அதிகரிக்கும் மத்திய அரசின் பாரபட்சம்: வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது மோடி அரசு

Updated : நவ 07, 2013 | Added : நவ 07, 2013 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டில் வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கையை குறைத்த பெருமை ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சேரும் என்று கூறிக் கொண்டாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆண்ட காலத்தில் மாநிலங்களுக்கிடையே காட்டும் பாரபட்சம் காரணமாக ஏழை- பணக்காரர் இடையேயான ஏற்றத்தாழ்வு அளவு அதிகரித்துள்ளது. பிசினஸ் ஸ்டாண்டர்ட் ( 06/ 11/ 13 இதழில்) வெளியிட்டுள்ள புள்ளிவிபர
UPA, rule sees, inequality, rising, in 70% states,அதிகரிக்கும், மத்திய அரசின், பாரபட்சம்,வளர்ச்சிக்கு, வழிகாட்டுகிறது, மோடி, அரசு

புதுடில்லி : நாட்டில் வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கையை குறைத்த பெருமை ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை சேரும் என்று கூறிக் கொண்டாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆண்ட காலத்தில் மாநிலங்களுக்கிடையே காட்டும் பாரபட்சம் காரணமாக ஏழை- பணக்காரர் இடையேயான ஏற்றத்தாழ்வு அளவு அதிகரித்துள்ளது. பிசினஸ் ஸ்டாண்டர்ட் ( 06/ 11/ 13 இதழில்) வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையின்படி, 2004-05 மற்றும் 2011-12 ஆகிய ஆண்டுகளில் நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் மத்திய அரசின் பாரபட்ச போக்கால், இந்த விகிதம் சுமார் மூன்றில் 2 பங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.


புள்ளிவிபர அறிக்கை :

2012ம் ஆண்டு மார்ச் மாத இறுதி வரை நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் வறுமைக்கோட்டில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 15.3 சதவீதம் குறைந்து 21.9 சதவீதமாகி உள்ளது. 2004-05 ஆண்டுகளில் வறுமைக் கோட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 37.2 சதவீதமாக இருந்தது. அதேசமயம் இந்த காலங்களில் மத்திய அரசின் பாரபட்சத்தால் கிராமப்புறங்களில் வறுமையில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 0.27 சதவீதத்தில் இருந்து 0.28 சதவீதமாகவும், நகர்புறங்களில் 0.35 சதவீதத்தில் இருந்து 0.37 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. 2011-2012ம் ஆண்டில் ஒரு குடும்பத்திற்கு ஆகும் சராசரி செலவை அடிப்படையாகக் கொண்டு தேசிய மாதிரி ஆய்வு கழகம் எடுத்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நாட்டின் பல மாநிலங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வு நிலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பிசினஸ் ஸ்டாண்டர்ட், அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. புள்ளி விபர அடிப்படையில் ஏழை-பணக்காரர்களிடையேயான இடைவெளி மிக அதிகளவில் உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு விளக்கம் அளித்த திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.ஹசிம், ஏற்றத்தாழ்வு விகிதம் அதிகமாக இருந்தால் நாட்டில் வறுமை எவ்வாறு குறையும் எனவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவதும், ஏழைகள் மேலும் ஏழை ஆவது இயல்பானது எனவும், வறுமையில் இருப்பவர்களை கணக்கிட்டு அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பது மிகவும் சிரமமான விஷயம் எனவம் தெரிவித்துள்ளார்.


மாநிலங்களின் விபரம் :

