மாநாட்டில் பிரதமர் பங்கேற்பாரா ? இன்று காங்., உயர்மட்டக்குழு கூடியது

Updated : நவ 08, 2013 | Added : நவ 08, 2013 | கருத்துகள் (28)
Share
Advertisement
Congress core group likely to decide on PM's Colombo visit today,மாநாட்டில் பிரதமர் பங்கேற்பாரா ?  இன்று காங்., உயர்மட்டக்குழு கூடியது

புதுடில்லி: இலங்கையில் வரும் 15ம் தேதி காமன்வெல்த் மாநாடு நடக்கிறது. இதில் இந்தியா தரப்பில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க தமிழகத்தில் காங்., உள்பட அனைத்து கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து உரிய முடிவு எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர், காங்., தலைவர் சோனியா உள்பட மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மாநாட்டில் பிரதமர் பங்கேற்றால் தி.மு.க., தனது ஆதரவை விலக்கி கொள்ளும் என்று கூறியிருக்கிறது. இது தொடர்பாக கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில் ; பிரதமர் மனசாட்சியின்படி நடந்து கொள்ள வேண்டும். பிரதமருக்கு தி.மு.க., எவ்வித நிபந்தனையும் விதிக்கவில்லை. ஆனால் அவர் மாநாட்டிற்கு போக வேண்டாம் என்று மீண்டும் ஒரு முறை அலுத்தி சொல்கிறேன் என்றார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வந்து ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு உரிய முறையில் அணுகாததால் தி.மு.க., மத்திய அரசில் இருந்து தனது அமைச்சர்களை ராஜினாமா செய்தது. ஆனாலும் வெளியில் இருந்த படி காங்கிரஸ் அரசுக்கு தி.மு.க., தற்போது ஆதரவு அளித்து வருகிறது.


பிரிட்டன் பிரதமர் விளக்கம்: காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரிட்டன் பிரதமர் கேமரூன் கூறுகையில்; மாநாட்டில் கேற்றால் இலங்கை மீதான குற்றம் குறித்து பேச வாய்ப்பு உள்ளது. பங்கேற்காமல் போனால் எவ்வாறு பேச முடியும். போர்க்குற்றம் முடிந்த பின்னர் இது தொடர்பாக யாரும் இது வரை பொறுப்பேற்கவில்லை. மாநாட்டில் பங்கேற்பதால் பிரிட்டனில் வாழும் தமிழர்களுக்கு துரோகம் செய்யவதாக பொருள் கொள்ள கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.S.VENKATESAN - Chennai,இந்தியா
09-நவ-201314:03:18 IST Report Abuse
A.S.VENKATESAN ஏங்க சிங்ஜி , போறதா வேண்டாமா என்பதை போய் , இவ்வளவு பிரச்சனை ஆகிட்டீங்களே , போங்க போய்ட்டு வாங்க. ஒரு மனுஷன் இந்த ஒரு கேள்விக்கு கூடவா இப்படி ஜவ்வா இழுத்து நாரடிக்குறது. இல்லே உண்மைலேயே காது கேட்கலியா?
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-நவ-201308:29:09 IST Report Abuse
Srinivasan Kannaiya கருணாநிதி மிரட்டல்களை நீங்கள் கணக்கில் எடுத்து கொள்ள கூடாது.. அவர்களை மிரட்டதான், ராஜா, கனிமொழி, தயாளு போன்ற பிரம்மாஸ்த்திரம் உங்கள் கையில் உள்ளதே..
Rate this:
Cancel
R.Arul - Lusaka,ஜாம்பியா
08-நவ-201320:56:58 IST Report Abuse
R.Arul இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தத்தால் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தி அங்கு தமிழரின் ஆட்சி நடைபெறுகிறது. இது ஒரு சாதனையாக கருதவேண்டும். காங்கிரஸ் கட்சியின் மீது பழி போட்டு, காங்கிரஸ் கட்சிய தமிழர்களிடம் இருந்து விரட்ட செய்யப்படும் அரசியல் சுழ்ச்சியாகவே காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பதை எதிர்க்கும் தமிழக கட்சிகள் பல முயற்சிகிறது என தோணுகிறது.ஆனால் அங்கு வாழும் தமிழர்கள் நலன் பேணவும் பொருளாதார மேம்படடும், நமது பிரதமர் யாழ்பாணத்திற்கு சென்று, அங்குள்ள தமிழர்களை பிரதமர் சந்திக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வாதாரங்களை ஆராய்ந்து, அது மேம்பட, நல்ல தீர்வு காணவும், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளை முக்கியமான செயல்திட்டமாக எடுத்து பேசவேண்டும்.காங்கிரஸ் சுயநலம் இல்லாத கட்சியெனில் இதை நமது தமிழ் மக்களுகாக செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் 2014 MP தேர்தலில் திராவிட கட்சியின் அரசியல் சூட்சியால் ஒரு தொகுதியைகூட பெறமுடியாமல் போகலாம். ஆனால் எதிர்காலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழர்களின் மத்தியிலும் சிங்கள தமிழர்களின் மத்தியிலும் நல்ல மரியாதையை இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X