'தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை': ராகுல் பதில்

Updated : நவ 10, 2013 | Added : நவ 08, 2013 | கருத்துகள் (20)
Advertisement
தேர்தல் நடத்தை விதி, ராகுல்,Rahul, violation

புதுடில்லி : 'ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களில் நடந்த பிரசார கூட்டங்களில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, சர்ச்சைக்குரிய வகையில், நான், எதுவும் பேசவில்லை' என, காங்., துணை தலைவர் ராகுல், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உளவுப்படை:காங்., துணை தலைவர் ராகுல், சமீபத்தில், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த, சட்டசபை தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது அவர், 'உ.பி.,யின் முசாபர் நகர் மாவட்டத்தில், மத கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., தொடர்பு கொண்டு பேசியது' என்றார்.அவரின் இந்த பேச்சு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ., தலைவர்கள், இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனில், புகார் அளித்தனர்.'சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி, மத உணர்வுகளை துாண்டும் வகையில், ராகுல் பேசியுள்ளார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பதில் அளிக்கும்படி, ராகுலுக்கு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. தேர்தல் கமிஷன் விதித்த கெடு முடிவடையும் நிலையில், 'பதில் அளிப்பதற்கு, கூடுதலாக, ஒரு வாரம் அவகாசம் வேண்டும்' என, ராகுல் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு, நான்கு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.


சீலிட்ட உறையில் கடிதம்:

இந்த அவகாசம், முடிவடைவதற்கு, சில மணி நேரங்களுக்கு முன், நேற்று காலை, தேர்தல் கமிஷனுக்கு, ராகுல் தரப்பில், பதில் அனுப்பப்பட்டது. சீலிடப்பட்ட உறையில் வைத்து, அந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில், 'தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில், நான், எதுவும் பேசவில்லை' என, ராகுல் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
09-நவ-201310:42:32 IST Report Abuse
Sundeli Siththar சரி.. ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார் என்று விட்டுவிடலாம்.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
09-நவ-201310:19:15 IST Report Abuse
kumaresan.m " ராகுலை தேர்தல் ஆணையத்தால் என்ன செய்ய முடியும் ??? தேர்தல் ஆணையர்கள் காங்கிரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எப்படி ராகுலின் மீது நடவடிக்கை எடுப்பார்கள் ??? எதிர்கட்சிகளை திருப்தி படுத்த பதில் எப்படி எழுத வேண்டும் என்று கூட ராகுலுக்கு யோசனை கொடுத்து இருப்பார்கள் யார் கண்டது ???
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
09-நவ-201310:15:09 IST Report Abuse
kumaresan.m " விதி முறையை மீறி பேசவில்லை இது ஒரு பதிலா ??? இதுக்கு ஒரு அஞ்சல் துறை ??? இதுக்கு ஒரு கால அவகாசம் ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X