக்கையில், ராணுவ தொழில்நுட்ப பிரிவினர் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
07-நவ-201308:38:43 IST Report Abuse
Lion Drsekar இதற்குப் பெயர்தான் ராணுவ கூட்டு பயிற்சி. மெத்தப் படித்தது சுத்தப் பயித்தியம் என்பது எல்லோருக்கும் தெரியும் அப்படி இருக்க ஒரு கணினியை மற்றொரு நாட்டிர்க்குச் சென்றால் அங்கு அதைப் பயன்படுத்தலாமா? அப்படி செய்தால் அங்குள்ளவர்கள் அதை நிச்சயம் உள்ளே சென்று நம்முடைய அணைத்து ரகசியங்களையும் அறியமுடியும் என்பது இவர்களுக்க்த் தெரியாதா? மதுவையும் மாதுவையும் பார்த்தல் எல்லாமே மறக்கும் நம்மவர்களுக்கு? வந்தே மாதரம்
Rate this:
Cancel
bskumar012 - singaporr  ( Posted via: Dinamalar Android App )
07-நவ-201308:19:08 IST Report Abuse
bskumar012 இப்ப தான் சிங்கபூரில் நடந்துச்சு
Rate this:
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
07-நவ-201308:12:46 IST Report Abuse
K Sanckar இந்தியா எங்கே செல்கிறது ? என்ற கேள்வி எழுகிறது ?? ஒரு சில விஷமிகளால் அதுவும் தேச துரோகிகளால் இவ்வாறு செயல் பட முடியும் என்றால் ஏதோ சதி நடக்கிறது என்று அர்த்தம். அந்த சதியை முறியடிப்பது நமது அரசின் கடமையாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X