ஐக்கிய முன்னணி அரசின் பாரபட்சம் காரணமாக ஏழை- பணக்காரர் இடையேயான இடைவெளி, 7 மாநிலங்களின் கிராமப்புறங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் 0.41 சதவீதமும், உ.பி.,யில் 0.40 சதவீதமும், கேரளாவில் 0.39 சதவீதமும், சட்டீஸ்கரில் 0.39 சதவீதமும், அரியானாவில் 0.38 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 0.38 சதவீதமும், டில்லியில் 0.37 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2004-05ல் இந்த ஏற்றத்தாழ்வு அரியானா மற்றும் உ.பி.,யில் குறைவாகவே இருந்துள்ளது. டில்லி, மிசோரம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் நகரம் மற்றும் கிராமங்களில் காரணப்படும் ஏற்றத்தாழ்வுகள் வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையிலான புதிய வளர்ச்சி குறித்த ஆய்வு குழுவால் மிகக் குறைந்த வளர்ச்சி பெற்ற மாநிலம் என தெரிவிக்கப்பட்ட குஜராத்தில் இந்த ஏற்றத்தாழ்வு விகிதம் மிகவும் குறைந்துள்ளது. ஆந்திரா மற்றம் சிக்கிம் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குஜராத்தின் கிராமம் மற்றும் நகர்புறங்களில் ஏற்றத்தாழ்வு இடைவெளி குறைந்துள்ளது. ஒட்டுமொத்த புள்ளிவிபர அடிப்படையில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் வளர்ச்சி அடைகின்றனர். ஆனால் நடுத்தர மக்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு வறுமைக் கோட்டை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.


ஏற்றத்தாழ்வு நிலை :

2011-12ம் ஆண்டில் 29 மாநிலங்களில் மாநிலங்களில் 21 மாநிலங்களில் நகர்புறங்களிலும், 20 கிராமப்புறங்களிலும் ஏற்றத்தாழ்வு அதிகரித்து உள்ளது. இவற்றில் மிக அதிகளவில் ஏற்றத்தாழ்வுடன் மிக மோசமான நிலையில் இருப்பது கர்நாடகத்தின் கிராமப்புறங்களும், கேரளாவின் நகர்புறங்களிலுமே. ஏற்றத்தாழ்வு அளவை வெகுவாக குறைத்து முன்னேற்றம் அடைந்த வரும் மாநிலங்களில் குஜராத்து முதலிடத்தில் உள்ளது. குஜராத், ஆந்திரா, சிக்கிம் ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வு அளவு குறைந்துள்ளது. இம்மாத இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் உள்ளிட்டவைகளுடன் மொத்தம் 14 மாநிலங்களில் கிராமம் மற்றும் நகரங்களில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. பீகார், கோவா, மேகாலயா, பஞ்சாப், தமிழகம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் நகர்புறங்களிலேயே ஏற்றத்தாழ்வு அதிகம் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் சராசரி அளவிலேயே உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanjisanji - Chennai,இந்தியா
07-நவ-201319:36:49 IST Report Abuse
Sanjisanji ஏற்றத்தாழ்வுகளை களைவதாக 60வது ஆண்டுகளாக வாய்கிழிய கத்திவிட்டு இவர்கள் அனைத்துத்துறைகளிலும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி இந்தியாவை உலக அரங்கில் அவமானத்தை உருவாக்கிவிட்டார்கள் . 60 வது மாதத்தில் திரு.மோடியின் தலையாய கடமை உலக அரங்கில் நம்மக்களை தலைநிமிரசெய்வது. ... ஜெய் hind..
Rate this:
Cancel
nagainalluran - Salem,இந்தியா
07-நவ-201319:33:47 IST Report Abuse
nagainalluran ரகுராம் ராஜன் அறிக்கை ஒரு நான்சென்ஸ் என்று முன்னமே சொன்னதாக ஒரு நினைவு சில காங்கிரஸ் மற்றும் சிறுபான்மை அல்லக்கைகள் பெருசாக அதை காட்டி கூவோ கூவு என்று கூவினார்கள். தமிழகம் அதிகம் வளர்ச்சி பெற்றது என்று கூறியும் இந்த அம்மா அதை ஏத்துக்கலை. இப்ப இந்த டுபாகூர் அறிக்கையின் லட்சணம் வழிந்து விட்டது. நல்ல வுட்டான்யா ரீலு. ப சியின் அல்லக்கை ராஜன் ரெசர்வ் வங்கியின் தலைவர் பதவி பெற என்னமா அறிக்கை வுட்டாரு. இப்ப ரீலு அந்து போச்சு
Rate this:
Cancel
Saravanan - Madurai,இந்தியா
07-நவ-201314:43:23 IST Report Abuse
Saravanan பெட்ரோல், டீசல் விலை உயர்வு,, சிலிண்டர் விலை உயர்வு, அதிகரிக்கும் ஊழல் இந்த பெருமை யாரை சேரும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X