ஓட்டு இயந்திரத்தில் தாமரை சின்னத்தை பளீச்சென அச்சடிக்க பாஜ., கோரிக்கை

Updated : நவ 08, 2013 | Added : நவ 08, 2013 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி : மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பா.ஜ.,வின் தாமரை சின்னத்தை பளீச்சென அச்சடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது. தாமரை சின்னத்தை அடர்த்தியாகவும், பளீச்சென தெரியும் வகையிலும் அச்சடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பா.ஜ., கோரிக்கை : ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மற்ற கட்சிகளின் சின்னத்தை
On election, eve,BJP, seeks, bold, new Lotus,Party, approaches, EC,ஓட்டு இயந்திரத்தில், தாமரை, சின்னத்தை, பளீச்சென,அச்சடிக்க பாஜ., கோரிக்கை

புதுடில்லி : மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பா.ஜ.,வின் தாமரை சின்னத்தை பளீச்சென அச்சடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது. தாமரை சின்னத்தை அடர்த்தியாகவும், பளீச்சென தெரியும் வகையிலும் அச்சடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


பா.ஜ., கோரிக்கை :

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மற்ற கட்சிகளின் சின்னத்தை விட பா.ஜ.,வின் தாமரை சின்னம் தெளிவு இல்லாமல் இருப்பதாகவும், இதனால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்க தாமரை சின்னத்தை தெளிவாகவும், பளீச்செனவும் அச்சடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்ள முடிவு செய்ததாக பா.ஜ., மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளர் அமித் ஷாவின் சுட்டிக் காட்டுதலின் பேரில் இந்த குறைபாடு, தேர்தல் ஆணையத்திடம் முன் வைக்கப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் பா.ஜ.,வின் தாமரை சின்னம் மங்கலாக இருப்பதாக கருதுவதாக அமித் ஷா, கட்சி தலைவர்களிடம் கூறியதன் பேரில், தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது.


தேர்தல் ஆணையம் பதில் :

பா.ஜ., பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஏற்ற தேர்தல் ஆணையம், சின்னம் எவ்வாறு இருக்க வேண்டும் என இரண்டு மாதிரி வடிவங்களை தர வேண்டும் எனவும், அதில் ஏதாவது ஒரு வடிவம் தேர்வு செய்யப்பட்டு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் அச்சடிக்கப்படும் என தெரிவித்துள்ளது. தேர்தல் சின்னத்தில் சிறிய அளவில் மாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், தாமரையின் வடிவம் மற்றும் தீம்மில் சிறிய மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும், மற்ற சின்னங்களை விட பா.ஜ.,வின் சின்னம் அடத்தியதாகவும் கண்களை கவரும் வகையில் பளீச்சென இருக்க வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் பா.ஜ., தலைமையிட நிர்வாகி அருண் ஜெயின் தெரிவித்துள்ளார். இடந்த அடத்தியாகவும், பளீச்செனவும் இருக்கும் வகையிலான தாமரை சின்னம் ஓட்டுப்பதிவ இயந்திரத்தில் வரும் தேர்தலிலேயே கொண்ட வரப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பா.ஜ., இரண்டு மாதிரி வடிவங்களை அனுப்பி வைத்ததாகவும், அதில் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போதுள்ள தாமரை வடிவம், தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறை நடைமுறையில் இருந்த போது கைகளால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டதாகும். தற்போது கம்ப்யூட்டரின் மூலம் புதிய தாமரை சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sampath kumar - jeddah,சவுதி அரேபியா
09-நவ-201309:26:32 IST Report Abuse
sampath kumar நான் ஒரு தேச பற்றுள்ள இந்தியன் எனவே மோடி அவர்கள் ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறேன் ..அல்லது வேறு ஒரு இந்தியன் அவர் எந்த மதம் சேர்ந்தவராக இருந்தாலும் பரவா இல்லை ..ஆனால் அவர் ஒரு இந்திய தாயுக்கும் தகப்பனுக்கும் பிறந்தவராக சுத்த இந்தியனாக இருக்கணும் ..இப்படி சொல்ல இந்தியனாக இருக்கும் எனக்கு அருகதையும், உரிமையும் இருப்பதாக நான் எண்ணுகிறேன் ..எதற்கு இந்தியங்க உள்ள எவரும் மாற்று கருத்து சொல்ல மாட்டார்கள் என்றே நம்புகிறேன் ..அபப்டி மாற்று கருத்து சொல்லுபவர்கள் இந்திய தேசத்தை நேசிப்பவர்களாக இல்லாதவர்களாக இருப்பவர்கள் என்றே நான் எண்ணுகிறேன்
Rate this:
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
11-நவ-201317:55:49 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் உண்மையான இந்தியன்னா பணத்துக்காக வெளிநாட்டிலே வேலை பார்க்க போகமாட்டான்..நாட்டுக்ககத்தான் உழைப்பான்....
Rate this:
sampath kumar - jeddah,சவுதி அரேபியா
13-நவ-201310:25:30 IST Report Abuse
sampath kumarஇதை நீங்கள் சொல்லுறீங்கள சுலைமான் ஐயா ..தோஹா நாட்டில் ஒளிந்து கொண்டு ..வெளிநாட்டில் வேலை செய்பவன் அனுப்பும் பணம் வேறு எங்கும் போகல நமது நாட்டுக்கு ..அது எப்படி வளர்ச்சிக்கு உதவும் என்பது கேரளா பார்த்தால் புரியும் ..அப்புறம் மோடி பத்தி நல்லதா சொன்னா உங்களுக்கு ஏப்பா இப்படி எரியுது அதுதான் எனக்கு புரியல .....
Rate this:
Cancel
Thala - pudhuvai ,இந்தியா
09-நவ-201302:16:37 IST Report Abuse
Thala வாழ்க மோடி ஜி
Rate this:
Cancel
Rss - Mumbai,இந்தியா
09-நவ-201301:43:21 IST Report Abuse
Rss மோடி என்றதுமே பலருக்கு வாந்தி பேதி ஆவது ஏன் ??
Rate this:
nallavan - tiruchy,இந்தியா
10-நவ-201306:37:33 IST Report Abuse
nallavanஉடம்புக்கு ஒத்துக்காததை சாப்பிட்டாலும் முகர்ந்தாலும் சிலருக்கு அருவருப்பானதை பார்த்தாலும் வாந்தியும் பேதியும் வருவது சகஜம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X